ஆனி மாத காலாஷ்டமி பைரவர் வழிபாடு: பாவங்கள் போக்கி பொருளாதார வளம் தரும் பகவாதாஷ்டமி
தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்தால் நம் கடன் பிரச்சினை தீரும். இன்றைய தினம் பகவாதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்தால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்
சென்னை: நாம் செய்த பாவங்கள் போகவும், நம்முடைய நிதி நெருக்கடிகள் நீங்கி செல்வ வளம் பெருக தேய்பிறை அஷ்டமி நாளான இன்றைய தினம் பைரவரை வழிபடலாம். இன்றைய தினம் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி பகவாதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் கால பைரவரையும் குரு பகவானையும், சுக்கிரனையும் வணங்க நம்முடைய பாவங்கள் நீங்கும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை மாதம் சனாதன அஷ்டமி, வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி, ஆனி மாதம் பகவதாஷ்டமி, ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதம் சிவா அஷ்டமி, புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி, ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி,காலபைரவாஷ்டமி, மார்கழி மாதம் சங்கராஷ்டமி, தை மாதம் தேவ தேவாஷ்டமி, மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

அஷ்ட பைரவர்கள்
ஆனி தேய்பிறை அஷ்டமியான இன்றைய தினம் கால பைரவரை வழிபட கண் திருஷ்டி, நோய்கள் நீங்கும் தடைகள் விலகும் மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள். அஷ்ட பைரவர்கள் திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிஷபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.

சண்ட பைரவர்
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்
குரோதனபைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரஹ தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோஷ நிவர்த்திக்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான வாராகி விளங்குகிறாள்.

பீஷண பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

கபால பைரவர்
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். புறாவை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோஷ நிவர்த்திற்காக இந்த பைரவரை வணங்குவது உத்தமம். இவருடைய சக்தி வடிவமாக சப்த மாதர்களில் ஒருத்தியான சண்டி தேவி விளங்குகிறாள்.

எண் திசை காக்கும் அஷ்ட பைரவர்
எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களுக்கும் தேய்பிறை அஷ்டமி நாளில் யாகங்கள் நடைபெறுகின்றன. அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகும் பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும். தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும்.

பணம் தரும் சொர்ணாகர்ஷன பைரவர்
ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும். சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அஷ்டமி தினத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
சிவ ஆலயங்களில் முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது. சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான். பைரவருக்கு எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.
பகவாதாஷ்டமி நாளில் காலபைரவரையும் சொர்ண ஆகார்ஷண பைரவரையும் வழிபடுவதுடன் அன்னதானம் செய்வதன் மூலம் கடன் தொல்லை தீரும். எதிரிகள் தொல்லை இனியில்லை. எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது நம்பிக்கையாகும். பைரவரை இன்றைய தினம் வழிபட்டால் பாவங்கள் நீங்கும் செல்வ வளம் பெருகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications