2018 புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசிக்காரர்களே... பாக்கெட் நிறைய பணம்!
மிதுனம் ராசிக்காரர்களே உங்களுக்கு 2018ஆம் ஆண்டு உங்களுக்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். உங்கள் ராசிக்கான பலன்களை அறிந்து கொள்வோம்.
Recommended Video

சென்னை: உயர்ந்த பண்பின் இருப்பிடமாகத் திகழும் மிதுன ராசி அன்பர்களே! இயற்கையிலேயே நீங்கள் சிறந்த அறிவாளி. குருவின் பார்வையால் உங்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமான பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் அக்டோபர் 11 வரை துலாம் ராசியில் அமர்ந்து தனது 9வது பார்வையால் உங்களின் ஜென்மராசியை பார்க்கிறார்.
இந்த ஆண்டு வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும்.

2018ல் பாக்கெட்டில் பணம்
உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய காலம் இது. 2018 அக்டோபர் 11ஆம் தேதிக்கு மேல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்திற்கு செல்வதால் அதுவரை சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யுங்கள்.

தொழிலில் கவனம்
இந்த ஆண்டு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். செய்யும் தொழிலில் கவனம் தேவை.
சனி பகவான் 7ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்லவும்.
நண்பர்களுடன் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகவே இருக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் ராகு சஞ்சரிக்கிறார் கேது 8ல் சஞ்சாரம் செய்கிறார். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். பொதுவாக பேச்சை குறைக்க வேண்டும். இதுவே அதிக நன்மைகளை தரும். உங்கள் வாய் வார்த்தைகளினால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சண்டை சச்சரவுகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். திடீர் நோய் வர வாய்ப்பும் இருக்கிறது, அதிகமாக கவனம் தேவை.

படிப்பில் கவனம்
புதிய வாய்ப்புகள் தேடி வரும் சுபகாரியங்கள் கைகூடும் படிக்கும் மாணவர்களுக்கு யோகமான காலம்.
மாணவர்கள் கவனத்தோடு படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம். மனதுக்குப் பிடித்த கல்லூரிகளில், பள்ளிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். சோம்பலை விரட்டினால் சாதனைகள் அதிகரிக்கும். கல்விக்கடனுக்கு முயற்சி செய்பவர்கள் பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு செய்யவும்.

ஆஞ்சநேயர் வழிபாடு
உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். ராகு 2ஆம் இடத்தில் இருப்பதால் அம்மன் வழிபாடு அவசியம். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுங்கள். 8ல் கேது அமர்ந்துள்ளதால் விநாயகரை வழிபடவும். சனி 7ல் இருப்பதால் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றவும். விநாயகர் வழிபாடு அவசியம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications