ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி.. பரிகாரம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகு கேது இன்னும் சில நாட்களில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு லாப ராகு பூர்வ புண்ணிய கேது என்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ராகு கேது: சூது கிரகமான ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். ஞான கிரகமான கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Rahu ketu transit Rishabam Rasi Palan and Parikaram

ரிஷபம்: ராகு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குருவின் வீட்டில் ராகு சென்று அமர்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் யோகத்தை தரும். அதிர்ஷ்டத்தையும் அதன் மூலம் எதிர்பாராத பண வருமானத்தை அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான். ரிஷப ராசியில் பிறந்து ராகு யோகம் பெற்ற ஜாதகக்காரராக இருந்தால் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அற்புதமான பலன்களைத் தரப்போகிறார். ராஜயோகத்தை தருவார். திடீரென உச்சத்திற்கு செல்வீர்கள். ரிஷப ராசியின் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெறும் வீட்டில் ராகு சென்று அமர்வது திடீர் ஜாக்பாட் அடிக்கும். எதிர்பாராத பணம் பல வழிகளில் இருந்து மலையாக குவியப்போகிறது

சந்தோஷ மனநிலை: ராகு வேலை தொழிலில் போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்த தம்பதியர் இடையே இனி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் எல்லோரும் மகிழ்ச்சியான செய்திகளை சொல்வார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று உயர்கல்விக்கு செல்வார்கள். உடல்நிலையும் உற்சாகமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே பாசமும் நேசமும் அதிகரிக்கும்.

கடமை தவறாதவர்கள் நீங்கள். குடும்பத்தில் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் இருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி லாபத்தையும் பண வருமானத்தையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறது. தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு இனி நிம்மதியான உறக்கம் வரும். மன கவலைகள் மாறப்போகிறது. 11 ஆம் வீட்டில் ராகுஅமரப்போவது வெற்றியை தரப்போகிறது. ராகு திசை காலமாக இருந்தல் கோடீஸ்வர யோகம் தேடி வரும். மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படப்போறது. 18 மாதங்களில் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

பொன்மழை பொழியும்: இதுநாள்வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி மளமளவென முடியும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணம் கைகூடி வரும். சிலருக்கு பிள்ளைபாக்கியம் வந்து சேரும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். அலுவலகத்தில் இதுநாள்வரை உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலைக்கு ஏற்ற மதிப்பு கூடும். உயரதிகாரிகள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். உயர்பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கூட வரும். கலைத்துறையினருக்கு புதிய பட வாய்ப்புகள் தேடி வரும் வருமானம் கூடும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும் காலம் வந்து விட்டது பொன்மழை பொழியும் நேரம் இது. குல தெய்வ பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Rahu ketu transit Rishabam Rasi Palan and Parikaram

மோட்ச காரகன் கேது: பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டிற்கு கேது வருவது யோகம் தான். ரிஷப ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் கல்விக்காக அதிக செலவு செய்யும் நீங்கள் அவர்களின் நலனிலும் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளின் நட்புக்களின் மீது கவனம் வைப்பது நல்லது.

ஆலய தரிசனம்: தடைப்பட்ட திருமணங்கள் கடகடவென நடைபெறும் சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கோபத்துடன் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் கை கூடும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி யோகங்கள் நிறைந்த ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது. ஆன்மீக பயணம் செல்வீர்கள். மகான்கள் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+