For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத சப்தமி 2020: ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வரும் சூரிய பகவான் - சில சுவாரஸ்யங்கள்

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதமாகும். இவ்விரதமானது சூரிய பகவான் தன்னுடைய தட்சினாயன பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் வட கிழக்கு திசையான உத்திராயண திசையை நோக்கி செலுத்து

Google Oneindia Tamil News

சென்னை: ரத சப்தமி என்பது சூரிய பகவான், தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வட கிழக்கு திசை நோக்கி செலுத்தும் நாளாகும்.
ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில், சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் வட திசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத சப்தமி தினத்தன்று ரத சப்தமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள படி, வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் ரத சப்தமி நாள் விளங்குகிறது.

சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களும்கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன், கிரகபதம் என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான்.
சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.

சூரியனின் அவதாரம்

சூரியனின் அவதாரம்

பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது புராண கதை.
திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு. அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்பது மற்றொரு கதை.

சப்தரிஷிகள்

சப்தரிஷிகள்

சப்த ரிஷிகளில் ஒருவரான காஷ்யபர்-அதிதி தம்பதிகளின் மகன் தான் சூரிய பகவான். அதிதி கர்ப்பவதியாக இருந்த போது, ஒரு நாள் காஷ்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, அங்கே ஒரு பிராமணர், ‘தாயே பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று பிச்சை கேட்க, அதற்கு அதிதி, சற்று இருங்கள் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு நடக்க முடியாமல் மெதுவாக நடந்து வந்து காஷ்யபருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின்பு, ஆகாரத்தை எடுத்து வந்து அந்த பிராமணருக்கு கொடுத்தாள்.

முனிவர் கொடுத்த சாபம்

முனிவர் கொடுத்த சாபம்

தாமதமாக வந்து பிச்சை போட்ட அதிதியைப் பார்த்து பிராமணர், என்னை காக்க வைத்து, தாமதமாக வந்து உணவை அளித்து, என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். அதனால், உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான் என கோபப்பட்டு சாபமிட்டார். பிராமணரின் சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, நடந்த விஷயத்தை காஷ்யபரிடம் சொல்ல, அதற்கு அவர், கவலைப்படாதே, அமிர்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத பிரகாசத்துடன் ஒரு மகன் நமக்கு கிடைப்பான், என்று ஆசீர்வதித்தார்.

ஏழு குதிரைகள் பூட்டிய தேர்

ஏழு குதிரைகள் பூட்டிய தேர்

காஷ்யபர் ஆசி வழங்கியது போலவே, பிரகாசமான ஒளியுடன் சூரிய பகவான் மகனாக பிறந்தார். வானவில்லைப் போல ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார். இந்த ஏழு குதிரைகளும் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்களைக் குறிக்கிறது.

வலம் வரும் சூரிய பகவான்

வலம் வரும் சூரிய பகவான்

சூரிய பகவான் வலம் வரும் அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உண்டு. சூரிய பகவானின் தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் என்பவர், மஹாவிஷ்ணுவின் பெரிய திருவடி என பயபக்தியோடு அழைக்கப்படும் கருட பகவானின் சகோதரர் ஆவார். சூரிய பகவான் வலம் வரும் தேரின் சக்கரம் உத்திராயணம், தட்சிணாயனம் என இரண்டு பாகங்களைக் கொண்டது. சூரிய பகவான் தன்னுடைய தேரில் ஏறி வலம் வந்து காலை, நண்பகல், மாலை, அர்த்த ராத்திரி என நான்கு பட்டணங்களை சுற்றி வந்து காலங்களை உருவாக்குகிறார்.

சூரியனின் அம்சம்

சூரியனின் அம்சம்

சூரியன் மும்மூர்த்திகளின் அம்சமாக விளங்குகிறார். பிருகுமுனிவர், வால்மீகி, அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் ஆகியோர் சூரிய தேவனின் அருளால் பிறந்தவர்கள் என்று ராமாயணமும், மகாபாரதமும் கூறுகின்றன.

English summary
Ratha Saptami fasting is the most important of the sun god. On the day of Ratha Saptami, it is best to get up early in the morning and get up at sunrise and take a bath in holy bath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X