புத்தாண்டு ராசி பலன் 2026: கடக ராசிக்கு புத்தாண்டில் கிடைக்கும் பலன்கள் என்ன?
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் கடகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
கடகம் (Kadagam new year rasi palan):
கடக ராசிக்கு மே மாதம் வரை குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். மே மாதத்திற்குப் பிறகு ராசிக்கு ஜென்ம குருவாக வருகிறார். 2 ஆம் இடத்தில் கேது உள்ளது, 8 ஆம் இடத்தில் ராகு, 9 ஆம் இடத்தில் சனி உள்ளது. வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 9 ஆம் இடத்தில் சனி இருப்பதால் தந்தையின் ஆரோக்கியம், வைத்திய செலவுகள் ஏற்படும்.
செலவுகள் ஏற்படும்
கண்டத்துக்கு நிகரான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வழக்குகளில் சமரசம், வெற்றி வாய்ப்பு ஏற்படும். வழக்குகள் ஏதேனும் இருப்பின் அவை சரியாகும். தனிக்குடித்தனம் செல்வதற்கான வாய்ப்புள்ளது. பூர்வீகச் சொத்துகளில் பாகப் பிரிவினை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதிக பொறுப்புகள் ஏற்படும். நிறைய வேலை செய்வீர்கள். குழந்தை பாக்கியம் ஏற்படும்.
சிகிச்சை
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் வெற்றி அடையும். நண்பர்கள் மூலமாக உதவிகள் ஏற்படும். சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். 2 ஆம் இடத்தில் கேது, அஷ்டமத்தில் சனி இருப்பதால் கவனக் குறைவாக நடந்து செல்லும்போது படிக்கட்டுகளில், வாகனங்களில் இருந்து விழும் வாய்ப்புள்ளது. கடுமையான பொருளாதார சிக்கல், பணச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வாகனங்களில் பழுது
அத்தியாவசியப் பொருள்களில் தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் பழுது போன்றவற்றில் பழுது ஏற்படும். வெளியூர் செல்லும்போது உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. இருதயம், கேஸ்ட்ரிக் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு வேலையை விடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
கவனம்
பூச்சிக்கடி, விஷப் பூச்சிக்கடி போன்ற தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் அதிக பழுது ஏற்படும். உயரதிகாரிகள் உங்களிடம் அதிக வேலையை வாங்கும் சூழ்நிலை வரும் என்பதால் கவனம் தேவை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications