For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை,குமரி மழை வெள்ளத்தில் மிதக்க என்ன காரணம் - ஜோதிடர் நெல்லை வசந்தன் கணிப்பு

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் துலாம் ராசியில் திருநெல்வேலியும் கன்னியாகுமரியும் விழுகிறது கடகம் ராசியில் நாகப்பட்டினம் விழுகிறது இந்த இடங்கள் அதிக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: கடக ராசிக்கு கண்டச்சனி காலமாக இருப்பதால்தான் கனமழை கொட்டி சென்னை, குமரி, டெல்டாவின் கடலோர மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக ஜோதிடர் நெல்லை வசந்தன் கணித்துள்ளார். மகர ராசியில் உள்ள சனிபகவானின் பார்வை கடக ராசியின் மீது விழுவதால் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்து வருவதாகவும் ஜோதிடர் கணித்துள்ளார்.

பெருவெள்ளம், மழை காலங்களை கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பஞ்சாங்கத்தில் கணித்து எழுதுகின்றனர். விருச்சிக ராசியில் சனிபகவான் சஞ்சரித்த போது கூடவே செவ்வாய் இணைந்த நேரத்தில் சென்னையில் மழை பெய்து பெரு வெள்ளம் சூழ்ந்தது.

போலி பணி நியமன ஆணை.. 7 வருடங்களாக பலே மோசடி.. சென்னை தலைமைச் செயலகம் அருகே சிக்கிய நபர் போலி பணி நியமன ஆணை.. 7 வருடங்களாக பலே மோசடி.. சென்னை தலைமைச் செயலகம் அருகே சிக்கிய நபர்

இந்த ஆண்டு சனிபகவான் கோச்சார ரீதியாக மகரத்தில் சஞ்சரிக்கிறார். சனிபகவானின் பார்வை துலாம் ராசியில் உள்ள செவ்வாய் பகவானின் மீது விழுகிறது. மிகப்பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டன. தற்போது பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்கான காரணத்தை ஜோதிட ரீதியாக விளக்கியுள்ளார். நெல்லை வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில், வெள்ள சேதம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சனி பகவான் பார்வை

சனி பகவான் பார்வை

நமது இந்திய நாட்டில் ஜியோ அஸ்ட்ராலஜி படி மிதுனமும் கடகமும் தமிழகத்தில் அமைகிறது. கடகத்தின் பகுதிகள் பெரும்பாலும் கடற்கரை பகுதியில் விழுவதாலும் தற்சமயம் கோச்சார ரீதியாக சனி பகவான் கடக ராசியை பார்வையிடுகிறார் இந்த அமைப்பு கண்டச்சனி ஆகும் கடகம் நண்டையும் மகரம் மானையும் , முதலையும் குறிப்பதாலும் மகர ராசியில் அமர்ந்த சனி பகவான் கடக ஆழியை நோக்குவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் புயலாலும் பெருமழை மழை கொட்டி தீர்த்தது.

வெள்ளத்தால் பாதிப்பு

வெள்ளத்தால் பாதிப்பு

நீரால் சூழ்ந்த தீவு போல் சென்னையும்,அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளங்களும் வறண்ட ஆறுகளே ஜீவநதியாய் காட்சியளிக்கிறது ஏற்கனவே குறிப்பிட்டபடி 23.10.2021 முதல்18.11.2021 வரை இயற்கை சீற்றங்களையும் காணமுடிந்தது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்துகிறேன்.இதுபோன்று ஜியோ அஸ்ட்ராலஜி படி தமிழகத்தை எடுத்துக்கொண்டால் துலாம் ராசியில் திருநெல்வேலி கன்னியாகுமரி விழுகிறது கடகம் ராசியில் நாகப்பட்டினம் விழுகிறது. இந்த இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

கருப்பு பட்டியல்

கருப்பு பட்டியல்

துலாத்தில் உள்ள சூரியனை மகரத்தில் அமர்ந்துள்ள சனி பகவானின் பார்வையால் இந்த இயற்கை சீற்றங்கள் நடைபெற்றது. சூரியன் அதிகாரிகளுக்கு அதிபதியாவதால் துலாத்தில் உள்ள சூரியன் நீச்சனாய் அமர்ந்து, கரியவன் சனி பார்வை செய்வதால் கருப்பு பட்டியல் தயாராகிறது. உடன் புதன் இருப்பதால் புதன் (காண்ட்ராக்டர்) க்கு அதிபதி. செவ்வாய் பூமியை குறிப்பதாலும் ஒப்பந்தகாரர் களையும் பார்வை செய்கிறார். வெள்ளம் முடிந்த உடன் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் கூறியதை குறிப்பிட்டுள்ளார் ஜோதிடர்.

நவகிரகங்களின் இயக்கம்

நவகிரகங்களின் இயக்கம்

செவ்வாய் நிலத்திற்கு அதிபதியாகி சனி வேம்புக்கு அதிபதியாகி சூரியன் மருத்துவமாகி, அமையும்போது நிலவேம்பு கசாயம் இன்றியமையாதது அடுத்து கபத்திற்கு அதிபதி சனி பகவான் ,சளி பிடித்தது சனி பிடித்ததோ என்பார்கள். ஆக கிரகங்கள் இறைவனால் இயக்கப்படும் ஓர் இயந்திரம் என்றும் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் நெல்லை வசந்தன்.

English summary
Astrologer Nellai Vasanthan has predicted that the coastal districts of Chennai, Kumari and Delta will be inundated due to heavy rains due to the Kandachani period of the zodiac. Floods and rainy seasons are predicted in the Almanac by the movement of the planets. Even when Saturn was traveling in the sign of Scorpio, it rained and flooded in Chennai at the time of the conjunction of Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X