விஸ்வரூப அஷ்டநாக கல் கருடன் சிலை பிரதிஷ்டை... பிப்.6ல் 16.8 அடி உயரத்தில் பிரம்மாண்டம்

கருடன் பட்சி ராஜன். பெருமாளின் வாகனம். பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பட்சி ராஜனான கருட பகவானுக்கு உலகில் முதல் தனி ஆலயம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பட்சி ராஜனான கருட பகவானுக்கு உலகில் முதல் தனி ஆலயமாக வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உயர பறக்கும் பெருமாளுக்கு உயரமான ஆலயம் தை மாதம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6.2.2022 காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடன் சிலை பிரதிஷ்டா வைபவம் அரசு வழிகாட்டுதல் படி நடைபெறுகிறது.

கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வவளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

 Kal Garudar Prathishta mahaotsavam 16.8 Garuda statue

ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத் தடை, புத்திர தடை, பூமி தோஷம், வாகனத்தடை, குடும்ப தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும்.

தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவும் பெறலாம். தைரியமும் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் நீங்கி எதிரியற்ற நிலை உருவாகும். கருடனை வணங்கினால் விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்பது நம்பிக்கை.

கருடனை தரிசனம் செய்தால் கூர்மையான அறிவு, கூர்மையான புத்தி, கூர்மையான பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், பண வரவு அதிகரிக்கும், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இத்தகைய பல்வேறு வகையான சிறப்புகள் வாய்ந்த பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பட்சி ராஜனான கருட பகவானுக்கு உலகில் முதல் தனி ஆலயமாக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உயர பறக்கும் பெருமாளுக்கு உயரமான ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

16.8 அடி உயரமும், 4.2 அடி பீடத்துடன் 21 அடி உயரமும் 6.3 அடி அகலமும் சுமார் 20 டன் எடையுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவான் விக்கிரகம் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக் கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை அமைக்க 1 வருட காலம் ஆகியது என்கிறார் ஸ்தபதி அவர்கள்

 Kal Garudar Prathishta mahaotsavam 16.8 Garuda statue

சிலை பிரதிஷ்டை வைபவத்தை முன்னிட்டு வியாழக்கிழமையன்று விநாயகர் தன்வந்திரி ஹோமத்துடன் விழாவிற்கு பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. கருடஹோமமும் அஷ்ட நாக கல் கருடனுக்கு தேன் அபிஷேமும் நடைபெற்றது. 16.8 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா மஹோத்சவம் முன்னிட்டு லஷ்மி கோபாலன் வழிகாட்டுதல் படி பந்தக்கால் முகூர்த்தம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதில் அனந்தலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீனா பெருமாள், செங்காடு ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், தகரகுப்பம் வார்டு உறுப்பினர் வெங்கடேசன், தகரகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குபேந்திரன் குடும்பத்தினர், வாலாஜா முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுமதி கமலகண்ணன், இராணிப்பேட்டை திரு. தேவராஜ் ஆடிட்டர் குடும்பத்தினர், தொழிலதிபர் பிவிஆர் குரூப் ரமேஷ் குடும்பத்தினர், விணுக்குமார் குடும்பத்தினர், பாலாஜி சிங், நித்யன், வாஸ்து திருமால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் மற்றும் தன்வந்திரி கோவில் அருகில் உள்ள மக்கள், பொதுமக்கள், தன்வந்திரி குடும்பத்தினர் முன்னிலையில் மேற்கண்ட வைபவம் நடைபெற்றது.

நேற்றைய தினம் ஏகாதசியை முன்னிட்டு தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இன்றைய தினம் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. நாளைய தினம் ஞாயிறன்று பால் முனீஸ்வரருக்கு பொங்கல் வைத்து பூஜை நடைபெற உள்ளது.

பிப்ரவரி 4ஆம் தேதி முதல் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது. 5ஆம் தேதி கோ பூஜை நடைபெற உள்ளது. 6ஆம் தேதியன்று விஸ்வரூப கல்கருடன் பிரதிஷ்டா வைபவம் நடைபெற உள்ளது.

தை மாதம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6.2.2022 காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள்ளாக 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடன் சிலை பிரதிஷ்டா வைபவம் அரசு வழிகாட்டுதல் படி நடைபெறுகிறது.

சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் எனும 6 மதங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவ லிங்க ரூபமாக 468 சித்தர்களும் அமைந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அமைந்துள்ள ஆரோக்ய பீடத்தில் 88வது திருச்சன்னதியாக விஸ்வரூப அஷ்டநாக கல் கருடன் "ஓம் ஸ்ரீ தன்வந்திரி கருடாய நமஹ" என்ற சக்திமிக்க மந்திரத்தை பக்தர்கள் கைப்பட எழுதிய கோடிக்கணக்கான மந்திரங்களைக் கொண்டு பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவானுக்கு பாரத தேசத்தில் மிகப்பெரிய ஆலயமாக முதல் முதலில் அமையவுள்ளதாக தன்வந்திரி குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+