சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022: சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும் கடன்கள் நீங்கும்
சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் தமிழ் புதுவருடத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ளது. தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்வார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்க்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர். சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்ம ராசி
சிம்ம ராசியில் உள்ள மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு யோகமான ஆண்டாக இருக்கப்போகிறது. சுப கிரகமான குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் சுபகாரியங்களில் தடை ஏற்படும் புதிய முயற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் மருத்துவ செலவுகள் வரவும் வாய்ப்புள்ளது.

கடன் பிரச்சினை நீங்கும்
குரு பகவானின் பார்வை விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவது அதிர்ஷ்டத்தை தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும் புதிய கடன்கள் வாங்கலாம். வீடு சொத்து வாங்குவதற்கு கடன் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உள்ளது. அடுத்தவர்களை நம்பி தொழில் வியாபாரத்தில் ஒப்படைப்பதை தவிர்க்கவும்.

லாபம் அதிகரிக்கும்
சனி பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பொருளாதாரத்தில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு அடிக்கடி செய்து வர பாதிப்புகள் குறையும் தொழிலில் நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும்.

சுப காரியம்
சனிபகவான் ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வது கண்டச்சனி காலமாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் மீன் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். சகோதரர்களுடன் சொத்துப் பிரச்சினைகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய மன குழப்பங்கள் வரும் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மின்சாரம் நெருப்பு போன்றவற்றில் கவனமாக இருப்பது நல்லது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. பணத்தட்டுப்பாடு நீங்கும்.

பரிகாரம்
புதன்கிழமைகளில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் லட்சுமி நரசிம்மரை வழிபடலாம் அதேபோல சரபேஸ்வரரை வழிபட பாதிப்புகள் நீங்கும். துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம் பசுவுக்கும் பைரவருக்கும் தினமும் உணவுப் பொருட்களில் கொடுக்க பாதிப்புகள் நீங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications