For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனி பகவான் ஹீரோவா? இல்லை வில்லனா? #சனிபெயர்ச்சி2017

சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி...அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஒருவன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது.

சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

நவ கிரஹங்களில் கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். 'சனை' என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு!

பார்வையில் விபரீதம்

பார்வையில் விபரீதம்

சூரிய புத்திரன் சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! சாயாதேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் தனது லோகத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள்.

சனீஸ்வரர்

சனீஸ்வரர்

சனீஸ்வரரும், சாயாதேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி ஈஸ்வர பட்டம் அளித்தார்.

சனிபகவான் தீர்ப்பு

சனிபகவான் தீர்ப்பு

ஒரு ஜாதகருக்கு ஜாதக ரீதியான நன்மையான அல்லது தீமையான பலன்கள் தருவதில் முக்கிய பங்கு வகிப்பவர் சனிபகவான் தான். இவர் தலைமை நீதிபதி போன்றவர் ஆவார்.

இவர் அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுபவர்.

சிபாரிசு எடுபடாது

சிபாரிசு எடுபடாது

மனிதனுக்கு துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பார். மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கஷ்டப்படும் நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்கும் இவர்தான் காரணம். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுப்படாது. இவர் அரசனை மட்டும் இல்லை அனைத்து மனிதனையும் தண்டிப்பவர்.

தண்டனை அல்ல

தண்டனை அல்ல

மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்க்குதான் அதனால் இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில் தான் உள்ளது. எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. நம்மை திருத்தும் தெய்வம்.

கர்மவினைகள்

கர்மவினைகள்

இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நம்மை சாதிக்க செய்வது நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள்.

சனிபகவான் யார்?

சனிபகவான் யார்?

சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல. அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு. இறப்பு இருப்பவனே பிறக்க இயலும். அதுதான் நியதி என்கிறார் உடலில், ஆன்மவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனிபகவான் சுட்டிக்காட்டுகிறார்.

சனிப்பெயர்ச்சியில் வணங்குவோம்

சனிப்பெயர்ச்சியில் வணங்குவோம்

சனி பெயர்ச்சி நாளில் கர்ம காரகனான சனி பகவானின் அருளை பெற அனைத்து ராசியில் பிறந்தவர்களுமே வணங்குவது நல்லது. சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.

English summary
Shani Dev was born to Surya Dev (The Sun God) and Goddess Chhaya Shani Deva is known as the elder brother to the God of the Underworld- Lord Yama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X