இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - வானத்தில் சூரியனின் நெருப்பு வளையத்தை எங்கு பார்க்கலாம்
இந்த ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் இன்று பிற்பகலில் நிகழ்கிறது. நெருப்பு வளையமாக வானத்தில் நிகழப்போகும் கங்கன சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும் நேரலையாக பார்க்கலாம்.
சென்னை: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இது கங்கண சூரிய கிரகணமாகும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் இணையதளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்வதை பார்த்து ரசிக்கலாம். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சந்திரகிரகணம் நிகழ்ந்தது. ரத்த நிலவு வானில் தெரிந்தது. இன்று வானத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்வையிடலாம். இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணிக்குத் தொடங்கி மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக அமாவாசை நாட்களில் தான் சூரிய கிரகணம் ஏற்படும். இன்றைய தினம் சூரியன், சந்திரன், ராகு இணைந்து ரிஷப ராசியில் பயணம் செய்கின்றன. சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுவது கிரகணம் ஆகும். இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய தினம் சந்திரன் சூரியனை மறைக்கும்போது அது முழுமையாக மறைப்பதில்லை. அதனால் சந்திரனைச் சுற்றியுள்ள, சூரியனை மறைக்காத பகுதிகள் ஒளி வட்டமாக நெருப்பு வளையம் போல கண்ணுக்குத் தெரியும். அதுபோன்ற கங்கண சூரிய கிரகணம்தான் இன்று நிகழப்போகிறது.
இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாளிலும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதியும் கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியும் நிகழ்ந்தது.

நெருப்பு வளைய கிரகணம்
பகலிலேயே சூரிய ஒளி மறைந்து வானில் இருள் தோன்றும். இந்த நிகழ்விற்கு முழு சூரிய கிரகணம் என்று பெயர். சில நேரங்களில் நிலவால் மறைக்கப்பட்ட சூரியன் ஒரு நெருப்பு வளையம் போல் வானில் காட்சி தரும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வை உலகின் சில பகுதிகளில் இருக்கும் மக்களால் மட்டுமே பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது மொத்தம் 3 நிமிடங்கள் 51 வினாடிகள் நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

கிரகணம் எப்போது தோன்றும்
இந்த சூரிய கிரகணமானது இந்திய நேரப்படி பிற்பகல் 01:42:19 மணிக்கு ஆரம்பமாகிறது மாலை 06:40:54 மணிக்கு சூரிய கிரகணம் முடிவடைகிறது. இதில் எந்த இடத்திலும் இந்திய பகுதிக்குள் வரவில்லை. எனவே, இந்த கிரகணம் இந்தியாவில் எந்த பகுதியிலும் எள்ளளவு கூட தெரியாது.

பகுதி கிரகணம் தெரியும் இடங்கள்
கனடா, வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும். உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு இருண்ட நிழலை மட்டுமே காண்பார்கள். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும். இந்த நாட்டில் உள்ளவர்கள் நெருப்பு வளையத்தை பார்க்க முடியாது.

கங்கண கிரகணம் எங்கு தெரியும்
கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாகப் பார்க்க முடியும் என நாசா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடைசி சில நிமிடங்கள்
இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலிருந்து மாலை 5:52 மணியளவில் சூரிய கிரகணத்தின் மிகச் சிறிய பகுதியை மக்கள் காணலாம். சூரியன் மறையும் மாலை நேரத்தில் மாலை 6.15 மணியளவில் லடாக்கின் வடக்கு பகுதியில், கிரகண நிகழ்வின் கடைசி நேர நிகழ்வினைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் கிரகணத்தை ரசிக்கலாம்
இந்தியாவில் வசிப்பவர்கள் சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் ஆன்லைனில் சூரிய கிரகணத்தை நேரில் ஒளிபரப்ப உள்ளனர். எனவே சூரிய கிரகணத்தை நேரில் பார்ப்பது போல ஆன்லைனில் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கலாம். Timeanddate.com இணையத்தில், https://www.timeanddate.com/live/eclipse-solar-2021-june-10 இணைய முகவரியில் நேரலையாக ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications