• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சள் கயிற்றில் தங்கத் தாலி... நெற்றி வகிட்டில் குங்குமம்... காரணம் தெரியுமா?

|
  மஞ்சள் சரடில் தாலி கோர்த்து அணிவதன் அவசியம்-வீடியோ

  சென்னை: மஞ்சள் சரடில் தாலி கோர்த்து பெண்கள் கழுத்தில் அணிய வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்கவேண்டும். எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் தாலியை மஞ்சள் சரடில் அணிந்தால் அதன் மகிமையே தனிதான் என்கின்றனர்.

  தாலி என்பது ஒரு மங்கலப் பொருள். எனவே அணிகலன்களைப் போல் தினமும் அதைக்கழற்றி வைப்பதும் மறுநாள் எடுத்து அணிந்து கொள்வதும் தவறு. அது எப்பொழுதும் கழுத்திலேயே இருக்க வேண்டும்.

  Hindu Married Women need to wear Thali only made of Turmeric Saradu

  மகாலட்சுமி மிகவும் விரும்பி தங்கும் இடங்களில் தங்கமும் ஒன்று. எனவேதான் பெண்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அணிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். தங்க ஆபரணங்கள் உடலுக்கு ஒரு புனிதத் தன்மையை தருகிறது.

  தங்கமானது தன்னம்பிக்கை உணர்வைத் தரும் சக்தி கொண்டது. நீங்கள் தங்க மோதிரம் அல்லது தங்க சங்கிலி அணிபவராக இருந்தால் நிச்சயமாக சில விஷயங்களில் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்யும் மரபை உண்டாக்கினார்கள்.

  ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்க வேண்டும். தற்சமயம், அந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை. தாலி என்ற பெயரில் தடிமனான தங்கச் சங்கிலி போடப்படுகிறது. நூலில்தான் தாலி கோர்த்து பெண்கள் கழுத்தில் அணிய வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்கவேண்டும். எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் தாலியை மஞ்சள் சரடில் அணிந்தால் அதன் மகிமையே தனிதான் என்கின்றனர்.

  தாலி கோர்க்கப்பட்டுள்ள நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்திநிலைகளைப் பயன்படுத்தி,உருவாக்கப்படுகிறது. அதாவது, ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் அந்த புனிதநூல் இணைக்கிறது.அந்த உறுதியான பிணைப்பு கணவன் – மனைவி இருவருக்கும், ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுத்தது.

  அந்த சக்தி சமநிலையுடன் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது.ஆனால், தற்போது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகிவிட்டது. இவர் தன்னைவிட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, பெண்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்வது அவசியம்.

  காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம்.

  அது போன்ற பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.

  நெற்றி மற்றும் புருவமத்தி மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணர்கிறோம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.நெற்றி மற்றும் புருவமத்தி மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணர்கிறோம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  lok-sabha-home

   
   
   
  English summary
  The thali’s significance begins at a wedding and continues till the end of your life. At the wedding, your groom ties a yellow thread which will be replaced with a golden chain later. Even today in spite of cultural invasions from different unwanted quarters, thali has not lost its value and significance. The thali is a mark of respect, love and dignity.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more