For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனிப்பெயர்ச்சி 2020: சனிபகவான் தரும் நோய்கள் - பரிகாரங்கள்

ஒருவருக்கு உடல் ஊனம் போன்றவற்றை தருவது சனிபகவான்தான். சனிபகவான் ஆயுள் காரகர் என்பதால் நோய்களை நிர்ணயிப்பதில் அவரது பங்கு முக்கியமானது.

Google Oneindia Tamil News

சென்னை: நவ கிரகங்களின் சனிபகவான் மெதுவாக நகரும் கிரகம். சனியின் பார்வைக்கு பலரும் பயப்படுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் இருக்கும் இடத்தைப் பொறுத்து சிலருக்கு நோய் பாதிப்புகள் ஏற்படும். சனியே ஆயுள் காரகர் என்கிற போது நோய்களை நிர்ணயிப்பதில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜோதிடத்தில் மறைவு ஸ்தானம் எனப்படும் 6,8,12 ல் உள்ள அனைத்து தீய விஷயங்களுக்கும் சனியே முழு காரகர். அதில் நோய் என்பது முக்கியமான ஒன்று. ஜாதகத்தில் எந்த இடத்தில் சனி இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நமது உடலில் எலும்பு பகுதி,மூட்டுகள்,இடுப்பு பகுதி போன்றவற்றிற்கு சனியே அதிபதி.ஜாதகத்தில் சனி மோசமான நிலையில் இருக்கும் போது அது தொடர்பான நோய்களான மூட்டு வலி, கால் வலி போன்றவற்றை கொடுப்பார்.நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் சனியின் கைகளில் தான் கொடுக்க பட்டுள்ளது. போலியோ, மூட்டு நோய்கள், நோய்கள் சனியின் முழுமையான ஆதிக்கத்தில் ஏற்படும் நோய். உடல் ஊனம் போன்றவற்றை தருவதும் சனியே.

எந்த தேதியில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் தெரியுமாஎந்த தேதியில் பிறந்தவர்கள் யாரை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் தெரியுமா

மரண பயம்

மரண பயம்

சனி பகை ராசியான கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளில் நின்று இருந்தால், உடல் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மனம் சங்கடத்தில் இருக்கக்கூடும். நோய்க்குரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதில் கூட நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். சின்ன காய்ச்சல் வந்தால் கூட மரண பயம் அப்பிக் கொள்ளும். ஜாதகத்தில் சனிபகவான் பாதகாதிபதி, மாரகாதிபதி, 6ஆம் அதிபதி, அஷ்டமாதிபதி போன்ற லக்கின அசுபர்களிடம் அவர் தொடர்பு பெறாமல் இருப்பது நல்லது. அதேபோல சனியே அஸ்தமனம், ராகு செவ்வாய் சேர்க்கை பெறாமல் இருப்பது இன்னும் நல்லது.

வாகன பயணத்தில் கவனம்

வாகன பயணத்தில் கவனம்

சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நீச்ச ராசியான மேஷ ராசியில் நின்று இருந்தால், மூலநோய் வரக்கூடும். மலச்சிக்கல் வரும். ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும். ஏழரைச் சனி அல்லது அஷ்டம சனி காலத்தில் இந்த ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் உண்டாகும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

சனி பகவானும் நோய்களும்

சனி பகவானும் நோய்களும்

சனி குரூரர் என்பதால், அவர் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெறுவது நல்லது. என்றாலும் 6ஆம் இடத்தை விட 8, 12 ஆகிய இடங்களில் நிற்பது மிகவும் நல்லது. 6ஆம்இடத்தில் சனி நின்றால், அந்த நபர் நோய்க்காகவே பிறந்தவர் என்று தான் கூற வேண்டும். தொற்று நோய்கள் உடனே பிடிக்கும். ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில் உடலில் உள்ள அனைத்து நோய்களும் வெளிப்படும். சிலருக்கு மரணம் உண்டாகலாம்.

சனியும் கிரக கூட்டணியும்

சனியும் கிரக கூட்டணியும்

சனி பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், உடலில் பித்த நீர் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதை வஸ்துகள் பயன்படுத்தக் கூடாது. கை, கால் சோர்வு அடிக்கடி ஏற்படும். வேலைக்கு உடல் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விடும். அடிக்கடி கால் இடறி விழுதல், கை, கால் எலும்பு முறிவுகள் உண்டாகும்.

ஆயுள் காரகன் சனிபகவான்

ஆயுள் காரகன் சனிபகவான்

சனி கிரகம் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பார். தொற்று நோய்கள் பருவகால நோய்கள் உடனே தாக்கக் கூடும். அந்த ஜாதகரின் ஆயுள் சராசரியாக எழுபது வயது வரை இருக்கலாம்.

நோய் நீக்கும் பரிகாரங்கள்

நோய் நீக்கும் பரிகாரங்கள்

சனிபகவானால் ஏற்படும் நோய்கள் நீங்க நல்லெண்ணெய் குளியல் ரொம்பவும் நல்லது. எள் எண்ணெய் சனியின் ஆதிக்கம் நிறைந்தது. ஆண்கள் சனிக்கிழமை, புதன்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பெண்கள் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனிக்கிழமை சனி ஹோரையில் எள் எண்ணெய் தீபம் ஏற்றலாம். முதியவர்கள் ஊனமுற்றவர்களுக்கு தானம் செய்யலாம் நோய்பாதிப்புகள் நீங்கி பரிகாரம் கிடைக்கும்.

English summary
The Sani bhagavan is a slow moving planet. Many people are afraid of the sight of Saturn. Depending on the place of Saturn in one's horoscope, some people will get diseases. His role in the diagnosis of diseases is significant when Saturn is the lifeblood. Saturn is the absolute culprit for all the evil things in 6,8,12 which is called the hiding place in astrology. Disease is one of the important ones. Let's see what benefit is available if Saturn is in any place in the horoscope.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X