சித்ரா பவுர்ணமி : விவசாய நிலத்தில் கரும்பு பந்தல்...மாடுகளுக்கு பூஜை - 104 ஆண்டு பாரம்பரியம்
மதுரை அருகே ஊமச்சிகுளம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான கிடை மாடுகளை விவசாய நிலத்தில் நிறுத்தி பூஜை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது.
மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்ரா பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான கிடை மாடுகளை விவசாய நிலத்தில் நிறுத்தி பூஜை செய்து, வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் கிராம மக்கள்.
104 ஆவது ஆண்டாக நடந்த இந்நிகழ்வில், ஊரின் எல்லையில் விவசாய நிலத்தில் மாடுகள் நிறுத்தப்பட்டன. அவற்றின் முன்பாக கரும்பு பந்தல் அமைக்கப்பட்டு, மாடுகளை மேய்க்கும் கீதாரிகள், அழகுமலையானுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்தனர்.
பின்னர், மாடுகளுக்கும் தீபாராதனை செய்து, சர்க்கரைப் பொங்கலை அவற்றுக்குப் பிரசாதமாகக் கொடுத்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் மாடுகளும், கன்றுகளும் நோயின்றி வளரும். விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

100 கீதாரிகளுக்கு மரியாதை
இந்த நிகழ்வினையொட்டி, மாடுகளை மேய்க்கும் கீதாரிகளை மரியாதை செய்யும் விதமாக, தென்மாவட்டங்களில் உள்ள 100 கீதாரிகளுக்கு வேட்டி, துண்டுகள் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த விழா குறித்துப் பேசிய மாட்டு உரிமையாளர்களில் ஒருவரான டி.சேகர் கூறும்போது, "சுமார் 130 வருடங்களுக்கு முன்பாக, எங்கள் முன்னோரான வே.நாராயண கோனார் என்ற விவசாயி, இப்பகுதியில் பெரும் செல்வந்தராக இருந்தார். நிலம், சொத்து, செல்வாக்கு என வாழ்ந்தவருக்கு குழந்தை இல்லை.

கள்ளழகர் அருள்
ஒரு சித்ரா பவுர்ணமியன்று, முத்துச்சாமியாடி என்னும் பெருமாள் பக்தர், கள்ளழகரை தரிசிக்க இராமநாதபுரத்திலிருந்து வந்திருந்தார். அவர் குறி சொன்னதை கேட்டு கள்ளழகரை வேண்டி, கிடை மாடுகளை நேர்த்திக் கடனாக விட்டுள்ளார் நாராயணக்கோனார். மாடுகள் நேர்ந்து விடப்பட்ட சில மாதங்களிலேயே, அவருக்கு பிள்ளைகள் பிறந்தன.

5 தலைமுறைகாக வழிபாடு
எனவே, ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் அந்த மாடுகளை பூஜிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். அவர் காலத்திற்குப் பிறகு 5 வது தலைமுறையாக நாங்களும் அந்த பாரம்பரியத்தை தொடருகிறோம். அந்த மாடுகளே தற்போது பல்கிப்பெருகி ஆயிரக்கணக்கில் உள்ளன" என்றார்.

இலவசமாக பால்
"கள்ளழகர் கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட இந்த நாட்டு மாடுகள் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு கிடை மாடுகள் ஆக அனுப்பப்படுகின்றன. 'இந்த மாட்டையும், மாடுகளின் பாலையும் விற்க மாட்டோம்'. "குழந்தைக்காக கேட்டு வருவோருக்கு, 'இல்லை' என்று சொல்லாமல் பணம் வாங்காமல் பால் கொடுக்க வேண்டும்" என்பதும் நாங்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்.

வருமானம்
இந்த மாட்டின் மூலமாக கிடைக்கக்கூடிய வருமானம் அனைத்தும் மாடுகளை மேய்க்கும் கீதாரிகளுக்கே சொந்தம். ஒரு பைசா கூட நாங்கள் எடுக்க மாட்டோம். 5 தலைமுறைகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறோம்" என்கிறார் மாட்டு உரிமையாளர் தலைமுறையைச் சேர்ந்த ஜி.நவநீதகிருஷ்ணன்.
நமது கிராமங்கள் பாரம்பரியமாக பல பழக்க வழக்கங்களை தொன்றுதொட்டு பின்பற்றி வருகின்றன. அவற்றுக்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த இந்த நிகழ்வு.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications