ராகு கிரஹஸ்த சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி - இந்த 6 ராசிக்காரர்கள் கவனம்
சனி பெயர்ச்சியும் சூரிய கிரகணம் அடுத்தடுத்து நிகழ உள்ளது. இந்த சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் யாருக்கு யோகம் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் பாதிப்பும் ஏதேனும் ஏற்படுமா? என்ன மாதிரியான பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நவகிரகங்களில் சூரியனும் சனியும் பகை கிரகங்கள் என்பதால் சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் இந்த சனி பெயர்ச்சி கவனம் பெற்றுள்ளது. கிரகங்களின் அணிவகுப்பும் நிகழ்கிறது. ஒரே ராசியில் சுக்கிரனும் குருவும் இணைந்துள்ளதால் அருகருகே அமைந்துள்ளன.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைகிறார். சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி அதிகாலை 4: 08 மணி வரை நீடிக்கிறது. மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் நிகழும் இந்த சூரிய கிரகணம் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் சூரிய கிரகணத்தாலும் சனி பெயர்ச்சியாலும் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. சூரிய கிரகணம் ஏழாம் வீட்டில் நிகழ்கிறது. சனிபகவான் ஆறாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். துணிச்சலாக எந்த முடிவுகளையும் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சுப விரைய செலவுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. சனிபகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக அமர்கிறார். சுக ஸ்தானத்தில் அமரும் சனிபகவான், நீங்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி உங்களுக்கு நன்மையை தரப்போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்கிறார். மூன்றாம் வீட்டில் சனி இடப்பெயர்ச்சி அடைவதால் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, சூரிய கிரகணம் நான்காம் வீட்டில் நிகழ உள்ளது. சனிபகவான் ஜென்ம ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு நகர்வதால் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். எந்த ஒரு முக்கிய முடிவையும் தள்ளி வைப்பது நல்லது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் தேடி வரும். திடீர் வருமானமும் அதிகரிக்கும்.

கும்பம்
சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார். சூரிய கிரகணம் மூன்றாவது வீட்டில் நிகழ உள்ளது. கொஞ்சம் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் தடை, தாமதங்கள் ஏற்படலாம். குழந்தைகளில் கல்வி விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. விரைய ஸ்தானத்திற்கு சனிபகவான் வருகிறார். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உற்சாகத்திற்கு குறைவிருக்காது. கடன் பிரச்சினை நீங்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications