• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனியால் பாதிப்பா நள சரித்திரம் படிங்க பாதிப்பு நீங்கும்

|

சென்னை : நவகிரகங்களின் சனிபகவான் மெதுவாக நகர்பவர். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிப்பவர். சனீஸ்வரன் என்று சொல்வதை விடவே சனைச்சரன் என்று கூறுவதே பொருத்தமானது. இவர் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான் காரணம் ஒரு ராசிக்காரரை ஏழரை ஆண்டுகாலம் பாடாய் படுத்தி விடுவார். அதிலிருந்து மீண்டு மூச்சு விட்டால் அர்த்தாஷ்டம சனியாகவும், அப்புறம் கண்டச்சனி, அஷ்டமசனியாகவும் அசத்தி எடுத்து விடுவார். எனவேதான் சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீர நாம் நள சரித்திரம் படிக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சனிபகவான் பிடித்தபோது ராமர் வனவாசம் சென்றார். நாடு இழந்து ஒரு சமயம் மனைவியையும் இழந்தார். அதேபோல பாண்டவர்களும் சூதாடி நாடு இழந்து சகோதரர்களுடன் வனவாசம் சென்றார் தர்மராஜா. தாங்கள் பட்ட கஷ்டத்தை கூறி பரத்வாஜா முனிவரிடம் வருந்திய போது சனியால் நளமகாராஜா பட்ட கஷ்டத்தை கூறி அவர்களை ஆறுதல்படுத்தினார்.

சனிபகவான் சூரிய புத்திரன். வாரத்தில் வரும் முதல்நாள் சூரியனுக்கும், கடைசி நாள் சனிக்கும் என்று வகுத்தார்கள். சனிக்கு கருமை உடல். எனவே, காக்கை வாகனம். கறுப்பு வஸ்திரம். கருப்பு தான்யமாக எள். எள் எண்ணெய் அவர் விரும்புவது. நீலக் குவளை மலர், வன்னி இலை, புளு சபையர் என்ற நீலக்கல் என அனைத்தும் சனீஸ்வரனுக்கு பிடித்தமானது. இவருக்கு நீளாதேவி, மந்தாதேவி, சேஷ்டாதேவி என மூன்று மனைவியர். குளிகன் என்றொரு மகன். இவர் இரும்பு, எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்குக் காரகர். அவரவர் கர்மவினைப்படி வறுமை, கலகம், நோய், அவமதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறவர். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல இடத்தில் தங்கி வலுவும் பெற்றிருப்பாரானால் அளவற்ற நலன்களை வாரி வழங்குவார்.

சனிதோஷம்

சனிதோஷம்

சனிபகவான் மகரம், கும்பம் ராசிகளில் அதிபதி. மேஷம் ராசியில் நீசமடையும் சனிபகவான், துலாம் ராசியில் உச்சமடைகிறார். சனிபகவானுக்கு நவகிரக தலங்களில் திருநள்ளாறு பிரசித்தி பெற்றது. நீதி அரசராக கலியுகத்தில் சனி ஆட்சி செய்யும் இடம் இந்த தர்ப்பைக் காடு என்ற திருநள்ளாறு. இங்கே தர்ப்பராண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு திசையில் காக்கை வாகனத்தோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருநள்ளாறு நாயகனை தரிசனம் செய்தால் சனி தோஷத்தால் வந்த நோய், பொருள் விரயம், பேராபத்து, சஞ்சலம், துக்கம், விரக்தி, சோம்பல், தொழில் இடையூறு என அனைத்து சோதனைகளும் நீங்கும்.

நளன் தமயந்தி திருமணம்

நளன் தமயந்தி திருமணம்

நிடத நாட்டை ஆண்ட நளனும் விதர்ப்ப நாட்டு இளவரசியும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதல் கொண்டனர்.இருவரின் காதலுக்கும் அன்னப்பறவை தூது போனது. தமயத்தின் அழகில் தேவர்களும் மயங்கினர். மகளுக்கு திருமணம் செய்ய சுயம்வரம் அறிவித்தார் விதர்ப்ப நாட்டு மன்னன். அந்த சுயம்வரத்தில் பங்கேற்க நளன் சென்றான். கூடவே தேவர்களும் போக, சனிபகவானும் வந்தார். ஆனால் தமயந்தி மாலையிட்டதோ நளனுக்குத்தான்.

நளனை பிடித்த சனி

நளனை பிடித்த சனி

சனிபகவானுக்கு நளன் மீது பொறாமை ஏற்பட்டது. பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்தார். நளனுக்கு ஏழரை சனி பிடிக்கும் காலம் வந்தது. கூடவே புத்தியும் மாறியது. பூஜை செய்ய போகும் போது கால்களை சரியாக கழுவாமல் போனார். அதுதான் சமயம் என்று பின்னங்காலில் பிடித்தார் சனிபகவான். அதுவரை புத்தியோடு இருந்த நளனுக்கு மாறியது புத்தி. புட்கரன் என்ற அரசன் சூதாட அழைத்தான். நளன் சூதாடி நாடு நகரங்களை தோற்றான். மனைவி மக்களோடு அரண்மனையை விட்டு வெளியேறினான்.

 காட்டில் தவிக்க விட்ட நளன்

காட்டில் தவிக்க விட்ட நளன்

தம் பிள்ளைகளை மாமானார் வீட்டிற்கு அனுப்பினான். மனைவியோடு காட்டுக்கு சென்றான். அங்கேயும் விதி விளையாடியது. உடுத்திய துணியை கூட உருவிக்கொண்டு விட்டார் சனிபகவான். மனைவியாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று கூறி காட்டில் தனியாக விட்டு விட்டு சென்றார் நளன்.

விடிந்ததும் கணவனை காணாமல் தவித்த தமயந்தியை அவரது அப்பாவின் வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தனர்.

உருவம் மாறிய நளன்

உருவம் மாறிய நளன்

காட்டில் சுற்றித்திருந்த நளனை கார்கோடன் என்ற கருநாகம் தீண்டியது. இதில் அழகாய் இருந்த நளன் அசிங்கமாக மாறினான். விகாரமாக இருந்த நளன் தனது பெயரை வாகுனன் என்று மாற்றி வைத்துக்கொண்டு இருதுபன்னன் என்ற மன்னனிடம் தேர்ப்பாகனாக வேலை செய்தான்.

காணமல் போன கணவன் எங்கிருக்கிறான் என்று கண்டு பிடிக்க மீண்டும் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சுயம்வரத்திற்கு மன்னன் இருதுபன்னன் தனது தேரோட்டியை அழைத்து வந்தார்.

சுய உருவம் பெற்ற நளன்

சுய உருவம் பெற்ற நளன்

அரண்மனை சமயற்கூடத்தில் சமையல் செய்து கொண்டிருந்த போது தன் பிள்ளைகளிடம் வாகுனன் பாசமாக பேசியதை கேட்டு அவரே தனது கணவன் என்று அடையாளம் கண்டு கொண்டாள் தமயந்தி. உடனே தமயந்தியின் அப்பாவும் வாகுனனை அழைத்து கேட்டார். சனி விலகும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தார் நளன். கார்கோடகன் கொடுத்த அரவுரியை எடுத்து அணிந்து சுய உருவத்தை அடைந்தார். மனைவி மக்களுடன் இணைந்த நளன், தான் சூதாடி இழந்த தேசத்தை போரிட்டு வென்றார்.

நாராதர் அறிவுரை

நாராதர் அறிவுரை

நாடு மனைவி மக்கள் அனைவரையும் அடைந்தாலும் நளன் மனதில் அமைதி இல்லை. அப்போது நாரதர் நளனின் கனவில் தோன்றினார். நளனின் மன அமைதி இல்லாமைக்குக் காரணம் சனியே என்றும் சனி விலக ஆலயங்களுக்கு பயணம் செய்யுமாறு கூறினார். நளன் மனைவி மக்களோடு திருத்தலப் பயணம் மேற்கொண்டான். வழியில் பரத்வாஜ முனிவரைக் கண்டு வணங்கினான். பரத்வாஜர் நளனிடம் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டால் சனிபகவான் விலகி சாந்தி நிலவும் என்று கூறினார்.

சனிக்கு சந்தோஷம்

சனிக்கு சந்தோஷம்

நளச் சக்ரவர்த்தியும் திருநள்ளாறு ஈசனுக்கு, பால், தயிர், பழரசம், சந்தனக் குழம்பு, பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து சாதத்தில் நல்லெண்ணெயும், எள் பொடியும் கலந்து நைவேத்யம் செய்தார். இவற்றை எல்லாம் சனி பகவான் ஒரு தூணில் மறைந்து நின்று கண்டு ரசிக்க, போகமார்த்த பூண்முலையாள் நாயகனாம் சிவன், பிரசன்னமாகி, நளனுக்கு ஏற்பட்ட பிரச்சினையை போக்கினார். பின் சனி பகவானை நோக்கி இங்கே நில். இன்று தொட்டு உனக்கும் ஈஸ்வரன் என்ற பெயர் சேரட்டும் என்றார். அன்று முதல் சனி பகவான், சனீஸ்வரன் ஆனார்.

தோஷம் நீக்கும் நள தீர்த்தம்

தோஷம் நீக்கும் நள தீர்த்தம்

சனிபகவானை வணங்கும் முன், நளமகாராஜன் ஒரு குளத்தை வெட்டினார். இதுவே நள தீர்த்தம் என இன்றும் போற்றப்படுகிறது. நள தீர்த்தத்தில் எள் எண்ணெய் தேய்த்து நீராடிய பின், பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதை சனீஸ்வரர் நேசிக்கிறார். இப்படி செய்வதினால் எப்படிப்பட்ட தோஷமும், நவகிரஹ கோளாறும் நீங்கும்

 வெற்றி தரும் சனிபகவான்

வெற்றி தரும் சனிபகவான்

இங்குள்ள கலிதீர்த்த விநாயகரைத்தான் முதலில் வணங்க வேண்டும். சனி பகவானின் பிரசாதத்தையோ, சிவபெருமானின் பிரசாதத்தையோ வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டாலும், திருநள்ளாறு சனீஸ்வர பிரசாதத்தை வீட்டிற்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர் சித்தர்களும் ரிஷிகளும். புரட்டாசி மாத பௌர்ணமி பூஜையும், மகாசிவராத்திரி பூஜையும், சனி பெயர்ச்சி பூஜையும் சிறந்தவை. இந்த காலங்களில் திருநள்ளாற்றில் தங்கி வழிபட்டால், முடியாதது ஒன்றும் இல்லை. எதையும் சாதிக்கலாம் என்கிறார் அகஸ்தியர்.

சனிக்கு பிடித்தமானது

சனிக்கு பிடித்தமானது

நளசரித்திரம் படிப்பவர்களுக்கு சனிபகவான் சங்கடம் தரமாட்டார். சனிபகவான் யாரை பிடிப்பார் தெரியுமா? உலர்த்தாத துணியை உடுத்துபவர்களையும் ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தாலும் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம்.

முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.

சனி பாதிப்பு

சனி பாதிப்பு

இருள் சூழ்ந்த இடங்கள், அமங்கலமான சொற்கள் பேசுபவர்கள், சுத்தம் இல்லாத இடங்கள், மண்ணாசை, பொன்னாசை கொண்டவர்கள், அடுத்தவர்களின் மனைவியை ஆள நினைக்கும் சண்டாளர்களைக் கண்டால் சனி பிடித்து ஆட்டி வைப்பார். முக்கியமாக யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.

சுத்தம் செய்யாத வீட்டிலும் நித்தம் அழுகுரல் கேட்கும் வீட்டிலும் சனி சந்தோஷமாக தங்கி விடுவார். அந்த வீட்டில் வசிப்பவர்களை ஆட்டி படைத்துவிடுவார் சனிபகவான். எனவே மக்களே சுத்தமாக இருங்க நேர்மையாக இருங்க சனிபகவான் உங்க பக்கம் தீய பார்வையை செலுத்த மாட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Saturn During Gochara Fourth house eight house, and Elarasani inavariably man leaves his existent place of stay. Many a great kings had to face exile during this period. Rama went to forest in ardhastama,.Pandavas went to vanavas when saturn was in aquarius. King Nala lost his kingdom in a game of dice to his brother , and left to the forest along with his beautiful wife Damayanthi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more