• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிக் டாக், வாட்ஸ் அப் அடிமைகளாக மாறுவதற்கு யார் காரணம் தெரியுமா

|

சென்னை: பள்ளிக்கூடம் போகிற பசங்க முதல் பல்லு போன பாட்டி வரைக்கும் இன்னைக்கு டிக் டாக்ல போஸ்ட் போடுறாங்க. சோசியல் மீடியாதான் இன்றைக்கு பலரோட வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கு. சிலரோட வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும். எங்கே இருந்துதான் பிரச்சினை வருமோ வந்து நல்லா இருந்த குடும்பத்தை கும்மியடிச்சு சிதைச்சுட்டு போயிரும். இப்போ ஸ்மார்ட்போன் வந்ததும் வந்துச்சு அதுல உள்ள பல ஆப்ஸ்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கிற மாதிரிதான் இருக்கு. ஏன் இதெல்லாம் நடக்குது. ஆப்ஸ்களுக்கு அடிமையாகி கிடக்கறாங்களே அவங்களுக்கு எதனால இப்படி நடக்குதுன்னு ஜோதிடர் N.C.கிருஷ்ணன் நாயுடு ஆய்வு பண்ணி ஒரு கட்டுரையை தன்னோட பேஸ்புக் பக்கத்தில எழுதியிருக்கிறார் பாருங்க. உங்க ஜாதக கட்டத்தில ராகு எப்படி இருக்கிறார் என்ன தசாபுத்தி நடக்குதுன்னு பாருங்க.

இன்னைக்கு நான் வெளிப்படையாக பேச பல காரணங்கள் இருக்குதுங்க, அநேக பிள்ளைங்க பிஞ்சுலே பழுத்து வெம்பிப்போற காரணத்துனால, நான் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். இன்றைக்கு டிக் டாக்(,Tik Tik) , யு டுயூப் (You Tube), வீடியோ கேம்ஸ்(Video Games), இதுபோல இன்னும் ஏகப்பட்ட ஆப்ஸ் இருக்கு இது எல்லாமே ராகுவோட கட்டுப்பாட்டில இருக்கிற விஷயங்கள் தான்.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னாடி, இப்படி கம்ப்யூட்டரே இல்ல, வீடியோ கேம்ஸ் மட்டும் இருந்துச்சு, யு டுயூப், முகநூல், ஆப்ஸ் எதுவுமே இல்லே. ஆனால் தற்போது, விஞ்ஞானம் வளர வளர பிரச்சனையும் ஜாஸ்தி ஆயிடுச்சு. சரி மேல சொன்ன அத்தனை விஷயங்களுக்கும் காரகம் வகிப்பது ராகு தான். அவர்தான் எல்லா சோசியல் மீடியா, கம்ப்யூட்டர் IT துறையை நிர்வாகம் பண்றவர். ராகுவோட , 8 12 ஆம் வீடுகள், சுக்ரன் சம்பந்தப்படும் போதுதான் இந்த மாதிரியான விபரீதங்கள் நடக்குது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

இந்த டிக் டாக் ( TIK TOK ) ஆப் வந்ததிலிருந்து, நெறைய பெண்கள் வாழ்க்கை, சீரழிந்து போனதை நாம பாத்துருக்கோம். டிக் டாக் அதிகமா யூஸ் பண்ற நாடுகளில், இந்தியாதான் முதலிடம், ஆமாம் 40 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்காங்க.

சுக்கிரன் சனி ராகு

சுக்கிரன் சனி ராகு

ஒரு டீன் ஏஜ் பையனுக்கோ பொண்ணுக்கோ, ராகு தசை நடக்கும் போது ஜாதகத்தில், ராகு 8 அல்லது 12 இல் இருந்து, சுக்கிரன் அல்லது சனி அல்லது செவ்வாய் சம்பந்தம் படுதுனு வச்சுக்குவோம், அப்போ கண்டிப்பா தப்பு நடக்க வாய்ப்பு உண்டு.

ஆப்ஸ் அடிமைகள்

ஆப்ஸ் அடிமைகள்

12 ஆம் இடம் இருக்கு பாருங்க, அது உங்க ஆழ்மனது ஆசைகள், தூங்குற இடம், தனிமை அல்லது ஒதுக்கப்பட்ட இடங்கள், இந்த மாறி தனிமைல இருந்து இன்டர்நெட்ல தவறான விஷயங்கள் பார்பதுன்னு பல விஷயங்கள் இருக்குதுங்க. மேலும் ராகு தசை இல்லாம, 12 ஆம் அதிபதி தசை நடந்து, சுபர் பார்வை இல்லாம, 12 ஆம் இடம் பாபர் சம்பந்தம் பட்டுட்டா, கண்டிப்பா அவர்கள், தனிமைப்படுத்தபட்டு இந்த கேம்ஸ், யுடுயூப், முகநூல், ஆப்ஸ், இல்ல டிக் டாக், இதுல ஏதாவது ஒண்ணுக்கு கண்டிப்பா அடிமையா இருப்பாங்க.

டிக் டாக் சுக்கிரன்

டிக் டாக் சுக்கிரன்

டிக் டாக் அடிமைகள் இருக்காங்க பாருங்க, அவங்களுக்கு சுக்கிரன் கண்டிப்பா டச்ல இருப்பாரு, என்னான்னா?.. விதவிதமா யோசித்து, மேக்அப்பு பண்ணிக்கிட்டு, கொஞ்சம் கிளமர் ஆகவும், வீடியோஸ் பாக்கிறோம் நம்ப டிக் டாக்ல,அப்ப அதிகமான கமெண்ட்ஸ், லைக்ஸ், வரணும்னு, சுக்கிரன் அந்த ஆசையை அவர்களிடம் தூண்டிவிடறார்.

சம்பாதிக்கும் மக்கள்

சம்பாதிக்கும் மக்கள்

12 ஆம் அதிபதி, ராகு இவங்களோட கைகோர்த்து இந்த காம்பினேஷன் ல இப்படி , அவங்க ஒரு மாய உலகத்துல, அடிமையாக உலா வருவாங்க தினசரி எப்படி வீடியோஸ் போடலாம், அப்படீன்னு யோசிச்சு போடுறாங்க. சரி இன்னும் சிலர், இதை வெறும் கேளிக்கைக்காக யூஸ் பண்ணீட்டு, addict ஆகாமல் ஒரு எல்லைக்குள்ள வச்சிருந்தா அப்போ அவங்களுக்கு கண்டிப்பா சுபர் தொடர்பு இருக்கணும். சரி அதேபோல இன்னும் சிலர் இந்த அமைப்புள்ள, இதையே வேலையாக மாற்றிக்கொண்டு, பெரிய சாப்ட்வேர் துறைல என்ஜினீயர் ஆக வேலை பாக்கறாங்க.

பெற்றோர்கள் கையில இருக்கு

அதனால 12 ஆம் இடம் அப்படிங்கறது, வெறும் சுபவிரயம் அல்லது விரயம் அல்லது சயணம், சிறைச்சாலை மட்டுமின்றி இதனுடைய இன்னொரு பரிமாணமாக இத்தனை விஷயங்கள் உள்ளது என்பதை கவனிக்கவும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கைகளில் உள்ளது. எனவே கவனிங்க. அவங்கப்போக்கில் போயி அவங்கள நலவழிபடுத்துனா, அது மிக சிறந்த மற்றும் சரியான நெறிப்படுத்துதல் ஆக இருக்கும். சில பெற்றோர்களே டிக் டாக் அடிமைகளாக மாறினா எப்படி என்று கேட்கிறீர்களா? அதுவும் ராகு சுக்கிரன் கைங்கர்யம்தான் மக்களே.

 
 
 
English summary
Rahu is the materialistic planet and all the things that we use for the pleasure is Rahu. Social media today is the life of many people. so many people addicted Tik Tok apps and you tube, Look at your horoscope and see what Rahu and Sukhran combination.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X