மீன்களை உண்ணாமல் விரதம் இருந்த நாரைக்கு முக்தி கொடுத்த சிவன் - திருவிளையாடல்
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஆவணி மூலம் திருவிழாவை முன்னிட்டு நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடைபெற்றது. முதல்நாளில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த சிவன், இரண்டாம் நாள் நாரைக்கு முக்தி கொடுத்தார். சைவ நாரை சிவனை வணங்கி சிவகணமாக மாறியது. நாரையின் வேண்டுகோளின் படி இன்றைக்கும் பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ தவளைகளோ வசிக்காமல் சுத்தமாக இருக்கிறது.
இறைவனின் 64 திருவிளையாடல்களில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை இறைவன் மீது நாரை கொண்ட அன்பை பற்றி கூறுகிறது. மதுரையின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றி இப்படலம் கூறுகிறது. நாரைக்கு ஏற்பட்ட மனமாற்றம், சொக்கநாதரை நாரை வழிபடுதல், இறைவனார் நாரைக்கு கொடுத்த வரம், பொற்றாமரை குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது. நாரைக்கு முக்தி கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அத்தடாகத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது.
உணவு தேடி பல பகுதிகளுக்கு சென்றது. ஒரு காட்டில் சிவனடியார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தடாகம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது. அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன.
அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த நாரை இதுதான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது. அங்கே துள்ளிக்குதித்த மீன்கள் முனிவர்கள் மீதும் விளையாடின. அதைப்பார்த்த நாரை, அடடா அந்த மீன்களை நான் சாப்பிடக்கூடாதே என்று நினைத்து பட்டினி கிடந்தது.
தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியன் என்ற முனிவர் மதுரையின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். அதைக்கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரிக்கவே காட்டை விட்டு மதுரைக்கு வந்தது.
மதுரையை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. பதினைந்து நாட்கள் வழிபட்ட சைவமாக எதையும் சாப்பிடலாம் இருந்த நாரைக்கு பதினாறாம் நாள் சோதனை காத்திருந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனை கொத்தி சாப்பிடும் ஆசை ஏற்பட்டது.
சொக்கநாதர் தரிசனமே முக்கியம். மீன் தேவையில்லை என்று எண்ணி மனதை மாற்றிக்கொண்ட நாரை 16ஆம் நாளும் பக்தியோடு வழிபட்டது. இறைவன் நாரைக்கு காட்சி கொடுத்தார் சிவபெருமான். நாரையே உன் வேண்டுதல் என்ன என்று கேட்டார். அதற்கு நாரையோ இந்த பிறவியை விட்டு நீங்கி சிவ லோகத்தில் உமக்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டது.
பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ பிற உயிரினங்களோ வசிக்கக் கூடாது. ஏனென்றால் இங்கு வசிக்கும் உயிரினங்களை பிடித்து சாப்பிட்டால் பாவம் வரும் என்றது. இதைக்கேட்ட சிவன் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார்.
உடனே நாரை சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்தது. நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின. பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே நாரைக்கு முக்தி கொடுத்த படலம் கூறும் கருத்து.
இறைவனின் திருவிளையாடல்கள்
இன்றைய தினம் மாணிக்கம் விற்றது, 4 ஆம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தது, 5 ஆம் தேதி உலவாக்கோட்டை அருளியது, 6 ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது, 7 ஆம் தேதி வளையல் விற்றது, இரவு சாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. 8ஆம் தேதி நரியை பரியாக்கியது, 9 ஆம்தேதி பிட்டுக்கு மண் சுமந்தது, 10 ஆம் தேதி விறகு விற்றது, 11 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சட்டதேரில் ஆவணி மூல வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 12 ஆம் தேதி பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications