தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் இத்தனை நன்மைகளா?
தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது கூட வாத நோயை போக்கும் மூட்டு கை கால் வலிகளை நீக்கும். ஜோதிட ரீதியாக ஆர்த்தடீஸ் ஏன் வருகிறது என்றும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
சென்னை: தீபாவளி திருநாளில், அருணோதய காலத்தில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது கூட வாத நோயை போக்கும் மூட்டு கை கால் வலிகளை நீக்கும். ஜோதிட ரீதியாக ஆர்த்தடீஸ் ஏன் வருகிறது என்றும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணெய் ஸ்நானம் பண்ணக் கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், 'தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும்' என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி. அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், 'தீபாவளி திருநாளில் மட்டும்... எண்ணெயில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும்!' என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய். பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார். எனவே தீபாவளி திருநாளில், அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம். அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6:00 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5:15மணிக்கு நீராட வேண்டும் என்பது விதி.
இன்றைக்கு இளம் வயதினரும் கூட மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். கை கால்களில் விரல்களில் உள்ள மூட்டுக்கள் வீங்கி வலியும் வேதனையும் அடைகின்றனர். நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் வாத நோய் நீங்கும் மூட்டு கை கால் வலிகள் போகும். தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது கூட வாத நோயை போக்கும் மூட்டு கை கால் வலிகளை நீக்கும். ஜோதிட ரீதியாக ஆர்த்தடீஸ் நோய் ஏன் வருகிறது என்றும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

முடக்குவாத நோய்
இன்றைக்கு புதிது புதிதாக நோய்களால் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்வதைப் போல ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் சென்று பரிகாரம் தேடுகின்றனர். ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலைக்கும், நோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. கிரகங்களின் கூட்டணி பார்வை சேர்க்கை நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு பரிகாரம் உள்ளது. மூட்டு வலி எனப்படும் ஆர்த்தடைடீஸ் பாதிப்பு அனைத்து வயதினரையும் தாக்குகிறது. ஆர்த்தடீஸ் எனப்படும் முடக்குவாத நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 12ஆம் தேதி உலக ஆர்த்தடீஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

கை கால்களில் வலி
மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. வீக்கம் கண்ட பகுதி சிவந்தும் வெப்பமாகவும் இருக்கும். மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும். காய்கறிகள் வெட்டும் வேலையைக் கூட செய்ய முடியாது. இதற்குக் காரணம் மரபியல் ரீதியாகவும் உள்ளது.

உணவும் தண்ணீரும்
இன்றைக்கு சாப்பிடும் உணவுகளும் காரணமாக உள்ளன. மூட்டு வீக்கம் அதை சுற்றி சிவப்பு தோன்றுவது ஆர்த்தரடீஸ். மூட்டு தேய்ந்து போவது. மூட்டு வலியைத்தான் கால் வலி என்கின்றனர். இளம் வயதினருக்கு ருமடாய்டு ஆர்த்தரடைடீஸ். இது உணவினால் வருவது. அடிப்படையினால் வருவது நடக்க முடியாமல் போவது கை கால்கள் வீங்கி வலி வருவது கஷ்டப்படுவது ருமடாய்டு ஆர்த்தடைடீஸ். காலையில் எழுந்து வேலை செய்ய முடியாது கொடுமையானது. அம்மாவிற்கு பாட்டிக்கு அதே போல இருந்தால் இந்த நோய்கள் வரும். நாம் சாப்பிடும் உணவு குடிக்கும் தண்ணீர் கூட இதற்கு காரணமாக இருக்கும்.

சனி தரும் நோய்கள்
சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது பாதிப்பை ஏற்படுத்தும். லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது மூட்டுவலியை ஏற்படுத்தும். மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு மூட்டு வலி வரும். எட்டில் புதன் நின்றால் சுவாச கோளாறு, வாயுத்தொல்லை, கை கால் முடக்கவாதம் பாதிப்பு ஏற்படுகிறது.

ஜோதிட ரீதியான காரணம்
ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கு ஜாதகத்தில் மந்தன் எனப்படும் சனீஸ்வரனே காரணம் என்றாலும் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது. எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது.

சனி, செவ்வாய்
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய எலும்போடு தொடர்புடைய கிரகங்கள் லக்னத்தில் நின்று சனியோடு தொடர்பு கொள்ளும்போது வாத நோய் ஏற்படுகிறது. சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது, சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது, சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது வாத நோயை தரும். ஒருவரின் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 6, 8 அல்லது 12 ஆம் வீட்டில் நிற்பது மூட்டுவலியை ஏற்படுத்தும்.

சனி, சுக்கிரன், புதன்
ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை எற்படுத்துகிறது. பத்தாம் வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இணைந்தாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது. எலும்புகளில் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்றாலும் கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இணைவு பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தபடுவது பாதிப்பை ஏற்படுத்தும்.

தன்வந்திரி பூஜை
சூரிய பகவானை தினசரியும் காலையில் வணங்குவது நல்லது. சூரிய நமஸ்காரம் வாத நோய் ஏற்படுவதை தடுக்கும். புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவகிரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு சாப்பிடுவது நல்லது. தன்வந்திரி பகவானை வணங்கலாம். தீபாவளியை முதல்நாள் தன்வந்திரி ஜெயந்தி நாளில் நடைபெறும் அபிஷேகம் யாகங்களில் பங்கேற்கலாம்.

நல்லெண்ணெய் குளியல் நல்லது
சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றலாம். சனிஸ்வரபகவானுக்கு உகந்த சனி கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை குளியல் செய்யலாம். இதில் நல்லெண்ணைய் சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவதால் மூட்டு தேய்மானத்தை குறைக்கிறது. தீபாவளிக்கு நல்லெண்ணெய் தேய்த்து ஊறவைத்து வெந்நீரில் குளிப்பதன் மூலம் வாத நோய்க்கு பரிகாரம் தேடலாம்.












Click it and Unblock the Notifications