For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்த பரிகாரங்கள் செய்தாலும் பலனளிக்கவில்லையா? குரு உங்க ஜாதகத்தில் எங்கிருக்கிறார் பாருங்கள்!

By Staff
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: தற்போது குருபெயற்சி வரவிருப்பதால் பலரும் குருபெயற்சி பரிகார பூஜைகள் செய்வதில் ஆர்வம் காட்டிவருகி்ன்றனர்.

குருவருளை பற்றிய சிறுகதை:

குரு பக்தி' பற்றி மிகவும் உயர்வாக சொல்லப் பட்டுள்ளது. குரு என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்ய வேண்டியது சீடனின் கடமை. குரு வாக்குக்கு மறுவாக்கு கிடையாது. அப்படியானால், குரு எதையெல்லாம் செய்யச் சொல்கிறாரோ, அதையெல்லாம் சீடன் அப்படியே செய்யத்தான் வேண்டுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "அப்படி செய்ய மாட்டேன' என்று சீடன் சொல்லலாமா? இதற்கு யக்ஞவல்கியர் என்ற மகானின் கதையைச் கேளுங்கள்.

jupiter aspects required for the 5th and 9th houses for any remedies

யக்ஞவல்கியர் என்பவர், தன் மாமாவிடமே யஜுர் வேதம் பயின்று, கங்காதீரத்தில் வேத விசாரம், பிரசங்கம் எல்லாம் செய்து கொண்டிருந்தார். மக்கள் இவருடைய வேத சாஸ்திர ஞானத்தை வெகுவாகப் புகழ்ந்து, பாராட்டினர். தன் சீடன் தன்னை விட பிரபலமாவதைக் கண்ட மாமா (குரு) பொறாமைப்பட்டார். இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.

அந்த ஊர் அரசனுக்கு ஏதோ ஒரு நோய் கண்டது. அரண்மனை வைத்தியர்கள் எல்லாம் வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. யக்ஞவல்கியரின் மாமாதான் அரசனுக்குப் புரோகிதர். அதனால், அரசர், இவரை கூப்பிட்டு, "உங்களுக்குத் தான் மந்திர சாஸ்திரங்கள் தெரியுமே! நீங்கள் இந்த நோய்க்கு ஏதாவது பரிகாரம் செய்யுங்கள்' என்றார்.

இவரும் தினமும் பரிகாரம் செய்து, ஜலத்தை மந்திரித்து ஒரு சீடனிடம் கொடுத்து அனுப்புவார். இப்படி, 364 சீடர்கள் மூலம் தினமும் தீர்த்தம் அனுப்பி னார்; அரசனும் அதைச் சாப்பிட் டான். ஆனாலும் நோய் தீரவில்லை. அரசனுக்கு இவர் மீது மதிப்பும், மந்திர தீர்த்தத்தின் மீது நம்பிக்கையும் குறைந்தது.

கடைசி நாள் யக்ஞவல்கியரை வைத்து மந்திர ஜெபம் செய்து, அந்த தீர்த்தத்தை அவரிடமே கொடுத்து, அரசனுக்கு அளிக்கும்படி சொன்னார். யக்ஞவல்கியரும் அதை அரசனிடம் கொடுக்கப் போனார். இதைக் கண்ட அரசனுக்கு கோபம் வந்தது. "என்ன... தீர்த்தமா? இது வரை, 364 பேர் சாந்தி செய்து, கொடுத்த தீர்த்தத்தால் ஒரு பயனுமில்லை. நீங்கள் கொண்டு வந்து கொடுத்த தீர்த்தத்தால் மட்டும் என்ன பயன் ஏற்படும்? இதைக் கொண்டு போய் குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீட்டுக்குப் போம்...' என்றார். யக்ஞவல்கியருக்கு அவமானமாகி விட்டது. அப்படியே அந்த தீர்த்தத்தை குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீடு வந்து சேர்ந்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. இவர் குதிரை லாயத்தில் தீர்த்தத்தைக் கொட்டியதும், அங்கே இருந்த காய்ந்த மரங்கள் துளிர் விட்டு புஷ்பித்தது. இதைக் கண்ட சேவகர்களும், மந்திரிகளும் அரசனிடம் தெரிவித்தனர்.

இதைக் கேட்டதும், அரசன், தான் யக்ஞவல்கியரையும், தீர்த்தத்தையும் அவமதித்து விட்டதற்காக வருந்தினான். யக்ஞவல்கியரிடம் மந்திரிகளை அனுப்பி, மறுபடியும் சாந்தி தீர்த்தம் கொண்டு வரும்படி செய்தி அனுப்பினான்.

மந்திரிகளும், மாமா (குரு) விடம் விஷயத்தைக் கூறினர். மாமா, யக்ஞவல்கியரை கூப்பிட்டு, அரசனுடைய விருப்பத்தைத் தெரிவித்தார்.

"சாந்தி என்பது ஒரு முறை தான் செய்ய வேண்டும். அதே சாந்தியை மறுபடியும் செய்தால் பயன் தராது. அரசன், முதலில் கொடுத்த தீர்த்தத்தை உதாசீனம் செய்து விட்டான். அவனுக்கு அதிர்ஷ்டமில்லை. நோயால் அவதிப்பட வேண்டும் என்பது அவன் தலை எழுத்து. அதனால், நான் மீண்டும் சாந்தி செய்ய மாட்டேன்' என்றார் யக்ஞவல்கியர்.

இதைக் கேட்ட குருவுக்கு கோபம் வந்தது. "நமக்குப் பணமும், பொருளும் கொடுத்து ஆதரிக்கும் அரசனுக்கு நீ உதவ மாட்டேன் என்கிறாய். அப்படியானால், என்னிடம் கற்ற வேதத்தைத் திருப்பி கொடுத்து விடு...' என்றார். யக்ஞவல்கியரும் இவரிடம் கற்ற வேதத்தை கக்கி விட்டார். அது தீப்பிழம்பாக வெளிவந்தது. வியாசருடைய ஆக்ஞையால் அதை சில பட்சிகள் சாப்பிட்டு விட்டன.

இந்த சரித்திரத்திலிருந்து என்ன தெரிகிறது என்றால்... குரு, பொதுநலம், பிறர் நலம் கருதி தர்மத்தின்படி எதை செய்யச் சொல்கிறாரோ, அதை சீடன் செய்ய வேண்டும். அதே குரு, சுயநலத்துக்காகவும், பணம், பொருளுக்கு ஆசைப்பட்டு, தர்மத்துக்கு விரோதமாக ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னால், அது சாஸ்திர விரோதமாக இருந்தால், சீடன் அதை செய்ய வேண்டியதில்லை. சாஸ்திர சம்பந்தமில்லாத காரியத்தை சுயநலத்துக்காக குரு செய்யவோ, செய்யச் சொல்லவோ கூடாது; சீடன் அதை மறுக்கலாம்.

சரி விஷயத்திற்க்கு வருவோம். மக்கள் தங்கள் கஷ்டங்கள் நீங்க ஜோதிடர்களின் அறிவுரையின் பேரில் பரிகாரங்கள் செய்கின்றனர். அவையெல்லாம் சிலருக்கு பலனளிக்காமல் போகின்றதே? அது எதனால்?

1. வேதியர்கள், அந்தனர்கள், ஜோதிடர்கள் ஆகியவர்கள் குருவின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் ஆவர். அவர்கள் கூறும் பரிகாரங்களை அசிரத்தையுடன் செய்வோர்க்கு பலனளிப்பது இல்லை.

2. வேதியர்களும் அந்தனர்களும் ஜோதிடர்களும் சுயநலம் கருதி பொருள் சேர்க்கையை குறிக்கோளாக கொண்டு கூறும் பரிகாரங்கள் பலனளிப்பது இல்லை

இந்த இரண்டு நிலைகளையும் கடந்து ஒருவருக்கு பரிகாரங்கள், ப்ரார்த்தனைகள் பலனளிக்க ஜாதக அமைப்பு எப்படி இருக்கவேண்டும்?

1. ஜாதகத்தில் குரு அசுப தொடர்புகள் மற்றும் 6/8/12 தொடர்புகள் இன்றி திரிகோணஸ்தானங்களில் நிற்க வேண்டும். ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பு.

2. குரு நவாம்சத்தில் சுய நவாம்சத்தில் பலம்பெற்று நிற்பது.

3. குரு லக்னம், பூர்வ புண்ய ஸ்தானம், பாக்கியஸ்தானம் ஆகிய மூன்றில் இரண்டை பார்ப்பது.

4. குரு அதிக பாகைகள் பெற்று ஆதுமகாரகனாய் நிற்பது.

5. லக்னம், சந்திரன்,குரு, லக்னாதிபதி, பூர்வ புண்யாதிபதி,பாக்யாதிபதி ஆகியோர் குருவின் புசர்பூசம், விசாகம், பூரட்டாதி நக்ஷத்திர சாரத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் ராசி மற்றும் மோக்ஷ திரிகோணங்களில் நிற்பது

6. முக்கியமாக ஜாதகருடைய லக்னாதிபதியும் குருவும் 1/1, 5/9, 3/11, ஆகிய சுபதொடர்பில் நிற்க வேண்டும்.

7. பிரச்சனை தரும் பாவங்களுக்கு கோசார குருவின் பார்வை பெறுவது.

இத்தகைய க்ரஹ அமைப்பை கொண்டிருந்தால்தான் பரிகாரத்தின் பலன் உங்களுக்கு. இல்லையேல் செய்யசொன்னவரின் நலனுக்காக அமையும்.

English summary
Jupiter is also known as Guru or Brihaspati in Vedic astrology. Hindu scriptures confer him with title of Guru of Gods. Guru or Brihaspat is considered to be the most benefic planet as per Hindu astrology. Jupiter is lord of Sagittarius (Dhanu) and Pisces (Meena).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X