• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கோடி ஜெப மகா யாகம் - மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

|

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து பயன்களையும் பெற சென்ற 19.07.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 100 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் 28.10.2018 காலை நிறைவு பெற்றது.

Kodi Japa Maha Danvantri Homam at Dhanvantri arokya peedam

ஞாயிறு காலை 7.00 மணியளவில் வேத பாராயணம், கோபூஜை, திருப்பள்ளி எழுச்சி, யாகசாலை பூஜை, கலச பூஜை நடைபெற்று மஹா தன்வந்திரி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமத்துடன் 11.30 மணியளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெற்று, கலச புறப்பாடு செய்து ஸ்ரீ தன்வந்திரி மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி மற்றும், சுதர்சனாழ்வாருக்கு பஞ்சசூக்த பாராயணத்துடன் 48 கலசங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

Kodi Japa Maha Danvantri Homam at Dhanvantri arokya peedam

கோடி ஜப தன்வந்திரி யாகத்தின் மூலம் நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தியடையும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் முரளீதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Kodi Japa Maha Danvantri Homam at Dhanvantri arokya peedam

இதில் மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு. எம்.வி முரளிதரன் அவர்கள், திருமதி. முரளிதரன், சென்னை நங்கநல்லூர் 108 சக்திபீட பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள், சித்தஞ்சி தவத்திரு. மோகனானந்த ஸ்வாமிகள், திருவண்ணாமலை சீரடி சாயிபாபா ஆலய நிர்வாகி திரு. சாயி ரவிச்சந்திரன், கொடுமுடி ஆட்சி பீடம் தவத்திரு. ராணியம்மாள், சென்னை தவத்திரு. டாக்டர் கவி முரளிகிருஷ்ணன், சென்னை பெருங்கவிக்கோ சேதுராமன், சினிமா தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக், வாலாஜாபேட்டை டாக்டர் குழந்தைவேல் குடும்பத்தினர், வேலூர் தென்னிந்திய புரோகிதர் சங்க நிர்வாகி திரு. வி.ஆர் சீதாராமன், ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி, லக்ஷ்மி லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆந்திரா, கர்னாடக, கேரள, பாண்டிச்சேரி மாநிலத்தில் சேர்ந்த பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் யாகத்தில் மூலிகைகளை சேர்த்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

Kodi Japa Maha Danvantri Homam at Dhanvantri arokya peedam

இதனை தொடர்ந்து பங்கேற்றவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி புகைப்படவும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் விரைவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா பத்திரிகையை மாண்புமிகு நீதியரசர் வெளியிட மேல்சித்தாமூர் ஜீனகாஞ்சி ஜைன மடாதிபதி திரு. லக்ஷ்மிசேன பட்டாரக்கர அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் விழா இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வேலூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
ஸ்டிரைக் ரேட்
DMK 67%
AIADMK 33%
DMK won 4 times and AIADMK won 2 times since 1971 elections

 
 
 
English summary
Kodi Japa Maha Danvantri Homam 100 days on Sri Danvantri Arokya peedam, Walajapet Vellore District.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more