For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி கடைசி சனி.. உங்களுக்கு சனி தோஷம் இருக்கா? இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி மாத கடைசி சனிக்கிழமையான இன்றைய தினம் சனி பகவானை நினைத்து வேண்டிக்கொண்டு, காகத்துக்கு உணவிடுங்கள். எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபடுங்கள். சனீஸ்வரரின் கோபப்பார்வையில் இருந்து விலகியிருக்கலாம்.

நவ கிரகங்களில் சனி பகவான் கர்மகாரகன். சனி நீதிமான் என்பதால் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து அதற்கான படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார். சனியால் கிடைக்கும் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் இருக்கும் என்பதால்தான் பலரும் பயப்படுகின்றனர்.

சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இருந்தால் அர்த்தாஷ்டம சனியாகவும் ஏழாம் வீட்டில் இருக்கும் போது கண்டச்சனியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவார். எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது அஷ்டம சனியாகவும் பிரச்சினையை தருவார். விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் படுத்தி எடுத்து பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார்.

பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. மனமார வாழ்த்தி சமூக நீதி சக்தியோடு இணைய கி வீரமணி அழைப்பு! பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. மனமார வாழ்த்தி சமூக நீதி சக்தியோடு இணைய கி வீரமணி அழைப்பு!

சனியால் ஏற்படும் சங்கடம்

சனியால் ஏற்படும் சங்கடம்

சிலருக்கு சனியின் பாதிப்பு பற்றி தெரியாது. நமக்கு ஏழரை நடக்குதோ என்று அவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள். சனிபகவானின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகளை வைத்தே அறிந்து கொள்ளலாம். சனிபகவான் வாகனமான காகம், சனியின் வசிப்பிடங்களாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க நேரிடும் போது சில பாதிப்புகள் ஏற்படும் அதை வைத்தே நமக்கு சனியால் சில சங்கடங்கள் வரப்போகிறது என்பதை அறியலாம். அதற்கான பரிகாரம் செய்தால் போதும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

சனி தரும் படிப்பினைகள்

சனி தரும் படிப்பினைகள்

சனி பகவான் தண்டனை தரக்கூடியவர் அல்ல. படிப்பினைகளை தரக்கூடியவர். நமக்கு சோதனைகளைத் தருவார். தவறு செய்பவர்களின் தலையில் தட்டி வைப்பார் சனிபகவான். ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் நடந்து கொள்பவர்களை சனிபகவான் தலையில் குட்டி வைப்பார். எனவே தவறு செய்பவர்கள்தான் சனிபகவானை நினைத்து பயப்பட வேண்டும்.

சனிதோஷம் அறிகுறிகள்

சனிதோஷம் அறிகுறிகள்

சனியின் பிடியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். லேட்டாக எழுந்திருப்பார்கள். அசுத்தமானவர்களாக இருப்பார்கள். சுத்தமாக இருக்கமாட்டார்கள். பல் கூட விளக்காமல் காபி குடிப்பார்கள். அடிக்கடி விழுந்து எலும்பில் அடிபடுவார்கள். அடிக்கடி வாயில் கல் தட்டப்படும். இவர்கள் எல்லாம் சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள். இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது

சனிபகவானை வழிபடலாம்

சனிபகவானை வழிபடலாம்

சனி தோஷம் இருப்பவர்கள், சனி பகவானை முறையாக வழிபட்டு வந்தாலே போதும். நம்மை நெறிப்படுத்தி, நமக்கு வேண்டியதையெல்லாம் தந்தருள்வார். ஏனெனில் நல்லவர்களுக்கு வேண்டியதைத் தரும் கருணாமூர்த்தி சனிபகவான். சனிக்கிழமை தோறும், எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், சனியின் பிடியில் இருந்தும் சனியின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம். விடுபடலாம்.

காகத்திற்கு உணவிடுங்கள்

காகத்திற்கு உணவிடுங்கள்

சனி பகவானை வணங்கும் போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது என்பார்கள்.சனீஸ்வரரை சற்று பக்கவாட்டில் நின்றபடி, தரிசிப்பதே நல்லது. சனிக்கிழமைகளில், சனி பகவானை நினைத்து வேண்டிக்கொண்டு, காகத்துக்கு உணவிடுங்கள். எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபடுங்கள். சனீஸ்வரரின் கோபப்பார்வையில் இருந்து தப்பிக்கலாம். ஆடி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில், சனீஸ்வரரை வணங்கி வழிபடுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். மறைந்த நம்முடைய முன்னோர்களும் மனம் மகிழ்ச்சியுடன் நம்மை ஆசிர்வதிப்பார்கள்.

நல்லெண்ணெய் குளியல்

நல்லெண்ணெய் குளியல்

சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

வன்னிமரத்தடி விநாயகர்

வன்னிமரத்தடி விநாயகர்

சனி தோஷம் நீங்க விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய தோஷங்கள் நீங்கும் சந்தோஷம் அதிகரிக்கும்.

English summary
Aadi Kadaisi Sanikkilamai: Aadi last saturday ( ஆடி கடைசி சனிக்கிழமை) On this day, the last Saturday of the month of Adi, pray to Lord Shani and feed the crow. Light a sesame lamp and worship Lord Saturn. May have moved away from Saneeswarar's wrath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X