For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாக தோஷம் போக்கும் கருட பஞ்சமி விரதம் - பிள்ளை வரம் தரும் கருட ஹோமம்

கருட பஞ்சமி நாளில் விரதம் இருந்தால் நாக தோஷம் நீங்கி வீரமும், விவேகமும் கொண்ட குழந்தைகள் பிறக்கும். புதிதாக திருமணமானவர்கள் இந்த கருட பஞ்சமி விரதத்தை கடைபிடிக்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி விரதமாகும். கருடனை நினைத்து திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் நாக தோஷம் நீங்குவதோடு, கருடனைப் போல புத்திமானாகவும், வீரனாகவும் பிள்ளைகள் பிறப்பார்கள்.

விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானுக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ கருட ஹோமமும், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகமும், நடைபெறுகிறது.

மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் என்ற பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படும் கருட பகவான் கச்யப்பர், விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.

பெரிய திருவடி கருடாழ்வார்

பெரிய திருவடி கருடாழ்வார்

கருடன், மகா பலம் உடையவர். அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் 'பெரிய திருவடி" என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

கருடன் தரிசன சிறப்பு

கருடன் தரிசன சிறப்பு

கருடன்! மங்கள வடிவமானவன். பறவைகளின் அரசன். கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது. கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது. ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவதே தனிச்சிறப்பு ஆகும்.

தன்வந்திரி பீடத்தில் அஷ்டநாக கருடன்

தன்வந்திரி பீடத்தில் அஷ்டநாக கருடன்

பெரிய திருவடி என்று போற்றபடும் ஸ்ரீகருடாழ்வர். ஸ்ரீதன்வந்திரி பகவானை தரிசித்தபடி, 4அடி உயரத்தில் நின்ற கோலத்தில், தம் உடலில் அஷ்ட நாகங்களை தரித்து அவருக்கே உரிய அழகுடன் சிறப்பாக காட்சி தருகிறார். இவர் விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், பஞ்சபக்ஷி தோஷங்கள், சர்ப்ப தோஷங்கள் போன்றவைகளால் ஏற்படும் தடைகளை விலக்கும் விதமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அஷ்ட நாக கருட பகவானாக அருள்பாலிக்கின்றார். இவருக்கு சுவாதி நட்சத்திரத்தில் கருட ஹோமம் செய்து அபிஷேகம் செய்த தேனை பக்ஷி தோஷங்கள் நீங்கவும், வாகன விபத்துகள் ஏற்பட்டவர்கள் விரைவில் குணமாகவும் பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.

கருட ஹோமம்

கருட ஹோமம்

விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானுக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வருகிற 15.08.2018 புதன்கிழமை சுதந்திர தினத்தன்று மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமி, முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஸ்ரீ கருட ஹோமமும், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது.

புற்று நோய் தீர்க்கும் கருட ஹோமம்

புற்று நோய் தீர்க்கும் கருட ஹோமம்

கருட யாகமும் தேன் அபிஷேகமும் பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும், நீண்ட ஆயுள், பணவரவு ஏற்படவும், ஸர்ப்ப தோஷம், ராகு கேது திசா புக்திகளால், ஏற்படும் துன்பங்கள், விபத்து, மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள் சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள் விலகவும், துர் ஆவிகள் பாதிப்புக்களில் இருந்து விலகும், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், தீராதநோய் நீங்கவும், மறுபிறவியற்ற நிலையை அடையவும், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் நவக்கிரக சமித்துக்கள், சீந்தில் கொடி, மிளகு, மருதாணிவிதை, அருகம்புல், ஓமம், வலம்புரி, வசம்பு, கருடகொடி, நல்லெண்ணெய், தேன், நெய், வெண்பட்டு, மோதகம், சேர்க்கப்பட உள்ளது.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி பங்கேற்கலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Garudapanchami will celebrate on August 15th, 2018. Garuda homam and special abiseham at Sri Dhanvanthri arokya peedam in Walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X