For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண வரம் தரும் திருவெம்பாவை பாடினால் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா

Google Oneindia Tamil News

மதுரை: மார்கழி மாதத்தில் கோவிலுக்கு செல்பவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடினால், அளவற்ற புண்ணியத்தையும், தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமண யோகமும் கைகூடிவரும். மேலும், மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாயு சக்தியான தூய்மையான காற்று பூமியெங்கம் பரவி இருக்கும். அந்த தூய்மையான காற்றை சுவாதித்தால் ரத்த ஓட்டம் சீராகி உடம்பில் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.

மற்ற நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபடுவது செய்தால் தான் உரிய பலனும் புண்ணியமும் கிடைக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் வெறுமனே கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்தாலே புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கு காரணம் இந்த மாதத்தில் தான் வைணவர்களுக்கு பிரியமான வைகுண்ட ஏகாதசி திருநாளும், சைவ சமயத்தை சேர்ந்தவர்களுக்கு பிடித்தமான ஆருத்ரா தரிசன திருநாளும் வருவதால் தான்.

Margazhi month : Special features of Thiruvempavai songs

மார்கழி மாதத்தில் விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்து வருவார்கள். இதில் திருப்பாவை பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளித் தந்தது. திருவெம்பாவை சைவ சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளியது.

திருவெம்பாவை பாடலை மாணிக்கவாசகர் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் அருளியதாகும். அதேபோல், திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளியது.

கன்னிப் பெண்கள் தோழியரை தூக்கத்தில் இருந்து எழுப்பி, அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளுக்கு சென்று கூட்டமாக குளித்துவிட்டு தாங்கள் வழிபடும் தெய்வத்திடம், தங்களின் வாழ்வு வளமோடு இருக்கவேண்டும் என்றும், தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வதாக அமைந்த பாடல்கள் இவை.

திருவெம்பாவை பாடல்கள் இருபதும், திருவண்ணாமலையில் இருந்தபோது, அங்கிருந்த கன்னிப்பெண்களும் சிறுமிகளும் பாவை நோன்பு இருப்பதைக் கண்டு, தன்னையும் ஒரு கன்னிப்பெண்ணாக கற்பனை செய்துகொண்டு பாடிய பதிகங்களாகும்.

திருவெம்பாவை பதிகத்தில் முதலில் வரும் எட்டு பாடல்களும் கன்னிப்பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு, அனைவரும் எம்பெருமான் ஈசனின் புகழைப் பாடிக்கொண்டே, குளத்திற்கு நீராடச்செல்வதையும், ஒன்பதாவது பாடலில் தங்களின் பிரார்த்தனையை இறைவனிடம் வைப்பதாகவும், பத்தாவது பாடல் இறைவனை புகழ்ந்து பாடும் தன்மையை கேட்பதையும் உணர்த்துகின்றன.

அடுத்து வரும் பத்து பாடல்களும், அனைவரும் சேர்ந்து நீராடுவதை உணர்த்துவதாகவும், அமைந்துள்ளன. இவ்விரண்டு பதிகங்களும், கன்னிப்பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடல்களாக அமைந்துள்ளதையும், ஒரே வயதினர் பேசும்போது, அவர்களுக்குள்ளே எழும் கேலியும், கிண்டலும், பரிகாசமும் ஆங்காங்கே வெளிப்படுவதையும் நாம் காணமுடியும். இவ்விரண்டு பதிகங்களிலும் பல தத்துவக் கருத்துக்கள் புதைந்து கிடக்கின்றன.

ஆகவே தான், இந்துக்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து, விரதம் இருப்பதும், கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசித்தும் வருகின்றனர். மேலும், மற்ற நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கும், மார்கழி மாதத்தில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற மாதங்களில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் தான் அதற்குறிய பலன் கிட்டும். ஆனால், மார்கழி மாதத்தில் வெறுமனே தரிசித்தாலே இறைவனின் பூரண ஆசி கிடைத்திடும்.

மேலும், மார்கழி மாதத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாயு சக்தியான தூய்மையான காற்று பூமியெங்கம் பரவி இருக்கும். அந்த தூய்மையான காற்றை சுவாதித்தால் ரத்த ஓட்டம் சீராகி உடம்பில் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும்.

சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் அனைவரும், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையில் உள்ள இருபது பாடல்களையும், திருப்பள்ளியெழுச்சியில் உள்ள பத்து பாடல்களையும் மார்கழி மாதத்தில் பாடுவது 900 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் மரபாகும்.

English summary
In the month of Margazhi, when the temple worshipers sing the songs Thiruppavai and Thiruvempavai, the unlimited blessings, all the obstacles will be removed and the marriage will soon be over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X