For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்கழி மாதம் சனிக்கிழமை... புதன்ஓரையில் தலைவரான ராகுல்காந்தி - காரணம் தெரியுமா?

மார்கழி மாதம் சனிக்கிழமை புதன்ஓரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றுள்ளார் ராகுல்காந்தி.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் உணர்ச்சிவசப்பட்ட மன்மோகன் சிங்- வீடியோ

    சென்னை: ராகுல்காந்திக்கு சனிபகவான் யோகாதிபதி என்பதனால்தான் மார்கழி மாதம் சனிக்கிழயைன்று புதன் ஹோரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    பாஜகவினரால் பப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் பன்முகத்திறமை கொண்டவர். அவர் தலைவரானது பாஜகவிற்குத்தான் நன்மை என்று கிண்டலடிக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

    ராகுல்காந்தி பிரசாரத்திற்கு வந்தலே போதும் எதிர்கட்சியினர் ஜெயித்து விடுவார்கள் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை எப்படியோ இனி அப்படியல்ல என்று அவரது ஜாதக கட்டமும், தலைவரான பின்னர் அவர் பேசிய ஆணித்தரமான கருத்துக்களும் கூறுகின்றன.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்சில் எம்ஃபில் பட்டம் பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பால பாடம் படிக்க வந்த ராகுல் காந்தி காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்த போதும் எம்.பியாக மட்டுமே நாடாளுமன்றத்தில் பணியை செய்தார்.

    காங்கிரஸ் கட்சியில் பதவி

    காங்கிரஸ் கட்சியில் பதவி

    காங்கிரஸ் கட்சியில் துணை தலைவராக இருந்த போதிலும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக்கொள்ளவில்லை. இதனாலேயே பப்பு என்று பாஜகவினரால் கிண்டலடிக்கப்பட்டார் ராகுல். ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தனது பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

    ஏழரை சனி காலம்

    ஏழரை சனி காலம்

    ராகுல்காந்தியின் ராசி, நட்சத்திரத்தில் பல குழப்பங்கள் இருந்தாலும் ராகுல்காந்திக்கு தசாபுத்திகளும், கிரக பெயர்ச்சிகளும் சரியில்லாமல் இருந்தாலேயே இதுவரை தலைமை பொறுப்புக்கு வராமலேயே இருந்துள்ளார். இப்போது தசாபுத்திகளும், கிரக பெயர்ச்சிகளும் மாறியுள்ளதாலேயே தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்.

    சனிப்பெயர்ச்சி

    சனிப்பெயர்ச்சி

    சனிபகவான் ராகுல்காந்திக்கு யோககாரகன் என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள். 2019ஆம் ஆண்டு அவருக்கு ராகு திசை 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் போகிறது. இது லோக்சபாவில் எதிரொலிக்கும் என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அடுத்து நடக்க உள்ள ராகு பெயர்ச்சியும், 2020வரை சனிப்பெயர்ச்சியும் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள ராகுல்காந்திக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர்.

    நாட்டின் பிரதமர் ஆகும் தகுதி?

    நாட்டின் பிரதமர் ஆகும் தகுதி?

    47 வயதாகும் ராகுல்காந்தி இதுநாள் வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். காங்கிரஸ் கட்சிதான் எனது குடும்பம் என்றும் வெறுப்போடு பார்ப்பவர்களையும் அன்பால் அரவணைப்போம் என்று தலைவருக்கு உரிய முதிர்ச்சியோடு பேசியுள்ளார் ராகுல்காந்தி.

    ஆட்சிக்கட்டிலில் காங்கிரஸ்

    ஆட்சிக்கட்டிலில் காங்கிரஸ்

    நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றும் கூறியுள்ள ராகுல்காந்தியின் தோள் மீது மிகப்பெரிய சுமை உள்ளது. அவர் முன் உள்ள சவால்களை சமாளித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினால் மட்டுமே அவர் தலைவரானதற்கான முழு வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட முடியும். 2019 லோக்சபா தேர்தல் இதற்கெல்லாம் பதில் சொல்லும்.

    English summary
    Saturn is a yogakaraka planet for Ragul gandhi's horoscope. he will progress in the main period of Rahu which is starting in 2019 and during elections of Loksabha, he will be in Sagittarius which is indicating a good performance by his party under his leadership.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X