Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை பிட்டு திருவிழா: வைகையில் பெருகிய வெள்ளம்... பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட இறைவன்

வைகையில் பெருகிய பெருவெள்ளத்தை அடைக்க இறைவனே மதுரைக்கு வந்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டுள்ளார். இந்த திருவிளையாடல் லீலை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று அரங்கேறியது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அரங்கேறியது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வர கரையை பலப்படுத்த வந்தி பாட்டிக்கு கூலி ஆளாக இறைவன் சிவபெருமானே மதுரைக்கு வந்தார் என்கிறது திருவிளையாடல் புராணம். கூலியாக பிட்டு கொடுக்க அதை சாப்பிட்டு விட்டு கரையில் படுத்திருந்த இறைவனை மன்னன் பிரம்பால் அடிக்க அந்த அடி உலக உயிர்கள் மீதெல்லாம் பட்டது.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாகும். அந்த ஆண்டின் சீதோஷ்ண நிலையையே நிர்ணயிக்கக் கூடியதாக இந்தநாள் உள்ளது. காலையில் சூரியன் உதயமாகும் போது மிகுந்த ஒளியுடன் இருந்தால் அந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்கும். வானத்தில் சற்றே மேக மூட்டம் காணப்பட்டால் பருவமழை நன்றாக செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆண்டு தோறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களின் பெயர்களில் ஆவணி வீதிக்கு மட்டும் ஆவணி மூல வீதி என்று நட்சத்திரத்துடன் இணைத்துப் பெயர் சூட்டியுள்ளனர். ஆவணி மூலத் திருவிழா காலங்களில் சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல் காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.

பட்டாபிஷேகம்

பட்டாபிஷேகம்

சித்திரை திருவிழா சமயத்தில் அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. பட்டத்தரசியாக மகுடம் சூட்டிக்கொண்ட அன்னை திக் விஜயம் செல்ல பல நாட்டு அரசர்களை வென்ற மீனாட்சிக்கு கயிலாய நாதன் சிவபெருமானுடன் திருமணம் நடைபெறுகிறது. மதுரையில் கோலாகலமாக நடந்த திருமணத்தில் தடபுடலாக விருந்தும் நடக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமணத்தை கண்டு தரிசித்து விருந்து சாப்பிட்டு செல்கின்றனர். பூதகணங்களும் விருந்து சாப்பிட்டு தாகம் தீர வைகையை உருவாக்கினார் இறைவன் சிவபெருமான்.

ஆவணியில் சொக்கருக்கு பட்டாபிஷேகம்

ஆவணியில் சொக்கருக்கு பட்டாபிஷேகம்

சித்திரையில் தேரில் வலம் வந்து வைகாசியில் வசந்த உற்சவம் பார்த்து ஆனியில் ஊஞ்சல் உற்சவம் நடத்தில் ஆடியில் முளைக்கொட்டு விழா கொண்டாட்டங்கள் முடிந்து ஆவணியில் மூலத்திருவிழா நடைபெறுகிறது. சிவனின் திருவிளையாடல்கள் நடந்த பின்னர் மதுரையின் மன்னனாக பட்டம் சூட்டப்படுகிறது. ஆவணி முதல் சித்திரை வரை பாண்டிய மன்னனாக ஆட்சி செய்கிறார் சொக்கநாதர். நேற்றைய தினம் ஆவணி மூல திருவிழா நாளில் சிவபெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. நரியை பரியாக்கிய லீலையும் அரங்கேறியது.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற நரிகளை எல்லாம் பரிகளாக்கி அழைத்து வந்தார் இறைவன். அந்த பரிகள் அனைத்தும் மீண்டும் நரிகளாகி கானகத்திற்கு ஓடிப்போயின. இந்த லீலை நேற்று நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

பெருகிய வெள்ளம்

பெருகிய வெள்ளம்

குதிரைகள் அனைத்து நரிகளாக மாறி ஓடிப்போனதும் கோபம் கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்க வாசகரை வைகை நதியின் சுடு மணலில் நிறுத்தி மரண தண்டனை அளிக்கக் கட்டளையிட்டான்.

இறைவனின் கருணை, மழையாகப் பெய்து வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த, 'வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வரவேண்டும்' என்று ஆணையிட்டான் பாண்டிய மன்னன்.

கூலியாக வந்த இறைவன்

கூலியாக வந்த இறைவன்

மதுரையில் வாழ்ந்த, பிட்டு விற்றுப் பிழைக்கும் 'வந்தி' என்று மூதாட்டி தன் பங்குக்குக் கரையடைக்க ஆள் இல்லாமல் திண்டாடினாள். சிவபெருமானே கூலியாளாக வந்தார். பாட்டி உனக்காக நான் கரையடைக்க செல்லட்டுமா என்று கேட்க, என்னிடம் கூலி கொடுக்க பணமில்லை பிட்டு தரட்டுமா என்று பாட்டி சொல்ல உடனே சிவனும் அதற்கு ஒப்புக்கொண்டார். பசிக்கிறது முதலில் பிட்டு கொடு என்று கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு வைகை கரைக்கு சென்றார்.

பிரம்படி பட்ட இறைவன்

பிரம்படி பட்ட இறைவன்

பிட்டு உண்ட மயக்கம் இறைவனுக்கு வரத்தானே செய்யும், சிவனோ, வந்த வேலையைச் செய்யாமல் படுத்துத் உறங்கினார். அதைக் கண்ட பாண்டியன் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் சிவனின் முதுகில் அடித்தான். அந்தப் பிரம்படியானது, உலகின் அனைத்து உயிர்கள் மீதும் விழுந்தது. பாண்டிய மன்னனின் முதுகிலும் சுளீர் என்று வலிக்கவே அலறித்துடித்தான். அப்போது பணியாளன் உருவில் இருந்த சிவபெருமான் ஒரு கூடை மண்ணை எடுத்துச் சென்று கரையில் கொட்டினார். அப்போது வைகை ஆற்றின் வெள்ளம் வடிந்து அமைதியாக ஓடியது. பின்பு மன்னனைப் பார்த்து சிரித்த சிவபெருமான் அங்கிருந்து மாயமாக மறைந்தார். மாணிக்கவாசகரைக் காக்க சிவபெருமான் செய்த திருவிளையாடலே இது' என்பதை பாண்டிய மன்னன் உணர்ந்தார். இன்றைக்கும் மதுரையில் பிட்டுத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மண் சுமக்கும் சிவபெருமான்

மண் சுமக்கும் சிவபெருமான்

மதுரையில் புட்டுத்தோப்பில் ஆண்டுதோறும் பிட்டுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பு இன்றி கோவிலுக்குள் பிட்டுத்திருவிழா நடைபெற்றது. மாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+