நோய்கள் நீக்கும் மோகினி ஏகாதசி விரதம் - தன்வந்திரி பெருமாளை வணங்கினால் பெண்களின் பிரச்சினை நீங்கும்
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள்.
சென்னை: வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும். ஏகாதசி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.

வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு 'மோகினி ஏகாதசி' என்று பெயர். விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு 'மோகினி ஏகாதசி' என்ற பெயர் வந்தது.
வைகாசி வளர்பிறை ஏகாதசியில் திருமாலை பிராத்தனை செய்வது மிகவும் சிறப்பு வைகாசி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி தினம் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமையன்று வருகிறது. இந்நாளில் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. இந்த விரதத்தின் மகிமை பற்றி புராண கதை ஒன்று உள்ளது.
திரிஷ்டிமான் என்கிற மன்னன் அரச குலத்தில் பிறந்து அரச போகங்களை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருந்தான். அப்படிப்பட்ட மன்னன் திரிஷ்டிமான் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, வைகாசி வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து வாழ்வின் மாயையாகிய சுக அனுபவித்திலிருந்து மீண்டு பெருமாளின் பூரண அருளை பெற்றான்.
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும். இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும். பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை பெறும்.
வாழ்வில் நீங்கள் விரும்பியவற்றை பெற வைகாசி ஏகாதசி விரதம் இருப்பது நல்லது. இந்த வைகாசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.
சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் மாதமே வைகாசி மாதம். வைகாசி மாதம் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மாதம் என்று பலர் நினைத்தாலும் திருமாலின் வழிபாட்டிற்குரிய மாதமாகவும் இது இருக்கிறது. வாழ்வில் நீங்கள் விரும்பியவற்றை பெற வைகாசி ஏகாதசி விரதம் இருப்பது நல்லது.மேற்கண்ட பலன்களை பெற வீட்டிலிருந்தவாறு தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறும் ஹோமங்களில் சங்கல்பம் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு 04172 294022, செல் 94433 30203.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications