For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிச.26ல் சூரிய கிரகணம்: திருப்பதி, சபரிமலை கோவில்களில் தரிசனம் ரத்து - பக்தர்கள் கவனத்திற்கு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25ஆம் தேதி இரவு முதல் டிசம்பர் 26 நண்பகல் 12 மணிவரை மொத்தம் 13 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே

Google Oneindia Tamil News

திருப்பதி: இந்த ஆண்டு சூரிய கிரகணம் விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி டிசம்பர் 26 வியாழக் கிழமை உலகளவில் அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது. இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25ஆம் தேதி இரவு 11 மணி முதல் டிசம்பர் 26ஆம் தேதி நண்பகல் 12 மணிவரைக்கும் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. விடுமுறை நாட்களில் திருப்பதி பயணத்திற்கு திட்டமிட்டுள்ளவர்களாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Solar eclipse 2019: Tirumala,Sabarimala temples to be closed on December 26

ஒரு ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு.
பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும், அமாவாசை அன்று சூரிய கிரகணமும், ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நிகழ உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற பெரிய பிரபலமான கோயில்கள் கிரகணத்தின் போது பல மணிநேரங்கள் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மார்கழி மாதம் பூஜைக்கு செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்க கொள்ளவேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே இந்த அறிவிப்பினை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் 13 மணி நேரம் அடைக்கப்படும் அதாவது டிசம்பர் 25 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி 26 ஆம் தேதி பிற்பகல் 12 மணிவரை கோவில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Solar eclipse 2019: Tirumala,Sabarimala temples to be closed on December 26

இதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலும் டிசம்பர் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26ம் தேதி காலை 8.13 மணி முதல் 11.13 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதனால் சபரிமலை கோவிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை 4 மணி நேரம் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

English summary
The solar eclipse falls between 8.08am to 11.16am on December 26. However, as is the traditional practice to close down the temple prior to the eclipse time, the officials have announced that the Tirumala Temple as well as all other temples under the administrative purview of the TTD in Tirupati and elsewhere in the country will remain closed from 11pm on December 25 to 12 noon on December 26.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X