பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா : தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் ரத்து
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக தேரோட்டமும், கஜமுக சூரசம்ஹாரமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்பே பல ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கிவிடும். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும். தினசரியும் காலையில் வெள்ளி கேடகத்திலும் இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.

கஜமுகா சூர சம்ஹாரம், தேரோட்டம் நடைபெறும். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து வருவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் தீர்த்தவாரி நடைபெறும். பிற்பகலில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதனையடுத்து பிள்ளையாருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும். அன்றைய தினம் இரவு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள்வார்கள். அதன்பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெறும்.
வருகிற 10ஆம் தேதி வரை நடக்கும் சதுர்த்தி திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வருவார். இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications