Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2020: துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பரிகாரங்கள்

புண்ணியங்கள் நிறைந்த புரட்டாசி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதம் உள்ளது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ஆறு ராசிக்காரர்களுக்கும் புரட்டாசி மாதம் எப்படி உள்ளது என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன சந்திராஷ்டம நாட்களையும் பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கன்னி ராசியில் சூரியன் புதனோடு இணைந்துள்ளார். கடகத்தில் சுக்கிரன், தனுசு ராசியில் குரு, மகரத்தில் சனி, மேஷம் ராசியில் செவ்வாய் என கிரக சஞ்சாரம் உள்ளது. சந்திரன் பயணம் சிம்மம் ராசியில் தொடங்கி கன்னி ராசியில் முடிகிறது.

புரட்டாசியில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி அதிகம் நிகழ்கிறது. கன்னி ராசியில் உள்ள புதன் 6ஆம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார். ராகு கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழ்கிறது. 7ஆம் தேதி ராகு மிதுனம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். கடகம் ராசியில் உள்ள சுக்கிரன் 11ஆம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்.13ஆம் தேதி சனிபகவான் வக்ரம் முடிகிறது. செவ்வாய் 18ஆம் தேதி மீனம் ராசிக்கு நகர்கிறார். கிரகங்கள் வக்ர சஞ்சாரத்தை பார்த்தால் செவ்வாய் 19ஆம் தேதி வக்ரம் ஆரம்பம். 28ஆம் தேதி புதன் வக்ரம் ஆரம்பமாகிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்

புரட்டாசி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். சூரியனும் புதனும் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த மாற்றம் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும். வேலை தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் நன்மைகள் நடைபெறும். ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழிலில் நிறைய லாபமும் பண வருமானமும் வரும். வருமானம் இருமடங்காகும். எந்த அளவிற்கு பணவருமானம் வருகிறதோ அதே போல சுப செலவுகளும் வரும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிறைய நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். விட்டுக்கொடுத்து போங்க. உறவினர்களே கூட உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவார்கள் எச்சரிக்கையாக இருப்பது. உங்க திறமைகள் அதிகம் பளிச்சிடும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் நீங்கும். சகோதர வகையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணத்தை சுப காரியத்திற்காக அதிகம் செலவு செய்யுங்கள். இல்லத்தரசிகளுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவியில் உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் பதவி உயர்வு பற்றிய அறிவிப்பு வரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பொருளாதார வளர்ச்சி நிறைந்த மாதம் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். ராகு எட்டில் இருக்கிறார். கேது இரண்டாம் இடத்தில் இருப்பதால் பூச்சி, விஷ ஜந்துக்களிடம் கவனமாக இருப்பது நல்லது. சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு சந்திராஷ்டமம் புரட்டாசி 19ஆம் தேதி அக்டோபர் 05 திங்கட்கிழமை இரவு 09.41 மணிமுதல் புரட்டாசி 22 அக்டோபர் காலை 9.47 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ராஜ சன்மானம் கிடைக்கும். புகழ் செல்வாக்கு கூடும். வேலையில் உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மருத்துவ செலவுகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் தடைகள் விலகும். எதிர்பாராத தன வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். யோசித்து பேசுவது நல்லது. புதிய வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். ராசி நாதன் ஆட்சி பெற்று வக்ரமாக இருப்பதால் சொத்து சேர்க்கை ஏற்படும். புதிய வீடு வாங்க நினைப்பவர்கள் இந்த மாதம் அட்வான்ஸ் கொடுக்கலாம். இந்த மாதம் சந்திராஷ்டமம் புரட்டாசி 22 ஆம் தேதி வியாழக்கிழமை அக்டோபர் 8ஆம் தேதி காலை 9.47 மணி முதல் புரட்டாசி 24 ஆம் தேதி சனிக்கிழமை அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7.09 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது.

தனுசு

தனுசு

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு யோகாதிபதி சூரியன் 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரத்தில் லாபம் வரும். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு பண்ணுங்க. உங்க ராசியில் இருந்து கேது விலகுவதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிரச்சினைகள் நீங்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். உங்களுடைய பாதகாதிபதி புதன் லாப ஸ்தானத்திற்கு வருவதால் கணவன் மனைவி இணக்கமான போக்கு அதிகரிக்கும். நெருக்கம் கூடும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.பெரிய பதவிகள் தேடி வரும். வீடு மனை வாங்கலாம். கட்டிய வீட்டை வாங்கலாம். இந்த மாதம் நீங்கள் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் உயர்கல்விக்காக செலவுகள் வரும். கடன் வாங்குவீர்கள். சுப காரியத்திற்காக கடன் வாங்கி செலவு பண்ணுங்கள் கடன் கிடைக்கிறதே என்று அதிகமாக கடன் வாங்கி கடனாளி ஆகி விட வேண்டாம். கர்ப்பிணிகள் கவனமாக இருங்க. குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். ஸ்ரீபைரவரை வணங்குங்கள். தானம் செய்யுங்கள் நன்மைகள் அதிகரிக்கும். இந்த மாதம் சந்திராஷ்டமம் புரட்டாசி 24ஆம் தேதி சனிக்கிழமை அக்டோபர் அக்டோபர் 10ஆம் தேதி இரவு 7.09 மணி முதல் புரட்டாசி 27ஆம் தேதி செவ்வாய்கிழமை அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலை 12.29 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, சூரியன் இந்த மாதம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த ஒரு மாதம் எட்டாவது வீட்டில் இருந்த சூரியனால் சில சங்கடங்களை அனுபவிக்கிறார். 9வது வீட்டிற்கு வருகிறார். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் கொடுத்த பணம் திரும்ப வராது. பாக்ய ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைந்து வலுவாக இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணியில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பாராட்டுக்கள் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு வாங்க, தொழில் தொடங்க உங்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். புது வீடு மாறும் யோகம் வரும். வேலை தொழிலில் இடம் மாற்றம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தடைகள் விலகும். செவ்வாய் வக்ரமடைவதால் தடைகள் விலகும் வழக்குகள் சாதகமாகும். கேது உங்க ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உணவு விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய பிசினஸ் ஆரம்பிக்க நினைப்பீர்கள் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் திருமண விசயம் பற்றி பேச ஆரம்பிக்கலாம். வரன் பார்க்க தொடங்கலாம். குருபகவானை வணங்குங்கள். இந்த மாதம் உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் புரட்டாசி 27ஆம் தேதி செவ்வாய்கிழமை அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலை 12.29 மணி முதல் புரட்டாசி 29 அக்டோபர் 15 வியாழக்கிழமை அதிகாலை 02.02 வரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

கும்பம்

கும்பம்

சூரியன் இப்போது எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையை சிறுசிறு கருத்து மோதல்கள் வரலாம். சுக்கிரன் ஆறில் மறைந்திருக்கும் காலத்தில் வண்டி வாகனத்தில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. எதிர்பாலினத்தினருடன் கவனமாக பழகுங்கள். சுக்கிரன் ஏழாம் வீட்டிற்கு வந்து உங்க ராசியை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இந்த மாதம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும். அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் நீங்கும். பணம் விசயத்தில் கவனமாக இருங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீர்கள். பொருளாதாரத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வேலை செய்பவர்கள் உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்கள் முதலீடுகளில் கவனமாக இருங்க. கேது தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். லாப ஸ்தானத்தில் உள்ள குரு ஆட்சி பெற்றிருப்பதால் தொட்டது துலங்கும் லாபம் அதிகரிக்கும். திருமண யோகம், புத்திர பாக்கியம் ஏற்படும். சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும் மாதம். இந்த மாதம் உங்க ராசிக்கு புரட்டாசி 1ஆம் தேதி செப்டம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 03.07 மணி முதல் புரட்டாசி 03ஆம் தேதி செப்டம்பர் 19 பிற்பகல் 2.42 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. மாத கடைசியில் புரட்டாசி 29ஆம் தேதி வியாழக்கிழமை அக்டோபர் 15ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு நிறைய சாதகமான சம்பவங்கள் நடைபெறும். கடந்த ஒருமாதமாக ஆறாம் வீட்டில் இருந்த சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்ப்பதால் அரசு பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான மாதம், பதவி உயர்வு தேடி வரும். யோகமான நேரம் கைகூடி வருகிறது. அரசியல்வாதிகள் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடல் உஷ்ணம் அதிகரிக்கும். செவ்வாய் உங்க ராசியில் வந்து அமர்வதால் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்லது நடைபெறும் செய் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் லாபம் கிடைக்கும். ராகுவினால் தைரியம் தன்னம்பிக்கை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிரிகள் பிரச்சினை நீங்கும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும். நோய் தொந்தரவுகள் நீங்கும். திருமண யோகம் கைகூடி வருகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கொடுத்த பணம் வசூலாகும். வேலையாட்களால் சின்னச் சின்ன தொந்தரவு வரும். பணம் விசயத்தில் கவனம் தேவை. அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து ஏழுமலையானை வணங்குங்கள். ஏழைகளுக்கு தானமாக கொடுங்கள். புரட்டாசி 03ஆம் தேதி செப்டம்பர் 19 பிற்பகல் 2.42 மணி முதல் புரட்டாசி 5ஆம் தேதி செப்டம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 3.16 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+