ஆடி அமாவாசை புனித தலங்கள் தரிசனம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவு பண்ணுங்க
ஆடி அமாவாசையில் ராமேஸ்வரம் சென்று புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர விரும்புபவர்களுக்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யவும், ஆடி அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு சென்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்பவர்களை ஆலயங்களுக்கு புனித யாத்திரை அழைத்து சென்று வருகிறது தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம்.
ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழா களை கட்டும். பெண் பக்தர்களுக்காக தமிழக அரசு அம்மன் தரிசன சுற்றுலாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறது.
மாநில அளவில் பிரசித்திப் பெற்ற 108 அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடி மாதச் சுற்றுலா திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டுப்பாடுகளுடன் தரிசனம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாகவே ஊரடங்கில் உலகமே உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. கொரோனா முதல் அலையின் போதும் இரண்டாவது அலையின் போதும் கோவில்களில் சில மாதங்கள் வரை மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆடி மாத தரிசனம்
தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
ஆடி அமாவாசை நாளில் பக்தர்கள் ராமேஸ்வரம் சென்று புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பார்கள். இதே போல ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யலாம்
ஒருநாள் சக்தி பயணம், ஐந்து நாட்கள் 108 அம்மன் கோவில் பயணம், மூன்று நாட்கள் ஆடி அமாவாசை ஆன்மீக சுற்றுலாவிற்கு முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் www.ttdconline.com என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

சுற்றுலா கட்டணம்
ஒருநாள் சக்திப்பயணத்திற்கு 850 ரூபாய், ஐந்து நாட்கள்அம்மன் கோவில் தரிசனத்திற்கு 12,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறையை பகிர்ந்து கொள்ளும் இருவருக்கு ரூ.9500, குழந்தைக்கு 8000 என அறிவிக்கப்பட்டுள்ளது மூன்று நாட்கள் ஆடி அமாவாசை சுற்றுலாவிற்கு ரூ.6500 எனவும் அறையை பகிர்ந்து கொள்பவர்களுக்கு ரூ.5500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications