உங்க ஜாதகத்தில் சனி இங்கே இருக்கா... இதைப் பற்றி பெருமை பேசாதீங்க
சனிபகவான் ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொறுத்து பெருமையாக சில விசயங்களைப் பேசக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
சென்னை: சனிபகவான் நீதிமான். நல்லது நினைப்பவர்களுக்கு நிறைய நல்லது கொடுப்பார். கெட்டவர்களுக்கு படிப்பினை கொடுப்பார். தண்டனை தருவார். சனிபகவான் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து சில விசயங்களைப் பெருமையாக பேசக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒருசிலர் எதைப்பற்றியாவது பெருமையாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சில நாட்களில் மிகப்பெரிய அடி விழும். அதாவது அவர்கள் எதைப்பற்றி பெருமையாக பேசினார்களோ அந்த விஷயத்திலேயே அவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும். அந்த தண்டனையை தருவது சனிபகவான்தான்.
நேர்மையாக இருப்பவர்களுக்கும் சுய தம்பட்டம் அடிக்காமல் இருப்பவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருக்கும். சுய ஜாதகத்தில் சனி பகவான் எங்கிருந்தால் எந்த விசயங்களை செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

பெருமை பேசாதீங்க
லக்னத்தில் சனி இருந்தால் ஜாதகரை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். 2ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் வருமானம் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. வருமானத்தில் தடை ஏற்பட்டு நிதி நெருக்கடி உண்டாகும்.

சிக்கல் வரும்
3ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் இளைய சகோதரர் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. சண்டை சச்சரவு வரும். 4ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் சுய சொத்துக்கள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது சிக்கல் வர வாய்ப்புள்ளது. ஜாதகரின் 5ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் குழந்தைகள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. உடல் நலம் பாதிக்கும்.

குடும்பத்தில் பிரச்சினை
6ம் பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் வேலையை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. வேலையில் சிக்கல் வந்து பறிபோகும். 7ம்பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் மனைவியை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. குடும்பத்தில் சண்டை வரும்.

பூர்வீக சொத்துக்கள்
8ம்பாவத்தில் சனி இருந்தால் ஜாதகரின் எதிர்பாராத அதிர்ஷ்டம் பற்றிய தகவல்களை பெருமையாக
பேசக் கூடாது. 9ம்பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் பூர்வீக சொத்துக்கள் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது வம்பு வழக்கு வரும்.

குடும்பத்தில் விரிசல்
10ம்பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் தொழில் பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. தொழிலில் சிக்கல் வரும். 11ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரர், மருமகளையோ மருமகனை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது, குடும்பத்தில் விரிசல் வரும். 12 ம் பாவத்தில் சனி பகவான் இருந்தால் ஜாதகரின் முதலீடுகளை பற்றிய தகவல்களை பெருமையாக பேசக் கூடாது. நஷ்டத்தில் இழுத்து விடும். உங்கள் சுய ஜாதகத்தில் சனிபகவான் எங்கிருக்கிறார் என்று பார்த்து சுய தம்பட்டம் அடிக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications