For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேது கிரஹஸ்த முழு சூரிய கிரகணம் 2021 - இந்தியாவில் பார்க்க முடியுமா?

சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் இந்த கிரகணம் தெரிய வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்த ஆண்டின் 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நிகழ உள்ளது. அன்றைய தினம் காலை 10:59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 வரை இந்த வானியல் நிகழ்வு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது எனவும் அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவில் மட்டுமே தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன் பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பிசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு மிகவும் சிறியது என்பதால், நிலவால் சூரியனை மறைக்க முடியாது. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது, நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோற்றமளிக்கும்.

முழு சூரிய கிரகணம்

முழு சூரிய கிரகணம்

நவம்பர் 19 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த முறை முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஜூன் 10ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த ஆண்டின் 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நிகழ உள்ளது. அன்றைய தினம் காலை 10:59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 வரை 4 மணி நேரம் 8 நிமிடங்கள் வரை இந்த வானியல் நிகழ்வு நீடிக்கும்.

கேது கிரஹஸ்த கிரகணம்

கேது கிரஹஸ்த கிரகணம்

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிட ரீதியாக பார்த்தால் சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று கூறப்படுகிறது. ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்று தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கிரகணம் தெரியாது

இந்தியாவில் கிரகணம் தெரியாது

கார்த்திகை மாதம் 18ஆம் தேதி டிசம்பர் 04ஆம் தேதி சனிக்கிழமை பகல் 10.59 மணி முதல் பிற்பகல் 03.07 மணி வரை கேட்டை நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவில் தெரியும். 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகண நிகழ்வை இந்தியாவில் காண முடியாது என்றாலும் அதை ஆன்லைனில் நேரடியாகப் பார்க்கலாம்.

சூரிய கிரணத்தை பார்க்கலாமா

சூரிய கிரணத்தை பார்க்கலாமா

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக்கூடாது. அதற்கென தயாரிக்கப்பட்ட கண்ணாடியை அணிந்து கொண்டு தான் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடி பல மடங்கு ஒளியை குறைத்து, நம் கண்களுக்கு பாதுகாப்பான அளவு பார்க்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. கிரகணத்தை பார்ப்பதற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் சூரிய ஒளி வடிகட்டியைப் பயன்படுத்தி ஒரு லென்ஸ் வழியாக கிரகணத்தை திரையிட்டு பார்க்கலாம்.

English summary
The second and the last solar eclipse of the year will happen on December 4, 2021. This day will be a Saturday. The time of the solar eclipse will start from 10:59 am and will go on till 3:07 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X