குரு பெயர்ச்சி 2020: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்
குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களும் யோகங்களும் கிடைக்கப் போகின்றன.
சென்னை: நவகிரகங்களில் சுப கிரகம் என்று போற்றப்படும் குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ஏழரை சனி, ஜென்ம குரு என கஷ்டத்தை சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் இருந்த குருவும் அதிக பலன்கள் தராமல் போனதற்கு காரணம் சனி, கேது சேர்க்கைத்தான். பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் என்ன பலன், பாதிப்புகள் நீங்க பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல ஆண்டுகாலமாகவே வலி நிறைந்த வாழ்க்கைதான். குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு சென்று நீச்சமடைகிறார். ஏழரை சனியால் பல சிக்கல்களை சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை தரப்போகிறது.
கடந்த ஒரு வருட காலமாக 2ஆம் வீட்டில் இருந்த குரு மூன்றாம் வீட்டிற்கு சென்று நீச்சபங்கமடைகிறார். மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை விருச்சிக ராசிக்கு 7ஆம் இடம், 9ஆம் இடம், லாப ஸ்தானமான 11ஆம் இடங்களின் மீது விழுகிறது.

குரு பலன் வந்து விட்டது
குரு பகவானின் பார்வை உங்க ராசிக்கு ஏழாம் இடத்திற்கு கிடைக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்த சிக்கல்கள் தீரும். காதலர்கள் சிலர் பிரிந்து போயிருப்பார்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. திருமணத்திற்காக
காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பலனால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது.

வியாபாரத்தில் லாபம்
ஒன்பதாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் பொருளாதார சிக்கல்கள் தீரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

சந்தோஷம் அதிகமாகும்
உங்கள் ராசியில் இப்போது கேது சஞ்சரிக்கிறார். நிறைய பேருக்கு பல சோதனைகள் வந்திருக்கும். இனி சாதனைகள் நிகழப்போகிறது. குரு மூன்றாம் வீட்டில் மறைந்தாலும் இது திருப்புமுனைகள் நிறைந்த குரு பெயர்ச்சியாக
அமையப்போகிறது. மன உளைச்சல்கள் நீங்கும். மூன்றில் குரு வந்தாலும் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அம்மா வழி வகையில் அனுகூலம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவுகள் நனவாகும். வேலை, தொழில் மாற்றம் ஏற்படும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்
குரு நீச்சமடைந்தாலும் சனியுடன் இணைவதாலும் வாக்கு பலம் அதிகமாகும். பொறுமையும் நிதானமும் தேவை. கோபப்பத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தில் அமைதி, நிம்மதி சந்தோஷம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். புத்திர காரகம் குரு நீச்சபங்கமடைவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சஷ்டி விரதம் தவறாது இருக்கவும். பிள்ளைகள் சார்ந்த விசயங்களில் கவனம் தேவை.

குருவின் பார்வை பலம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மருத்துவ செலவுகள் விலகும். எதிரிகள் தொல்லை நீங்கும். கடன்கள் அடைபடும். பொருளாதார தடைகள் நீங்கும். ஏழாம் வீட்டில் ராகு இருந்தாலும் குருவின் பார்வை கிடைப்பதால் மன ரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். காதலர்களுக்கு கல்யாண யோகம் வரும். வம்பு வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றவர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தொழில் லாபம் அதிகரிக்கும்
வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். அலுவலகத்தில் இருந்த குடைச்சல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மேல் விழும். செய்யும் தொழிலில் லாபம் வரும். பணம் சேமிக்கும் சூழ்நிலை உருவாகும். குரு பார்வையும் கடவுள் அருளும் சேர்ந்து கிடைப்பதால் இந்த குரு பெயர்ச்சி சங்கடங்களை தீர்த்து சந்தோஷத்தை அதிகரிக்கப் போகிறது. முன் பின் தெரியாத நபர்களுடன் பழகுவதை விட்டு விடுங்கள். அடுத்தவர்களை நம்பி அதிக பண முதலீடு செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி தினத்தில் சென்று வணங்கி வாருங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications