மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்... புது தாலி மாற்றிய பெண்கள் - களைகட்டும் விருந்து

மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வரவழைத்த பூக்களால் மணமேடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற உடன் ஏராளமான பெண்கள் புதுதாலி அணிந்து கொண்டனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8,9,10 ஆம் நாட்களில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள் முக்கியமானவை. பட்டாபிஷேகம், திக்கு விஜயம், அதையடுத்து திருக்கல்யாணம் நிகழ்வுகளும் சிறப்பானது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவில் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று இரவில் நடந்தது. மதுரையின் பட்டத்தரசியாக முடிசூட்டிக்கொண்ட உடன் எட்டு திக்கும் வென்று வர அம்மன் திக் விஜயம் செல்வதைக் காணவே ஏராளமான பக்தர்கள் நகர வீதிகளில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மீனாட்சி அம்மன் திக் விஜயம்

மீனாட்சி அம்மன் திக் விஜயம்

மீனாட்சியாக ஏலவாரி அருள்நம்பியும், சுவாமியாக அருணோஸ் சந்திரசேகரனும் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் திருக்கல்யாணத்திற்காக மாப்பிளை அழைப்பும் கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.

கயிலாயம் சென்ற அன்னை

கயிலாயம் சென்ற அன்னை

ஒவ்வொரு திசையிலும் போர் தொடுத்து அனைவரையும் வெற்றி கொள்கிறார் அன்னை மீனாட்சி. கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் அன்னை மீனாட்சி. அங்கு குடியிருக்கும் சிவபெருமான்மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால், உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார். படையுடன் வீரம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி.எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில் வெற்றி வேட்கை குறைந்து வெட்கம் முடி சூடுகிறது. சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் ஏந்தி இருந்த வாளை கீழே போட்டு விட்டு நாணத்தோடு தலை குனிகிறார். அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மணாளனைக் கண்ட பூரிப்பில் அமைதியானார் அன்னை மீனாட்சி

மீனாட்சி திருக்கல்யாணம்

மீனாட்சி திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை நடக்கிறது. இதற்காக மண்டபம் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர்.

புது தாலி மாற்றிய பெண்கள்

புது தாலி மாற்றிய பெண்கள்

இன்று காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

கல்யாண ஊர்வலம்

கல்யாண ஊர்வலம்

திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பாலித்தனர். மாலையில் மாப்பிள்ளை யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

மணக்கோலத்தில் காட்சி

மணக்கோலத்தில் காட்சி

இன்று நாள் முழுவதும் பழைய கல்யாண மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளிப்பர். கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தண்ணீர் பாட்டில், பிரசாத பை வழங்க உள்ளோம். பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு உள்ளதாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கூறியுள்ளார்.

திருக்கல்யாண விருந்து சாப்பிட வாங்க

திருக்கல்யாண விருந்து சாப்பிட வாங்க

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. இந்த விருந்துக்கு உணவு தயாரிக்கும் பணி நேற்று மதியம் தொடங்கியது. அப்போது பெண்கள் அதிக அளவில் அங்கு வந்து காய்கறிகள் நறுக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு மாப்பிளை அழைப்பு விருந்தும் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு மதுரை நகர் முழுவதும் மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+