Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி 2022: ஏழரை சனி என்ன செய்யும்?... சனி பார்வை எந்த ராசிகளின் மீது விழுகிறது

சனிப்பெயர்ச்சி இம் மாதம் நிகழப்போகிறது. இந்த அதிசார சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிகிறது. மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி,
யாருக்கு தொடங்குகிறது யாருக்கு முடிகிறது ஏழரை சனி என்ன செய்யும் என்று பார்க்கலாம்.

நவகிரகங்களில் சனிபகவானுக்கு மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள். காரணம் சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கிறார். நிறைய படிப்பினைகளை கற்றுத்தந்து விட்டுத்தான் செல்வார். ஏழரை சனி காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையின் அடி முதல் முடி வரைக்கும் ஆட்டி படைத்து விடுவார். இதுநாள் வரை ஏழரை சனியின் பிடியில் இருந்த தனுசு ராசிக்காரர்களை கேட்டால் தெரியும் பட்ட கஷ்டங்கள் என்ன என்று கதை கதையாக சொல்வார்கள்.

நிகழப்போகும் அதிசார சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியும் தொடங்குகிறது. சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் பயப்பட வேண்டாம்.

சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. தனுசு ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். ஏழரை சனியின் பிடியில் இருக்கும் ராசிக்காரர்களுக்கும் சனியின் பார்வை விழும் ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் பாதிப்புகள் என்று பார்க்கலாம்.

ஏழரை சனி என்றால் என்ன?

ஏழரை சனி என்றால் என்ன?

ஒருவரின் ராசிக்கு கோச்சார ரீதியாக சனிபகவான் 12,1,2ஆம் இடங்களில் அமரும் போது ஏழரை சனி ஆரம்பமாகிறது. ஏழரை சனி காலத்தில் சனிபகவான் நிறைய படிப்பினைகளைத் தருவார். சனிபகவான் ஆணவக்காரர்களின் தலையில் குட்டி வைப்பார். ஏழரை ஆண்டுகாலம் ஒருவருக்கு தர வேண்டியதை தந்து விட்டுத்தான் செல்வார். விரைய சனி, ஜென்ம சனி, பாதசனியாக பல பாடங்களைக் கற்றுத்தருவார். ஏழரை சனி காலத்தில் வாழ்க்கையை புரியவைத்து விட்டுத்தான் விலகுவார் சனிபகவான்.

 தனுசு தைரியம் அதிகரிக்கும்

தனுசு தைரியம் அதிகரிக்கும்

தனுசு ராசிக்காரர்களே கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவானின் பிடியில் இருந்து அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இன்னும் சில நாட்களில் உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. தொழிலில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எடுத்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். சனிபகவான் புதிய வேலையை தருவார். குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். கால்வலி பிரச்சினை தீரும் ஆரோக்கியம் கூடும். தேவையான தனவரவை தருவார். பணப்பற்றாக்குறை தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். தனுசு ராசியை சனி ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம். வெற்றியும் முன்னேற்றமும் தேடி வரும்.

 மகரம் பாத சனி பயப்பட வேண்டாம்

மகரம் பாத சனி பயப்பட வேண்டாம்

மகர ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. சனி கேதுவை விட்டு விலகுவதால் நன்மை. தனுசு ராசிக்கு தனாதிபதி தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். மகர ராசிக்கு தனாதிபதி சனி இப்போது இரண்டாம் வீட்டில் அமர்கிறார். இருளில் மூழ்கியிருந்த உங்களுக்கு வெளிச்சம் தென்படும் காலம்.
தடைகளையும் சோதனைகளையும் கொடுத்த சனி விலகும் நேரத்தினால் பெருமூச்சு விடுவீர்கள். இதுநாள் வரை குழப்பத்தில் இருந்தீர்கள். வருமானத்திற்கு வழியின்றி தவித்து வந்தீர்கள். இனி பணவருமானத்திற்கு வழியை ஏற்படுத்துவார். நஷ்டங்களை சந்தித்த நீங்கள் இனி லாபத்தை சந்திப்பீர்கள். ஏழரை சனி முடியலை இருந்தாலும் ஜென்மத்தில் பட்ட சிரமங்களை இனி படப்போவதில்லை. இரண்டரை வருஷம் நிம்மதி தருவார்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கடல் கடந்து செல்பவர்களுக்கு முன்னேற்றம் வரும். வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். சனி வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வார். கஷ்டங்கள் விலகும் சங்கடம் தீரும். பொறுமை தேவை இரண்டரை வருடத்தை எளிதாக கடந்து விடலாம்.

கும்ப ராசி ஜென்ம சனி

கும்ப ராசி ஜென்ம சனி

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம சனி காலமாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். புதிய தொழில் தொடங்குவீர்கள். தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு நன்மை செய்யும் காலம். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். பயணங்களில் எச்சரிக்கை தேவை. உழைப்பால் உயர்ந்த நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிசினஸ் செய்ய நினைத்தவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி தரும். நிறைய உதவி கிடைக்கும் வளர்ச்சிக்கு உதவும் நன்மைகள் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்றத்தை தரும் காலம் வந்து விட்டது.

மீன ராசி ஏழரை ஆரம்பம்

மீன ராசி ஏழரை ஆரம்பம்

மீன ராசிக்கு 12ஆம் வீட்டில் சனிபகவான் அமரப்போகிறார். விரைய சனி. உங்க ராசிநாதன் சனி அதிக பாதிப்பை தர மாட்டார். சாதக பாதகம் நிறைந்த சனிப்பெயர்ச்சி இது. முதலீடு செய்யும் போது கவனம் தேவை. பயணங்கள் பண்ணும் போது கவனம் தேவை. விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. சனி தசை நடப்பவர்களுக்கு இது பூரண பலனைத் தரும். சில விஷயங்களில் கவனம் தேவை. 30 வயதுக்கு உள் இருப்பவர்கள் கவனம். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொங்குசனியை அனுபவிப்பீர்கள். சொத்துக்களை சேர்ப்பீர்கள். பண விரையம் வரும் லாப சனியாக இருந்து விரைய சனியாக மாறுகிறார். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும். மருத்துவ செலவுகளை தருவார். குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள். பாசிட்டிவ் எண்ணங்கள் தேவை. தான தர்மங்கள் செய்யவும். திருமணம் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். வீணான வாக்குவாதங்கள், வார்த்தைகளை விட வேண்டாம். திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொறுமை தேவை. நிதானம் அவசியம். மாணவர்களுக்கு கவனம் தேவை. படிப்பில் கவனம் செலுத்துங்கள். சுய ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தால் தசா புத்தி நன்றாக இருந்தால் இந்த சனி பெயர்ச்சி வளர்ச்சியை தந்து உங்களைக் காப்பாற்றுவார்.

சனியின் பார்வையால் சங்கடமா?

சனியின் பார்வையால் சங்கடமா?

மேஷம், சிம்மம், விருச்சிக ராசிகளின் மீது சனிபகவானின் பார்வை படுகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலம், சிம்மம் ராசிக்கு களத்திர கண்டச்சனி, விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி காலம். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சனி பகவான் யோகத்தை தரப்போகிறார். எனவே சனியின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படுமோ என்று பயப்பட வேண்டாம். சனிகிழமையன்று நல்லெண்ணெய் தீபம் எற்றி வணங்க பாதிப்புகள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+