Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு கோலாகலம்....பிள்ளை வரம் கிடைக்க வளையல் வாங்கி கொடுங்க

ஆடிப்பூரம் நாளில் அம்மன் கோவில்களில் வளைகாப்பு விழா நடத்தப்படும். அம்மன் கோவில்களில் வளையல் வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டிலும் திருமணமான தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் ஆலயங்களுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி ஆனந்தப்பட்டால் அகில உலகமே மகிழ்ச்சியடையும் என்பது உண்மைதானே.

ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். இதன் காரணமாகவே ஆடிப்பூரம் நாளில் அம்மன் கோவில்களில் வளைகாப்பு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு வளைகாப்பு விழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது.

கால புருஷனுக்கு ஐந்தாம் ராசியான சிம்ம ராசியில் வரும் சுக்ரனின் நட்சத்திரமான பூரம் அன்னை பார்வதி அவதரித்த நட்சத்திரம் ஆகும். ஆடிமாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த கோதை நாச்சியார் என்ற ஆண்டாளும் பூரத்தின் அதிதேவதையாக அருள்புரிகிறார். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் இந்நாளில், ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. மேலும் இந்த நாளில், தாலிக்கு புதிய மஞ்சள் கயிறு கோர்ப்பது நன்மை அளிக்கும்.

பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர விரதம்

பிள்ளை வரம் தரும் ஆடிப்பூர விரதம்

பூரம் நட்சத்திரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவேதான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நேசித்து அவரையே மணந்தாள். சுக்கிரன் அருள் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், தாம்பத்ய ஒற்றுமைக்கும் காரணம் சுக்கிரனே. எனவேதான் பூரம் நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.

ஆடிப்பூரம் வளைகாப்பு திருவிழா புராண கதை

ஆடிப்பூரம் வளைகாப்பு திருவிழா புராண கதை

பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? அதற்கான புராண கதையைப் பார்க்கலாம்.

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வளையல் வியாபாரி சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார்.

இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.

அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தார் அம்பாள்.

தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

அம்மன் ஆலயங்களில் வளைகாப்பு

அம்மன் ஆலயங்களில் வளைகாப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் இன்று வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா காலமாக இருப்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்க முடியவில்லை. திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர்பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, ஆடிப்பூரம் அன்றைய தினம் கூழ் வார்க்கும் விழா நடைபெறும். ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு இன்று புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

வளையல் வாங்கிக் கொடுங்க

வளையல் வாங்கிக் கொடுங்க

ஆடிப்பூர விரதம் இருந்தால் பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள். ஆடிப்பூரம் தினமான இன்றைய தினம் அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் பெண்கள் தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு பட்டு வஸ்திரம், வளையல் பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+