சனி பெயர்ச்சி பலன் 2023: கும்பத்தில் பயணிக்கும் சனிபகவான்..விபரீத ராஜயோகம் பெறும் 3 ராசிக்காரர்கள்
சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவான் தனது பார்வையால் மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளை பார்வையிடுகிறார். இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்று சொல்வார்கள். இந்த சனி பெயர்ச்சியால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டத்தையும் ராஜயோகத்தையும் அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் சனி பகவான் மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார். 30 ஆண்டுகள் சனி பகவான் ராசி மண்டலத்தை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகிறது.சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். பொதுவாகவே ஒருவர் 30 ஆண்டுகள் வாழ்ந்ததும் இல்லை. கும்ப சனியால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் குதூகலத்தை அனுபவிக்கப்போவது யார் யார் என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி வரும் 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனிப்பெயர்ச்சி யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது. யாருக்கெல்லாம் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் நிறைய ஆதாயமும் நன்மைகளும் கிடைக்கப்போகிறது. காரணம் 11ஆம் வீட்டில் சனிபகவான் ஆட்சிப்பெற்று அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். உழைப்புக்கு அதிபதியான சனி பகவான் லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் புரமோசன் தேடி வரும். திடீர் பண வரவு வரும். லாட்டரி, ரேஸ், பங்குச்சந்தைகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கப்போகிறது. வரப்போகும் பணத்தை எல்லாம் கொஞ்சம் தர்ம காரியங்களுக்கு செலவு செய்யுங்கள். இன்னும் 3 ஆண்டுகளுக்கு நல்லதே நடக்கும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். அவர்களின் நட்பு விசயங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் மீது தனி கவனம் வைப்பது அவசியம். ஆயுள்காரகன் சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்தின் மீது விழுவதால் நோய் பயம் அகலும். கோர்ட் கேஸ் வழக்குகள் முடிவுக்கு வரப்போகிறது. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

கடகம்
சனி பகவான் கடக ராசிக்கு எட்டாம் வீட்டில் மறையப்போகிறார். எட்டாம் வீட்டிற்கு அதிபதி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறது. அஷ்டமத்து சனி என்று அஞ்ச வேண்டாம். சனிபகவான் உங்களுக்கு சின்னச்சின்ன படிப்பினைகளையும் நல்ல அனுபவங்களையும் தரப்போகிறார். நல்லவர்களுக்கு சனி பகவான் நிறைய யோகத்தை தரப்போகிறார். கும்ப ராசியில் ஆட்சி பெற்ற சனி உங்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறார். உங்களின் செயல்களுக்கு ஏற்ப சனிபகவான் உங்களுக்கு அதற்கேற்ப பலாபலன்களைத் தருவார். வீடு வாங்கும் யோகம் வரப்போகிறது. இளைய தலைமுறையினர் உங்களின் நடத்தையில் கவனமாக இருப்பது நல்லது. மாற்றுப்பாலினத்தவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண்டச்சனியை தாண்டி வந்து விட்டீர்கள். உங்களுக்கு அதிக பணம் வரும் என்றாலும் அந்த பணத்தை நீங்கள் செய்யும் முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. சனி பார்வை உங்கள் ராசியை விட்டு விலகப்போவதால் மன தடுமாற்றங்கள் நீங்கும். உங்களுக்கு மிகப்பெரிய இடமாற்றம் ஏற்படப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கப்போகிறது. உயரதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் கவனம் தேவை. திடீர் அதிர்டமும் திடீர் யோகமும் வரப்போகிறது எனவே எதையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

கன்னி
சனி பகவான் கன்னி ராசிக்கு ஆறாம் வீட்டில் மறையப்போகிறார். ஆறாம் வீடு என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். கன்னி ராசிக்கு சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு அதிபதி. ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் கிரகங்கள் விபரீத ராஜயோகத்தை தரும். அதுவும் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த ராஜயோகத்தை தரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். போட்டி பொறாமைகள் நீங்கும். உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்கள் இனி பொடிப்பொடியாக நசுங்கி போகப்போகிறார்கள். உங்கள் ராசிக்கு 8, 12,3ஆம் வீடுகளின் மீது சனிபகவான் பார்வை விழுகிறது. மூன்றாவது நபர்களை குடும்ப விசயங்களில் தலையிட விட வேண்டாம். ஆயுள் ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானத்தில் சனி பார்வையிடுவதால் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் 3வது நபரை நம்பக்கூடாது. தேவையற்ற விரைய செலவுகள் வரும். அந்த செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். வீடு, வண்டி வாகனம் வாங்கலாம். அதற்கான நேரம் கைகூடி வரப்போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிறைய பண வரவையும் மன நிம்மதியையும் தரப்போகிறார் சனிபகவான்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே ஏழரை சனி விலகுவதால் சோதனைகள் முடியப்போகிறது. மூன்றாம் வீட்டிற்கு சென்று மறையும் சனிபகவான் மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறார். சனி பகவானால் இத்தனை ஆண்டுகாலமாக சங்கடத்தை அனுபவித்தவர்கள் இனி நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கப்போகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிந்து சுபிட்சங்கள் உண்டாகப்போகிறது. கடன் நோய் எதிரிகள் தொல்லைகள் நீங்கப்போகிறது. திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். ஜாக்பாட் மூலம் பணம் வரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி நிதிநிலை வலுவடையும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். யோகங்களை அள்ளித்தரப்போகிறார் சனிபகவான்.

மீனம்
மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சனி பகவான் அமரப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்துவது நல்லது. தேவையற்ற பொருளாதார நெருக்கடைகடிகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு போட்டி பொறாமை அதிகரிக்கும். மறைமுகமான எதிர்ப்பு போட்டிகள் வந்து போகும். திருமண வாழ்க்கையை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேரப்போகின்றனர். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக வரவேண்டிய பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். வாழ்க்கையில் மிகப்பெரிய பதவி தேடி வரும். பட்டமும் பதவியும் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த நல்ல காரியங்கள் இன்று நிறைவேறப்போகிறது. விரைய சனியாக இருந்தாலும் இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.













Click it and Unblock the Notifications