• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐப்பசி மாத ராசி பலன் 2022: 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்கள் வருமாம்!

Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாதங்களில் ஏழாவது மாதம் ஐப்பசி மாதம். இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். காவிரியில் நீராடும் துலாஸ்நானம் என்ற புனித நிகழ்வும் இந்த மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் நிறைந்த ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்கிறார். மிதுன ராசியில் உள்ள செவ்வாய் ஐப்பசி 13 ஆம் தேதி வக்கிரகதி அடைகிறார். 27 ஆம் தேதி மீண்டும் ரிஷபத்திற்கு செல்கிறார். ஒன்பதாம் தேதி புதன் துலாம் ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார். 27 ஆம் தேதி விருச்சிகத்துக்கு மாறுகிறார். குரு மீன ராசியில் இருக்கிறார். சுக்கிரன் ஐப்பசி 1ஆம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார். 25 தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். சனி மகரத்தில் அமர்ந்திருக்கிறார். கேது துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

பரமேஸ்வரனுக்கும் முருகனுக்கும் பெருமை சேர்க்கும் மாதம் ஐப்பசி. இந்து பெருமக்கள் இந்த மாதத்தில் தான் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்கு உரிய ராசி துலாம். காவிரி கரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீரங்க பெருமாளின் அம்சமாக சுக்கிரன் கருதப்படுகிறார். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது மகா புண்ணியம் என்று பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். உலகத்தில் உள்ள புண்ணிய நதிகள் அனைத்தும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் கலப்பதாக ஒரு ஐதீகம். இந்த மாதத்தில் தான் கந்த சஷ்டி கவசம் கூறி கந்தப்பெருமானை பக்தர்கள் வழிபட்டு அருளாசி பெறுகிறார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஐப்பசி மாதத்தில் யாருக்கு யோகங்கள் தேடி வரும் என்று பார்க்கலாம்.

சட்டப்படி ரூ.15,444 போனஸ் வரவேண்டும்.. ஆனால்.. போக்குவரத்து துறை செயலாளருக்கு ஏஐடியுசி கடிதம் சட்டப்படி ரூ.15,444 போனஸ் வரவேண்டும்.. ஆனால்.. போக்குவரத்து துறை செயலாளருக்கு ஏஐடியுசி கடிதம்

மேஷம்

மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்படுமுங்க. நினைத்த காரியத்தை நண்பர்கள் நடத்தி வைப்பாங்க. கல்யாண விஷயங்கள் தள்ளி போகுமுங்க. காதல் கத்திரிக்காய்ன்னு மனச அலைபாய விடாதீங்க. வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்குமுங்க. வெளியூர் பயணங்களால் சில நன்மைகள் உண்டாகுமுங்க. வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீங்க. தொழிலுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை தாண்டி ஜெயிப்பீங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் நல்ல லாபம் கொடுக்குமுங்க. சின்ன சின்ன வியாபாரிகள் அக்கறையாக நடந்து லாபத்தை அதிகரிப்பாங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....

வேலை வாய்ப்பு வீடு தேடி வருமுங்க. தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது உங்க பொறுப்புங்க. அதிகமா கோபப்படாதீங்க. உறவுகளுக்குள்ள இடைவெளிய அதிக படுத்திடுமுங்க. வீட்ல குவா குவா சத்தம் கேட்கும்ங்க. வெளிநாடு போறதுக்கான வாய்ப்பு கிடைக்குமுங்க. நிலத்தில் அதிக முதலீடு செய்வீங்க. எதிர்பாராத பண வரவு உண்டாகுமுங்க ஆடம்பரமா செலவு செய்வீங்க. அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்க. அரசாங்கத்தில் நடக்க வேண்டிய வேலைகள் தாமதம் இல்லாம நடக்குமுங்க. பெரியவர்கள் சந்திப்பால பல நன்மைகள் உண்டாகுமுங்க. ஆலய திருப்பணிகளுக்கு உதவி செய்வீங்க. புத்திசாலித்தனமா வியாபாரத்தை அதிகப்படுத்துவீங்க. திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...

மனைவியை மகிழ்ச்சிப்படுத்த நகை வாங்கி கொடுப்பீங்க. தங்கச்சியின் திருமணத்த எப்படியாவது முடிக்கணும்னு கங்கணம் கட்டி வரன் தேடுவீங்க. வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீங்க. வெளிநாட்டிலிருந்து பொருள்கள் இறக்குமதி பண்ணுவீங்க. குடும்பத்துல சண்டை வராமல் பார்த்துக்கொள்ளுங்க. எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா பேசுறது நிறுத்திக்கங்க. தொழிலுக்கு தக்க சமயத்தில் பண உதவி கிடைக்கும்முங்க. வாகனங்களில் போகும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. வண்டிய பூட்டிட்டு மத்த வேலையை பாருங்க. கவனக்குறைவாக இருந்தால் கஷ்டம் உங்களுக்குத்தாங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் தொழிலை நடத்துவீங்க. மனதுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவீங்க. அது கைகூடிய மகிழ்ச்சியில சந்தோஷத்துல திளைப்பீங்க. நிலையான வருமானம் வர்றதுக்கான ஏற்பாட்டை பண்ணுவீங்க. ஆலய திருப்பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வீங்க. அரசியல்வாதிகளோட பழக்கம் உங்க தொழிலுக்கு உதவியாக இருக்குமுங்க. பங்குச்சந்தை வியாபாரத்தில் கொஞ்சம் கவனத்தை திருப்புங்க. ஆன்லைன் சூதாட்டத்தை ஒதுக்கி வையுங்க. பிள்ளைங்க படிப்புக்கு தேவையான வசதிகளை செஞ்சு கொடுப்பீங்க. பழைய பாக்கிகளை கடுமையா வசூல் பண்ணுவீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...

தொழிலுக்கு எதிரா வரும் பிரச்சனைகள் எல்லாம் வெறும் தூசிங்க. வியாபாரத்தை உயர்த்த இரவு பகல் பாக்காம பாடுபடுவீங்க. அதனால வீட்டுக்கு வர்றது கூட குறைந்து போகும்ங்க. வீடு கட்டி விக்கிற தொழில்ல கவனத்தை செலுத்துங்க. அதனால நல்ல லாபம் பார்ப்பீங்க. தோப்பு குத்தகை உங்களுக்கு நல்லா வருமுங்க. விவசாயத்திலும் வருமானத்தை பெருக்க திட்டம் போடுவீங்க. ஏற்பாடு செய்த திருமணம் ஏதாவது காரணத்தினால் நின்னு போகலாமுங்க. செங்கல் மணல் வியாபாரம் சிறப்பா நடக்குமுங்க. அரசு காண்ட்ராக்ட் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காதுங்க. தனியார் துறையில வேலை பாக்குறவங்க முதலாளிகள் மனசுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...

கடுகடு என்று இருக்கிறது... சுடு சுடுன்னு பேசுறதெல்லாம் வேலைக்காகாதுங்க. பிரியமா பேசி தைரியமா தொழில்ல கவனத்தை செலுத்துங்க. கலைத்துறையில் இருக்கிறவங்க சில சிரமங்களை தாண்டித்தான் பெயர் எடுக்க முடியுங்க. குடும்பத்துல பொறுமையா செயல்படுங்க. இல்லைன்னா புரியாத சண்டை வந்து தெரியாத ஆளு பஞ்சாயத்துக்கு வருவாங்க. கடந்த காலங்களில் தடையாய் இருந்த முக்கியமான காரியங்கள் சுலபமா நடக்குமுங்க. அரசியல்வாதிகள் சந்திப்பால ஊருக்கு சில நல்ல காரியங்களை செய்வீங்க. குடும்பப் பிரச்சினைகளை எந்த காரணம் கொண்டும் மத்தவங்க கிட்ட சொல்லாதீங்க. அதனால உங்களுக்கு அவமானம் வந்து சேரும்ங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
கோபத்தில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் சாபத்தில் போய் முடியுமுங்கிறது விதி. ஆகவே வீட்டிலும் சரி வெளியிலும் சரி நிதானமாக நடந்து கொள்ளுங்க. வியாபாரத்தில் பொறுப்பும் பொறுமையும் மிக முக்கியமுங்க. ஆர்டர்களை பெறுவதற்காக வெளியூர் செல்லும் பொழுது அலட்சியமாக இருந்தால் கை பணத்தை இழக்க வேண்டி வருமுங்க. பெண்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்குமுங்க. பள்ளிக்கூடத்தில் நடந்த சில பிரச்சனைகளால் நீங்க சமாதானத்துக்கு போவீங்க. எதிர்காலத்தை கருத்துள்ள வச்சு நிலம் வாங்கி போடுவீங்க. தொழிலுக்கு எதிர்ப்பு வரது இயற்கைங்க. உங்க துணிச்சலால் அதை முறியடித்து கடந்து வருவீங்க.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...

மின்சாரத் தட்டுப்பாட்டால் தொழில் உற்பத்தியில் சுணக்கம் உண்டாகுமுங்க. ஜெனரேட்டர் கருவிய பொருத்துவது எதிர்காலத்துக்கு நல்லதுங்க. வியாபாரத்தில் கடுமையான போக்க கையாளாதீங்க. லாபத்துக்காக குறுக்கு வழியில இறங்காதீங்க. சறுக்காலான பலன்களை அது கொடுக்குமுங்க. சொந்தம் சுருத்து ஆதரவு முக்கியமுங்க. அதற்காக பாடுபட்டு பிரிஞ்சு போனவங்கள ஒண்ணா சேப்பீங்க. சின்ன சின்ன வியாபாரிகள் தொழிலுக்கு தகுந்த மாதிரி வருமானத்தை பெருக்கிக் கொள்வாங்க. எதிர்பாராத வகையில சில இடங்களில் இருந்து உதவி கிடைக்குமுங்க. வராத கடன் வந்து சேருமுங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு

தனுசு

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
திட்டம் போட்டு செலவு பண்ணுங்க. தண்ணியில கொட்டின உப்பு மாதிரி கை காசு கரைந்து போகும்ங்க. வியாபாரத்தை நிதானமா நடத்துங்க. தொழில்ல அதிக முதலீடு செய்ய வேண்டாங்க. புதிய கடை திறக்கலாம்ங்க. குடும்பத்துல மங்கள நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. குழந்தை பாக்கியம் உண்டாகி சந்தோசம் நிலவுங்க. திருமண நிகழ்ச்சிகளுக்கு ஆயத்தம் செய்வீங்க. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வங்கியில பணம் போடுவீங்க. ஏற்கனவே இருந்த வேண்டுதல நிறைவேத்துறதுக்காக குலதெய்வம் கோயிலுக்கு பொங்க வைச்சு சாமி கும்பிடுவீங்க. படிச்ச இளம் தம்பதிங்க கருத்து வேறுபாட்டால் பிரிஞ்சு போற நிலை உருவாகும்ங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
கூடி வாழ்ந்தால் கோடி நன்மைன்னு உணர்ந்து சொந்தங்களோட வாழ ஆசைப்படுவீங்க. உணவுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்ங்க. இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் சிறப்பாக நடக்கும்முங்க. நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சிரத்தையா ஈடுபடுங்க. அதன் மூலமா பெரிய வருமானம் பார்த்து புதிய வீடு கட்டுவீங்க. எதிர்ப்புகளை தாண்டி தொழிலில் முதலீடு செய்வீங்க. வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகிப் போகும்முங்க. கடுமையான முயற்சியினால் அரசாங்க வேலை கிடைக்கும்முங்க. ஆன்மீகப் பெரியவர்கங்க சந்திப்பால குடும்பத்தில் மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...

தந்தையார் மூலமாக கிடைக்க வேண்டிய சொத்தில் நீடித்த இழுபறி நிலை விலகி பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்முங்க. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி போடுங்க. இல்லைன்னா வில்லங்கம் வந்து சேரும்முங்க.பிள்ளைகளுடைய நடவடிக்கைகளை அணுக்கமா கவனிங்க. சில நேரங்கள்ல அவங்களால சிக்கல்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் வரலாம்முங்க. வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த பலன் சுமாரா கிடைக்கும்முங்க. அலைச்சல் அதிகமாகி உடம்பு சோர்வாக இருக்கும்முங்க. ஆன்லைன் வர்த்தகம், கமிஷன், பங்குச்சந்தை இதுல நிதானத்தோடு செயல்படுங்க. லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டுங்க. ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.

மீனம்

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
நீங்க சிலருக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறீங்க. ஆனா அவங்க அதை புரிஞ்சிக்க மாட்டாங்க. அதோட நீங்க செய்ற காரியத்துக்குள்ள மரியாதையும் உங்களுக்கு கிடைக்காதுங்க. அடுத்தவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது தப்புங்க. வாக்கு கொடுத்தா கண்டிப்பா நிறைவேத்தனும்முங்க. இரும்பு மணல் சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல லாபத்தை கொடுக்கும்முங்க. கல்யாண நிகழ்ச்சி கை கூடி வந்து சுபச் செலவுகள் உங்களை சிரமப்படுத்துங்முங்க. மாணவர்கள் புத்திசாலித்தனமாக படித்து பெத்தவங்களுக்கு பெருமை சேர்ப்பாங்க. வீட்ல இருந்த மனக்கசப்பு விலகுமுங்க. வாகனப் பிராப்தி ஏற்படும்முங்க. அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

English summary
Aippasi month Rasi Palan 2022: Aippasi Matha Rasi Palan From October 18,2022 to November 16,2022 prediction for Mesham,Rishapam, mithunam, kadagam, Simmam, kanni, thulam, Viruchigam, dhanusu, makaram, kumbam and Meenam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X