சனி பெயர்ச்சி பலன் 2023: குபேர யோகம் தரப்போகும் கும்ப சனி..யாருக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கும்
சென்னை: சனி பகவான் இந்த புத்தாண்டு முதல் சில ராசிக்காரர்களை குபேரனாக மாற்றப்போகிறார். காரணம் கும்ப ராசியில் ஆட்சி பெறறு அமரப்போகும் சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார். சனி பெயர்ச்சி எப்போது என்று பலவித குழப்பங்கள் இருந்தாலும் திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 17ஆம் தேதி தை 3ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். கும்ப சனியின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகின்றனர். இந்த சனி பெயர்ச்சியால் யாரெல்லாம் குபேர யோகத்தை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
சனி பகவான் ஆயுள்காரகன். கர்ம காரகன்,தொழில் உத்யோக காரகன். ஆயுள் அதிகரிக்கவும், நல்ல வேலை தொழில் அமையவும் நல்ல தொழிலாளர்கள் அமையவும் சனிபகவானின் அருள் அவசியம். கடுமையான உழைப்பாளிகள் சனியின் ஆதிக்கத்தைக் கொண்டவர்கள். ஒருவரின் தொழில் வியாபார ஸ்தலங்களில் நல்ல வேலையாட்கள் கிடைக்க சனிபகவானின் ஆசி அவசியம்.
சனிபகவான் கர்மகாரகன் ஒருவரின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அதற்கான பலாபலன்களை அனுபவிக்க வைப்பார். நன்மை தீமைகளை கொடுப்பதோடு தவறு செய்பவர்களின் தலையில் தட்டி அதற்கான படிப்பினைகளைக் கொடுப்பார். சனி பகவான் அஷ்டம சனி, விரைய சனியாக இருக்கும் போது சில பாதிப்புகளை கொடுப்பார். கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியாகவும், மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனியாகவும் அமரப்போகிறார். இந்த சனி பெயர்ச்சியால் பாதிப்புகளை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் அதற்கேற்ப பரிகாரங்களை செய்து கொண்டால் சிக்கல்கள் ஏற்படாமல் தப்பிக்கலாம்.
மேஷம்
மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. சனி பகவான் பொதுவாக 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது யோகத்தை கொடுக்கும். கும்ப ராசியில் அமரப்போகும் சனி மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகிறது. தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது. உங்களுடைய தசாபுத்தியும் சரியாக கை கொடுக்கும் பட்சத்தில் இந்த சனி பெயர்ச்சி நிச்சயம் உங்களை குபேரனாக மாற்றும் என்பது நிச்சயம். தடை பட்ட சுப காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். பண முதலீடுகளில் கவனம் தேவை.

ரிஷபம்
ரிஷப ராசி ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி தொழில் சனியாக அமரப்போகிறார். உங்களின் வருமானம் பலமடங்காகக் பெருகப்போகிறது. உங்களுக்கு இந்த முறை ஜாக்பாட் அடிக்கப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகள் பல மடங்கு லாபம் தரப்போகிறது. உங்களுக்கு திடீர் விரைய செலவுகளும் வரும். நல்ல வேலையும் வேலையில் புரமோசனும் கிடைக்கும். கண்ணை மூடிக்கொண்டு பணத்தை முதலீடு செய்யாதீர்கள். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பணத்தை தொழிலில் முதலீடு செய்யுங்கள். கூட்டுத் தொழில் நல்ல லாபத்தை தரும். கர்ம சனி வீட்டில் கர்ம காரியத்திற்காக செலவு செய்ய வைப்பார்.

மிதுனம்
மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரப்போகிறது. காரணம் கடந்த 5 ஆண்டு காலமாக கண்டச்சனி, அஷ்டமத்து சனியாக பல கஷ்டங்களை அனுபவித்தீர்கள். இந்த ஜனவரி முதல் அஷ்டமத்து சனி உங்களை விட்டு விலகப்போகிறது. நீங்கள் இனி ராஜாவாக வலம் வரப்போறீர்கள். உங்களுக்கு நல்ல உறக்கம் வரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். செல்வ வளம் அதிகரிக்கப்போகிறது. வேலையை இழந்து, பண பிரச்சினையால் குடும்பத்தில் சொந்த பந்தங்களை இழந்து நடுத்தெருவில் நின்றவர்கள் இனி நல்ல பலன்களை அனுபவிக்கப்போகிறீர்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரப்போகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது.

சிம்மம்
சிம்மம் ராசி சிம்ம லக்ன காரர்களுக்கு 7ஆம் வீட்டில் சனிபகவான் அமர்கிறார். கண்ட சனியாக இருந்தாலும் உங்களின் வேலை தொழில் நன்றாக இருக்கும் உழைப்பு அதிகரிக்கும். வேலையில் பொறுப்புகள் கூடும். புரமோசன் கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கும். கை நிறைய பணம் வரும். ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்ப்பீர்கள். உங்களை இந்த சனி பெயர்ச்சி குபேரனாக மாற்றப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் நல்ல உணவு சாப்பிடுவது அவசியம். தேவையற்ற பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுங்கள். சுத்தமான சுகாதாரமான உணவு பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். காரமான அதிக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

கன்னி
கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் நிறைய நன்மைகளையும் ஆதாயங்களையும் தரப்போகிறார். ஆறாம் வீட்டு சனி பகவான் அற்புத பலன்களைத் தரப்போகிறார். உங்களுக்கு பல திசைகளில் இருந்தும் பணம் வரும். கடந்த காலங்களில் பட்ட கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த உங்களுக்கு இனி எல்லாம் சுகமாக அமையப்போகிறது. உங்களின் எதிரிகளால் ஏற்பட்ட தொந்தரவுகள் இந்த மாதத்துடன் முடிவுக்கு வரப்போகிறது. கோர்ட், கேஸ் பிரச்சினை உங்களுக்கு சாதகமாக முடியப்போகிறது. உங்களின் வேலையில் உயரதிகாரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். இந்த ஆண்டு முதல் உங்களின் மன அழுத்தங்கள் நீங்கப்போகிறது.

தனுசு
தனுசு ராசி தனுசு லக்னத்தில் பிறந்தவர்களே.. இனி வரப்போகும் ஆண்டு உங்கள் ஆண்டாக அமையப்போகிறது. கடந்த ஏழரை ஆண்டுகாலமாக தொடர் நஷ்டம், வேலையில் பிரச்சினை, குடும்பத்தில் பிரிவு, தேவையற்ற மன உளைச்சலை சந்தித்த உங்களுக்கு இனி உங்களுக்கு எல்லா வகையிலும் சனி பகவான் நன்மைகளைத் தரப்போகிறார். மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் நிறைய வருமானத்தை தரப்போகிறார். கடன் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்கப்போகிறார். சொத்து சுகங்களை வாரி வழங்கப்போகிறார். உங்களக்கு பண வரவும் மன நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. எத்தனையோ சோதனைகளை கடந்த ஏழரை ஆண்டுகளில் கடந்து வந்திருக்கும் தனுசு ராசிக்காரர்கள் இனி பல சாதனைகளை நிகழ்த்தப்போகிறீர்கள். சந்தோஷங்களை உற்சாகத்துடன் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications