ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்
ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நவ கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும்
சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்றும் அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் புதன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி கேது என அமர்ந்துள்ளது. ஐப்பசி ஆறாம் தேதி விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் வக்ரகதியில் செல்கிறார். 11ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 18ஆம் தேதி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் தனுசு மற்றும் மகரம் ராசிகாரர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலாம் ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஐப்பசி மாதம் குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது, தீபாவளி, கந்த சஷ்டி, முதல் சனி பிரதோஷம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மகாலட்சுமி குபேர லட்சுமி பூஜை பண்றோம் ஐஸ்வர்யம் தரும் மாதம் ஐப்பசி மாதம்
தனுசு ராசிக்கு இத்தனை மாத காலமாக கசப்பான அனுபவங்களே இருந்தது. துலாம் மாதம் கொஞ்சம் கசப்பான மாதம் காரணம் சூரியன் 11ஆம் வீட்டில் நீசம் ஆகிவிடுகிறார். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரனுக்கும் உங்க ராசிக்கும் பகை என்றாலும் இந்த மாதம் நல்லதே பண்ணுவார். மாணவர்களுக்கு நல்லதே நடக்கும். கணவன் மனைவி கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க ராசியில் உள்ள சனி கேதுவை ராகு பார்க்கிறார். வாக்குவாதங்கள் வேண்டாம்.
கோச்சார கிரகங்களின் பலனால் மாணவர்களுக்கு சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும் 10ல் செவ்வாய் அதை சனி பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கும். பணவரவு, கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி கடனை அடைக்காதீங்க. தனுசு ராசிக்கு குரு வரும் காலத்தில் நல்லது நடக்கும், ஆடம்பரம் வேண்டாம். கணவன் மனைவி குடும்ப பிரச்சினையில் கவனமாக இருங்க.
தனுசு ராசிக்கு ஏழில் ராகு இருப்பதால் உங்க வீட்டையும் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக்கங்க. இல்லாட்டி திருடு போயிரும். ஜாக்கிரதையாக இருங்க. இந்த மாத இறுதியில் வேலைகளில் உற்சாகமாக இருப்பீங்கள். வெளிநாடு யோகம் வரும் காரணம் 12 ஆம் வீட்டிற்கு சுக்கிரன் மாறுகிறார். வேலையில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் கவனமாக பாருங்க.
தனுசு ராசிக்கார குழந்தைகளை கண்காணியுங்கள். தனியாக வெளியே அனுப்பாதீங்க. குரு பெயர்ச்சியாகி ராசிக்கு வரும் நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். சந்திராஷ்டமம் காலத்தில் கவனமாக இருங்க. வேலையில் இடம்மாறுதல் வரும். சுப விரைய செலவுகள் ஏற்படும். குடும்ப கஷ்டங்கள் காணாமல் போகும். சனிப்பிரதோசத்தில் சிவ ஆலயம் சென்று நந்தி அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுங்கள்.
ஆறில் ராகு, ஒன்பதில் செவ்வாய் பத்தில் சூரியன், புதன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் குரு விரையத்தில் சனி கேது என இந்த மாத தொடக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏழரை சனியின் தாக்கம் கொஞ்சம் குறையும் காரணம் குரு உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வந்து சனி கேது உடன் இணைகிறார். உங்க ராசி அதிபதி விரைய ஸ்தானத்தில் கேது உடன் இணைந்திருக்கிறார். வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. குரு பெயர்ச்சியால் உங்களுக்கு சுப விரையங்கள் ஏற்படும்.
கடன்களை அடைக்கும் காலம் வருது. காரணம் குரு பார்வை உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் விழுகிறது. குழந்தைகளின் நலனின் அக்கறை தேவை. இது ரொம்ப நன்மை தரும் மாதமில்லை. காரணம் பத்தாம் வீட்டில் சூரியன் நீசமடைவதால் வேலைப்பளு கூடும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். செலவு கட்டுக்கடங்காமல் போகிறதே என்ற கவலை வேண்டாம். உங்க சொத்துக்களை கவனமாக பார்த்துக்கங்க. கணவன் மனைவி உறவில் பிரச்சினையில்லை சந்தோஷமாக உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள்.
வீண் ஆடம்பரம் வேண்டாம். தேவையான செலவுகளை கட்டுப்படுத்துங்கள். யாருக்கும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் மாத இறுதியில் நடக்கும். திருமணம் ஆகாத ஆண் பெண்களுக்கு தசாபுத்திபடி திருமணம் நடக்கும். எதையும் புதிதாக வாங்க வேண்டாம். வண்டி வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாம். இருக்கிற வண்டியை விற்று விட்டு புதிது வாங்க வேண்டாம்.
இந்த மாதம் மருத்துவ செலவுகள் நிறைய வரும் கவனமாக இருங்க. ஆறில் ராகு இருக்கிறார். ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போட வேண்டாம். நீங்க மாட்டிக்குவீங்க. கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் அரசு வேலையில் இருப்பவர்கள் உங்க வேலையை கவனமாக பாருங்க. கண் பிரச்சினை, உளவியல் ரீதியான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்க. திருமணம் முறிந்து போனால் விட்டு விடுங்க. செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வணங்க நல்லது நடக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications