ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: பேசும் வார்த்தைகளில் கவனம்.. கோடி கோடியாக பணம் யாருக்கு வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகு கேது இந்தாண்டு வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் கும்பம் ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது நினைத்த காரியம் நிறைவேறுமா? என்று பார்க்கலாம்.

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Kumbam Rasi Rahu ketu Peyarchi Palan and Parikaram

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட, ராசிக்காரர்களே... மூன்றாம் வீட்டில் உள்ள ராகு 2ம் இடத்திற்கும், ஒன்பதாம் வீட்டில் உள்ள கேது 8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வருவதால் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வந்தாலும் அதையும் தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும்.

ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால், பேச்சினால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். பணம் விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். சமயோசிதமாகச் சிந்தித்துப் பேசவேண்டியது அவசியம். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். எதிர்பாராதச் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து போனாலும், மகிழ்ச்சிக்குக் குறையிருக்காது. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் சிறப்பான முறையில் நடைபெறும்.

பூர்விக சொத்து மற்றும் வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் ஏற்படும். அன்னிய இனத்தவர்களால் அனுகூலமும் ஆதாயம் உண்டு.

எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம்.
ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும். கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும்.

பெண்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், இதுநாள்வரை சோம்பலாக இருந்தீர்கள். இனி சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பத்திரமாக பார்த்துக்கொள்வது அவசியம். கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும்.

கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வேலையில் புரமோசனும் அதிக வருமானமும் கிடைக்கும். வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போட மேலும் நன்மைகள் நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+