• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விநாயகர் சதுர்த்தி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கண் திருஷ்டி கணபதி யாகம்

|

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 13.09.2018 வியாழக்கிழமை, காலை 10.30 மணியளவில் கண் திருஷ்டியாலும் துஷ்ட சக்திகளாலும் ஏற்படும் நோய்கள் அகல, வினைகள் நீங்க கண் திருஷ்டி கணபதி யாகமும், விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு மக்கள் அதிசயிக்கும் வகையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால், பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இருவரும் ஏக தரிசனத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.

வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் முத்திரை தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் தீவினைகளையும் பிணியையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.

Kan thirusti Mahaganapathy Yagam on Vinayagar chaturthi day

இந்தச் சந்நிதியில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் தினமும் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதிகளுக்கும், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கும், இதர வியாதிகளுக்கும் இந்தத் தைலம் விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவராக இங்கு வீற்றிருக்கிறார். இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடத்தபடுக்கின்றன. இவர் கர்ம வினை நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, கர்ம வினை நீங்கி, உடல் பிணி தீர்ந்து மனநலம் பெற்று வாழலாம்.

Kan thirusti Mahaganapathy Yagam on Vinayagar chaturthi day

மகாசக்தி கணபதி

அகஸ்திய மாமுனிவர் "கண் திருஷ்டி" என்ற அசுரனை அழித்து சம்ஹாரம் செய்யவும், இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வ வல்லமை பொருந்திய மகாசக்தியை தோற்றுவித்தார். அவர்தான் "கண் திருஷ்டி கணபதி" என்ற 33-வது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதியாகும். இவர் சங்கு சக்கரதாரியாக விஷ்ணுவின் அம்சம் கொண்டு, சிவபெருமானின் அம்சமாக மூன்று கண்களையும் அன்னை பராசக்தியின் அம்சமாக கையில் திருசூலம் மற்றும் பல்வேறு தெய்வங்களின் பல ஆயுதங்களையும் ஒருங்கேப்பெற்று, சீறுகின்ற சிம்ம வாகனமும், மூஞ்சூறு வாகனமும் கொண்டவராக விளங்குகிறார். கண் திருஷ்டி கணபதியின் தலையைச் சுற்றிலும், சுழல வைக்கும் ஒன்பது நாகதேவதைகளையும், அக்னிப் பிழம்புகளையும் ஐம்பத்தோரு கண்களையும் தமது அவதார நோக்கத்தின் ஆக்க சக்தியாக இயக்கி இயல்புக்கு மாறாக ருத்ர பார்வையோடு விஸ்வ ரூபமெடுத்த நிலையில் காணப்படுகிறார்.

கண் திருஷ்டி கணபதி யாகம்

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பது பழமொழி. திருஷ்டி என்றால் பார்வை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். கண்களால் இயல்பாகப் பார்க்கப்படுகின்ற பார்வை எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனால் அதே பார்வை தீய எண்ணத்துடனோ அல்லது பொறாமை குணத்துடனோ பார்க்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரையோ அல்லது பொருளையோ நாசப்படுத்தும் வலிமை கொண்டது என்று முன்னோர்கள் காலந்தொட்டு கூறப்பட்டு வருகிறது. இதுபோன்ற "கண் திருஷ்டி" என்ற தீய பார்வையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தோன்றியவர்தான் கண் திருஷ்டி கணபதி.

Kan thirusti Mahaganapathy Yagam on Vinayagar chaturthi day

கண் திருஷ்டிகளால் ஏற்படும் தொல்லைகள்

இன்றைக்கு வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் - மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகளுக்குத் திருஷ்டியும் ஒரு மாபெரும் காரணமாக இருந்து வருவது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.

திருஷ்டியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவருக்கு எதனால் தான் அவஸ்தைப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டால், என்னதான் பரிகாரம் செய்தும், நிவர்த்தி கிடைக்காமல் இருப்பது பெரும் சோகமே! இதன் பின், தொட்ட காரியம் எதுவும் துலங்காது. பொறமைகள் அதிகம் பணத்துக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வாழ்க்கை முழுக்க அவஸ்தைகள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவர் வீடு கட்டி விட்டால், அதைப் பார்த்துப் பலர் பொறாமைப்படுகிறார்கள். ஒருவர் குறுகிய காலத்துக்குள் அதிக சம்பளத்தில் ஒரு வேலையில் அமர்ந்து விட்டால், அதைப் பார்த்து உடன்பிறந்த சொந்தங்கள் உட்பட அக்கம்பக்கமே பொறாமைப்படுகிறது. கணவன் - மனைவி ஜோடியாக - அந்நியோன்னியமாக - சந்தோஷமாக இருந்தால், அதைப் பார்த்தும் பலருக்குப் பொறாமை ஏற்படுகிறது. ஒருவரது வாழ்வில் கூடவே கூடாத குணம் - பொறாமை. இது உறவுகளைப் பிரித்து விடும்.

Kan thirusti Mahaganapathy Yagam on Vinayagar chaturthi day

கண் திருஷ்டி கணபதி யாகத்தில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஏற்படும் கண் திருஷ்டியைப் போக்கி கண் திருஷ்டி கணபதியின் அருளால், வளமான எதிர்காலத்தை பெற்று அன்பும் அமைதியும் தழைத்தோங்கி வினைகளை எல்லாம் அழித்து ஞானம் பெறலாம்.

மேலும் பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள், உயர்வுகள், நல்லநிலைகள் போன்றவற்றை கண்டதும் மற்றவர்களுக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சல் ஏற்படக் கூடும். நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே என்ற ஏக்க பெருமூச்சும், பொருமலும், பொறாமையும் வெடித்து சிதறும். இந்த கெட்ட எண்ணங்களின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வை சக்தி வாய்ந்தது. அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. பல வகைகளில் பாதிப்பை சந்திப்பார்கள். அவர்களுக்கு கண்திருஷ்டி கவனக்குறைவையும், மந்தத்தையும், நினைவாற்றலில் பிரச்சினைகளையும், நோய் நொடிகளையும் திடீரென்று ஏற்படுத்திவிடும்.

திருஷ்டியால் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரியாமலேயே இருக்கும். கண்திருஷ்டியால் ஏற்படும் நோய் நொடிகளுக்கு எந்த மருத்துவமும் சரியாக வேலை செய்யாது. நம்மால் திறமையாக இருக்க முடியவில்லையே என்ற ஒருவிதமான இயலாமை உணர்வின் தாக்கம் கூட திருஷ்டியாக மாறி விடும். இதெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் அனுபவப்பட்டிருப்போம். இவ்வாறு திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னல்கள், இடையூறுகளை சந்திக்குமாறு பல எதிர்வினை சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். வாழ்வில் எல்லாமே எதிர்மாறாக நடைபெறுவதாக தோன்றும். இந்த இன்னல்களை விரட்ட வழிபாடுகளும், பரிகாரங்களும் பல விதங்களில் உள்ளன.

Kan thirusti Mahaganapathy Yagam on Vinayagar chaturthi day

2018 பூசணி துண்டுகளுடன் கண் திருஷ்டி கணபதி யாகம்

இவற்றை மனதில் கொண்டு ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக நலன் கருதி தீமைகள் நீங்கி நன்மைகள் பெற வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கண் திருஷ்டி கணபதி ஹோமம் எலுமிச்சம் பழம், தேங்காய், பூசணிக்காய், ஊமத்தங்காய், கண்டங்கத்திரி, மஞ்சள், குங்குமம், நாயுருவி, வெண்கடுகு, கற்பூரம், கடுகு, உப்பு, எள்ளு, மிளகாய் வற்றல் கொண்டு கண் திருஷ்டி கணபதி யாகமும், விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் பலருக்கும் உள்ள கண் திருஷ்டி தோஷங்கள் களையும் வண்ணம் நடைபெற இருக்கிறது. தேனும், இஞ்சியும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

கண் திருஷ்டி கணபதி யாகத்தில் தேனும், இஞ்சியும் நைவேத்தியமாக படைத்து வருகை புரியும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலமாக தீய சக்திகளிடமிருந்தும், பொறாமை குணம் கொண்டவர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட்டு உடல் ஆரோக்கியம் பெருகி வாழ்வில் வளத்தை பெருகச் செய்வார் கண் திருஷ்டி கணபதி என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தோஷ நிவர்த்தி பூஜை பொதுவாக கண் திருஷ்டி கணபதி ஹோமம் - பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதக ரீதியிலான தோஷங்கள் நீங்குவதற்கும் நடைபெறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும் அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

தன்வந்திரி ஆரோக்கிய பீடம் இப்படிப் பலருக்கும் இருந்து வரும் திருஷ்டிகளையும் நோய்களையும் போக்கும் விதமாக வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 'கண் திருஷ்டி ஹோமத்தை' ஏற்பாடு செய்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான ஹோமங்களை தொடர்ந்து செய்து வரும் இந்த பீடத்தில் நடக்கும் ஒவ்வொரு ஹோமத்துக்கும் உரிய பலன் நிச்சயம் உண்டு. வாலாஜாவையே 'யாக பூமி' யாக மாற்றிய பெருமை ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளுக்கு உண்டு. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம வாசஸ்தல திருஷ்டி தோஷம் நிவர்த்தஸ்ய நிவர்த்தஸ்ய ஸ்வாஹா

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், பூசணிக்காய், அஷ்ட திரவியங்கள், கரும்பு, எலுமிச்சம் பழம், தேங்காய், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் போன்ற பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் மற்றும் விநாயகர் தன்வந்திரி அருள் பெறலாம் தொடர்புக்கு 04172 - 230033, செல் - 9443330203.

 
 
 
English summary
Vinayaga Chathurthi Festival Kan thirusti Mahaganapathy Yagam 13.09.2018 at Danvantri arokyapeedam, walajapet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more