உதயமான சுக்கிரன் தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி..பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் நீங்கதான்!
சென்னை: சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் தனுசு ராசியில் டிசம்பர் 5ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். அஸ்தங்கமாகியிருந்த சுக்கிரன் தற்போது உதயமாகியுள்ளார். இனி எல்லோருக்கும் எல்லாம் நலமாகவே நடக்கும். தனுசு ராசியில் பயணம் செய்யப்போகும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.
டிசம்பர் 5ம் தேதி சுக்கிர பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதன் மூலம் தனுசு ராசியில் புதன், சுக்கிர சேர்க்கை உண்டாகும். டிசம்பர் 16ல் நடக்கும் சூரிய பெயர்ச்சியும் தனுசு ராசியில் நடக்கும் போது, சுக்கிரன், புதன், சூரியன் என மூன்று கிரகங்களின் சேர்க்கை உண்டாகும். இது ஜோதிட ரீதியாக சிறப்பான யோகத்தை தரப்போகிறது. சுக்கிரன் - புதன் கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக லக்ஷ்மி நாராயண யோகத்தை டிசம்பர் மாதம் முழுவதும் சில ராசியினர் பெற உள்ளனர். இந்த சுக்கிரன் பெயர்ச்சி யாருக்கு என்ன யோகத்தை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம். பாக்ய ஸ்தானத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயண யோகம் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது. இந்த மாதம் பொருளாதார வளம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின முயற்சிக்கான பலன் இப்போது கிடைக்கும். ஆன்மீக யாத்திரை செல்வதற்கான அற்புதமான மாதமாகும். மாணவர்களுக்கு இது சாதகமான மாதமாகும்.

ரிஷபம்
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைகிறார். புதன் உடன் சுக்கிரன் இணைவதால் உங்களுக்கு புதிய யோகத்தை தரக்கூடும். மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் செய்யலாம்.

மிதுனம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். மிதுன ராசிக்கு 7ம் வீடான களத்திர ஸ்தானத்தில், களத்திர காரகன் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு உங்களின் துணை, குடும்ப உறுப்பினர்கள் மூலம் மிகவும் சாதகமான பலன்கள், ஆதரவு கிடைக்கும். சுக்கிரனின் நேரடிப் பார்வையும், சுக்கிரனுடன் ராசி நாதன் புதன் சேர்ந்திருப்பதால் பல வகையில் அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள். நிதி விஷயங்களில் உங்களின் திட்டமிடல் ஓரளவுக்கு கைகொடுக்கும். உங்களுக்கு இந்த மாதம் செலவு அதிகரிக்கும். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியானவராக இருப்பீர்கள். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

கடகம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கையால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் புதன் உடன் பயணம் செய்வதால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும்.
இந்த மாதத்தில் உங்களின் திறமையும் ஆற்றலும் வெளிப்படும். சுகமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல உணவு சாப்பிடுவீர்கள். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. வாழ்க்கை துணையின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்று வாருங்கள்.காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது டிசம்பர் மாதத்தில் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

கன்னி
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்கிறார். சுக ஸ்தானத்தில் யோகம் கைகூடி வந்துள்ளது. சொத்து சேர்க்கை ஏற்படும். மகிழ்ச்சிகரமான மாதம் மங்களகரமான செய்திகள் தேடி வரும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் ஏற்பட்ட நோய்கள் நீங்கும்.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம்.

துலாம்
ராசி நாயகன் சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் புதன் உடன் இணைந்து அமர்ந்து உள்ளார். சிறு தூர பயணங்கள் சந்தோஷத்தை தரும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். ஆன்மீக பயணம் மன அமைதியைத் தரும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை நெய் தீபம் வழிபட நன்மைகள் நடக்கும்.

விருச்சிகம்
உங்கள் ராசியில் அஸ்தங்கமாக பயணம் செய்து வந்த சுக்கிரன் பொலிவுடன் உதயமாகியுள்ளார். உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தான பயணம் செய்யும் சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் புதிய வரவுக்கான அடித்தளம் அமையும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

தனுசு
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் புதன் சூரியன் உடன் பயணம் செய்யப்போகிறார்.நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மகாலட்சுமியின் நல்லருளைப் பெறுவீர்கள். எதிர்காலத்திற்காக நீங்கள் போடும் சில திட்டங்கள் வெற்றிகரமாக கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் முக்கியத்துவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு, ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். குடும்ப வாழ்க்கை இனிமையானதாக நகரும். காதல் வாழ்க்கையில் உற்சாகமான தருணங்களை அனுபவிப்பீர்கள். பயணங்கள் செய்ய வேண்டியது இருக்கும். அது மகிழ்ச்சியும், அனுகூலத்தையும் தரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மையும், போட்டிகளில் வெற்றியும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர மேலும் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மகரம்
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் புதன், சூரியன் உடன் கூட்டணி அமைத்து குடியேறியுள்ளார். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சுப விரைய செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கிக் கொடுக்கலாம் நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்
சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் புதனுடன் பயணம் செய்யப்போகிறார். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் அதிகரிக்கும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும் மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தயாராகுங்கள்.

மீனம்
உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
வேலை செய்யும் இடத்தில் உங்கள் செயல்திறன் மேம்படும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வீடு தேடி வரும். உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மீன ராசிக்காரர்களுக்கு உற்சாகமான மாதமாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications