குரு பூர்ணிமா.. பவுர்ணமி யோகம்.. குரு சந்திர யோகத்தால் உச்சத்திற்கு போகும் 4 ராசிக்காரர்கள்
சென்னை: குரு பூர்ணிமா நாளான இன்றைய தினம் பவுர்ணமி யோகத்தை பற்றியும், குரு சந்திர யோகத்தினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் செல்வமும் செல்வாக்கும் தேடி வரும் என்று பார்க்கலாம். குரு பகவான் பார்வை விழும் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கப்போகிறது என்றும் பார்க்கலாம்.
குரு சந்திர யோகம்: ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குரு இருக்கக்கூடிய இடத்திலிருந்து குருவின் பார்வை விழக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலும் இந்த குரு சந்திர யோகம் உண்டாகும். இந்த யோகத்தால் ஒரு கூட்டமே உங்கள் பின் வரக்கூடிய அளவு பிரபலமாகலாம் என்று கூறலாம். குருசந்திரயோகம் உள்ள ஜாதகரின் வாழ்க்கையில் பெரிய துன்பங்கள், துயரங்கள் எதுவும் ஏற்படாது. கல்வியில் சிறந்தவர்களாக திகழ்வார்கள் ஒழுக்கப் பண்புகளும் நிறைந்திருக்கும்.

கஜகேசரி யோகம்: குரு சந்திரன் இணைப்பின் காரணமாக குரு சந்திரன் யோகம் மட்டுமல்லாமல் கஜகேசரி யோகம், சகட யோகம் என மேலும் இரண்டு யோகங்கள் உருவாகின்றன.ஜாதகத்தில் குருவும், சந்திரனும் 1ஆம் இடத்தில் சேர்ந்திருப்பின் அதற்கு குரு சந்திர யோகம் என்று பெயர். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 2ம் இடத்தில் குரு இருப்பின் சகட யோகமாகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 4ம் இடத்தில் குரு இருப்பின் அது கஜகேசரி யோகம் ஆகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 5ம் இடத்தில் குரு இருப்பின் அது குருசந்திர யோகம் ஆகும்.
சகடயோகம்: சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6ம் இடத்தில் குரு இருப்பின் சகடயோகம். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 7ம் இடத்தில் குரு இருப்பின் அது கஜகேசரி யோகம் ஆகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 8ம் இடத்தில் குரு இருப்பின் அது சகட யோகம் ஆகும். குரு இருக்கும் இடத்திலிருந்து 9ம் இடத்தில் சந்திரன் இருப்பின் குரு சந்திர யோகமாகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 10ம் இடத்தில் குரு இருப்பின் அது கஜகேசரி யோகம் ஆகும். சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 12ம் இடத்தில் குரு இருப்பின் சகட யோகம் செயல்படும்.

பௌர்ணமி யோகம்: சந்திரன் பூரண ஒளியோடு இருக்கும் பௌர்ணமி நாளில் பிறந்தவர்கள் அரசாளும் யோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். பௌர்ணமி சந்திரன் தனது வலிமை குன்றாமல், முழு சுபராக இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திர தசை சிறப்பாக அமையும். குரு பூர்ணிமா நாளான இன்றைய தினம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் உள்ள குரு, ராகுவின் பார்வை சந்திரனுக்கு கிடைக்கிறது.
மேஷ ராசிக்காரர்கள் இந்த நாளில் பொறுமையாக இருப்பது நல்லது. உங்களின் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். கோயில்களுக்கு மஞ்சள் நிற ஆடை அணிந்து செல்வது நன்மையை ஏற்படுத்தும்.
மிதுனம்: லாப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் சூரியன் பயணம் செய்ய நேர் எதிரே சந்திரன் பயணம் செய்கிறார்.
குரு பூர்ணிமா தினத்தன்று குரு மந்திரத்தை தியானிப்பது குரு தரிசனம் செய்வது மங்களகரமானதாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்: சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உங்களின் திறமை அதிகரிக்கும்.
வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். குருவின் அருளால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வந்து சேரும்.
தனுசு: உங்கள் ராசியில் சந்திரன் பயணம் செய்யும் இந்த நாளில் சூரியன், புதன், குரு, ராகுவின் பார்வை கிடைக்கிறது. குருவின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கிறது. இந்த நாளில் மகாவிஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபடுவது அற்புதமான யோகத்தை கொடுக்கும். திடீர் ஜாக்பாட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications