ஆவணி அமாவாசை..பக்தர்களுக்கு வனத்துறை குட் நியூஸ்.. சதுரகிரி மலைக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
விருதுநகர்: ஆவணி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இன்று முதல் நான்கு நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். ஆடி அமாவாசை, சித்ரா பௌர்ணமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்களில் கூட்டம் அலைமோதும்.
இன்று தேய்பிறை பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. ஆவணி அமாவாசை விழா வரும் 26ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில்,அமாவாசை நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் அலைமோதும். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் இன்று முதல் வரும் 27ஆம் தேதிவரைக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பக்தர்கள் இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஆடி அமாவாசையன்று சாமி தரிசனம் செய்ய 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கனமழை பெய்த காரணத்தால் கோவிலில் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். பின்னர் பாதுகாப்பாக காவல்துறையினர் உதவியிடன் மலையில் இருந்து இறங்கினர்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த மாதம் பவுர்ணமியின் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. நீரோடைகளில் வெள்ளம் சென்ற காரணத்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் முதல் 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ள பக்தர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அதே நேரத்தில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications