வளர்பிறை பஞ்சமி: ஆஷாட நவராத்திரி நாளில் வாராகியை மனதார வழிபட்டால் கேட்ட வரம் தருவாள்
வாராகி தேவியை அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி வணங்கினால் வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.
சென்னை: வாராகி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் வாராகியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும். வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம்
பாதுகாப்பாம். ஸ்வாஹா
என்ற மந்திரத்தை தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராகி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும் என்பது வாராகி தேவியை வழிபடுபவர்களின் நம்பிக்கை.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
என்ற மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வரம் தரும் வள்ளலாகத் திகழும் அஷ்ட வாராகியின் வடிவங்களையும் அவர்களை வணங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.

வாராகி
சைவம்,வைஷ்ணவம்,சாக்தம் இம்மூன்று சமயங்களிலும் சிறப்பான இடத்தில் மக்களால் வழிபடப்படுவது வாராகியைத்தான். இந்த அன்னை மஞ்சள் பட்டாடை அணிவதை விரும்புபவள். மோளமுகம் கொண்டவள். இவளது திருப்பாதத்தில் நூபுரம் விளங்கும். நான்கு திருக்கரங்களைக் கொண்டவள். சைவ சமய வாராகியின் திருக்கரங்களில் கலப்பை,முசலம்,வரதம்,அபயம் விளங்கும்.கருநிறத்திருமேனியைக் கொண்டவள். படைப்பின் ஆரம்பத்தில் நீரில் மூழ்கிய பூமியை வராக உருவம் ஏற்று மேலே கொண்டு வந்து பூமியைக் காத்த ஸ்ரீவராக மூர்த்தியின் உருவத்தை ஏற்று எதிரிகளைத் துவம்சம் செய்தவள்.

ஸ்ரீவாராகி
இந்த அன்னை சக்தி வாய்ந்தவள். ஒரு முகம்,இருகண்கள், நான்கு திருக்கரங்களைக் கொண்டவள். கருநீல நிற ஆடையை விரும்பி அணிபவள்.கைகளில் கலப்பை,உலக்கை போன்ற ஆயுதங்களைத் தரித்திருப்பாள்.மற்ற இருகரங்களில் அபய வரத முத்திரைகளைக் கொண்டிருப்பாள். இவளின் தலையலங்காரம் கிரீட மகுடம் போன்று இருக்கும். வராகச் சக்கரத்தின் மீது அமர்ந்து எழுந்தருளுவாள். சிம்மவாகனத்திலும் வீற்றிருப்பாள்.
ஸ்ரீவராகி எலும்பின் தேவதை. இவள் கோபம் கொண்டால் நாட்டில் வாத,பித்த நோய்கள் அதிகமாகும்.
மயில் தோகையைக் கொண்டு ஸ்ரீவராகிக்கு விசிறி வேண்டிக் கொண்டு வெள்ளரிக்காயும்,முறுக்கும் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன் பின் நைவேத்தியத்தை பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

பஞ்சமி
அன்னை அராசாலை என்ற வாராகியைப் பற்றி வாராகி கல்பம் என்ற நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
வாராகி கல்பத்தில்,வாராகியின் பெயர்களில் ஒன்று பஞ்சமி ஆகும். ஆனி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அன்னை ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள் அன்னை வாராகி. பஞ்ச கிருத்தியங்களான சிருஷ்டி,ஸ்திதி,சம்காரம்,திரோதானம்,அனுக்கிரகம் என்னும் ஐந்து கிருத்தியங்களில் ஐந்தாவதாக இருக்கும் அனுக்கிரகம் என்ற ஆத்மவித்யையை அருளும் ஆருண்ய ரூபமே பஞ்சமி ஆகும். சதாசிவனின் அனுக்கிரக சக்தியே மகாவாராகி தத்துவம் ஆகும். இதனால் தான் இந்த அன்னைக்கு பஞ்சமி என்ற பெயர் ஏற்பட்டது. பஞ்சமியை இரவு நேரம் வழிபடுவதே சிறப்பு. இன்று வளர்பிறை பஞ்சமி என்பதால் இரவு 11 மணி வரை வழிபட வேண்டும்.

தண்டினி வாராகி
அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் படைத்தலைவியாக இவள் விளங்குகிறாள். இவள் ஆஷாட என்னும் ஆடி மாத நவராத்திரியில் வழிபடப்படுகிறாள். தன் பக்தர்களின் எதிரிகளைத் தண்டித்து அடக்கும் சக்தி கொண்டவள் என்பதால் தண்டினி எனப் பெயர் பெற்றவள். இவள் எதிரிகளைத் தண்டிக்க பயன்படுத்தும் கருவியே தண்டம் ஆகும். இந்த அன்னைக்கு இன்னொரு பெயர் வார்த்தாளி!

ப்ரத்யட்ச வாராகி
கண்முன்னே தோன்றி அருள்புரிபவள் என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் ப்ரத்யட்ச வாராகி என்று அர்த்தம். சில இடங்களில் இந்த அன்னை அருளாட்சி புரிந்துவருகிறாள். யாராவது உங்கள் ஊரில் இந்த அன்னை இருந்தால் தெரிவிக்கவும். தன் பக்தர்களின் மனக்குறையை உடனே போக்கும் அருட்குணம் உடையவள். எல்லாவிதத் தடைகளையும் தகர்த்து நல்வழி காட்டுபவள். இந்த அன்னையின் சன்னதியில் தேங்காயில் நெய்விட்டு தீபம் ஏற்றுவது நல்லது. பஞ்சமி திதியன்று இந்த அன்னைக்கு புது ஆடைகளை அணிவித்து,புது மலர்மாலைகள் அணிவித்து அர்ச்சனை செய்தால் நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். யாருக்கும் தீங்கு நினைக்காமல் இருப்பவர்கள் மட்டுமே இந்த அன்னையை தினமும் வழிபட முடியும். வாராகியின் அருளும் கிடைக்கும்.

அஸ்வாரூட வாராகி
அஸ்வாரூட வாராகி அம்பிகையின் குதிரைப்படைத் தலைவியாவாள். இவள் தனது திருக்கரங்களில் பாசம்,அங்குசம்,பிரம்பு ஆகியவைகளை ஏந்தி மிகவும் கம்பீரமாகக் குதிரை மீது அமர்ந்திருப்பாள். இவளது குதிரையின் பெயர் அபராஜிதா ஆகும். இந்த அன்னையை வணங்கினால் மன அடக்கம்,இந்திரிய அடக்கம் உருவாகும். அகங்காரம், ஆணவம் ஒழிய இந்த அன்னையை வணங்கலாம்.

சம்பத்கரி வாராகி
இந்த வாராகி அம்பிகையின் யானைப்படையின் தலைவி! இவள் அங்குசத்தின் அதிஷ்டான தேவதை ஆவாள். இந்த அங்குசத்தைத் தியானிப்பவர்கள் எதிரிகளை அடக்கும் வல்லமையைப் பெறுவார்கள்.
வாழ்க்கையில் மங்களமான இடத்தைப் பெற இவளை வழிபட வேண்டும். இந்த அன்னையை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையலாம்.

சொப்பன வாராகி
கரிய நீல வண்ணத்திருமேனி உடையவள். மூன்று கண்களும்,பன்றி முகமும் கொண்ட அன்னை வாராகி சந்திரனைத் தலையில் சூடியிருப்பாள். அழகிய குதிரை மீது அமர்ந்து பவனி வருவாள். நல்ல அழகும்,அருளும்,வெற்றியும் உடைய இந்த சிறப்பான பெண் தெய்வத்தை அளவற்ற புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வணங்கிட முடியும். சொப்பன வாராகி வழிபாட்டுமுறை மிகுந்த பாதுகாப்பானது. ஸ்ரீசொப்பன வாராகி நேரில் வரமாட்டாள். நம் கனவில் மட்டுமே வந்து நம் சந்தேகங்களுக்குப் பதில் கூறுவாள். எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பதில் இவளது தாய்மையை உணரலாம். பஞ்சமி திதி நாளான இன்று புதன்கிழமையில், வாராஹி தேவியை மனதாரப் பிரார்த்தனை செய்தால் மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள் அன்னை வாராகி.

வரம் தரும் வள்ளல்
பக்தர்கள் வேண்டுவது எதுவாக இருந்தாலும் அள்ளித் தருவதில் வள்ளல்களின் தலைமைக் கடவுளாகவே திகழுகிறாள் அன்னை வாராகி. இந்த அன்னையின் பக்தர்கள் பணத்திற்கு அடிமையாக மாட்டார்கள். பொன்,பொருள் காட்டி இவர்களை ஏமாற்றிட முடியாது. ஆனால்,அன்புக்கு பணியக்கூடியவர்கள் இவளது அடியவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே விளங்குவர். துன்பம் இவர்கள் இருக்கும் திசையில் கூட எட்டிக்கூடப்பார்க்காது. மனநோயாளிகள் கூட இவர்கள் இருக்கும் பக்கம் வரமாட்டார்கள். வாராகி பக்தர்களுடன் மனதில் எந்த வித தீய எண்ணங்களும் இன்றி அன்புடன் பழகுபவர்களுக்கு மனத் தெளிவும்,வீட்டில் மகிழ்ச்சியும் ஏற்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications