திருப்பதி பிரம்மோற்சவம் 2021: அக் 7ல் கொடியேற்றம் 11ல் கருடவாகன சேவை - மாட வீதி உலா ரத்து
திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் 7ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகன சேவைகள் ரத்து செய்யப்படுகின்றது. கோயிலுக்குள்ளேயே காலையும், மாலையும் அந்தந்த வாகனங்களில் உற்சவ மூர்த்தி
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மலையப்பசாமி வாகன வீதி உலா ரத்து செய்யப்படுவதாகவும் கோயிலுக்குள்ளேயே காலையும், மாலையும் அந்தந்த வாகனங்களில் எழுந்தருளும் ஏகாந்த சேவை நடைபெறும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். ஏழு கொண்டல வாடா கோவிந்தா... கோவிந்தா... ஸ்ரீனிவாச கோவிந்தா வெங்கட ரமணா கோவிந்தா என்ற முழக்கம் எதிரொலிக்க திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவைக் காண லட்சக்கணக்காக பக்தர்கள் வருகை தருவார்கள்.

பிரம்மாவும் சிவனும் இணைந்து திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடத்தினர் என்பது புராண கதை.
திருப்பதியில் பல ஆண்டுகாலமாக பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாகவே நடைபெற்று வந்துள்ளது.மன்னர் ஆட்சி, நவாப், ஆங்கிலேயர்கள் ஆட்சி, சுதந்திரத்திற்குப் பின் என எப்போதுமே வழக்கமான பிரம்மாண்டத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது.
பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூலவர் ஏழுமலையானையும் உற்சவர் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வருவதையும் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
கொரோனா வைரஸ் பரவல் அனைத்தையும் முடக்கி போட்டு விட்டது. கடந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வரவில்லை மாறாக ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளின்படி பிரம்மோற்சவ விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்தை பக்தர்கள் இன்றி ஏகாந்தமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழா வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றிரவு பெரிய வாகன சேவையும் நடைபெறும். இதில் முக்கிய வாகன சேவைகளான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. 12ஆம் தேதி தங்க தேர்த்திருவிழாவும், 14ஆம் தேதி தேர்திருவிழாவும், நிறைவு நாளான 15ஆம் தேதி காலை சக்கர ஸ்நானமும் அன்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் இறைவன் எழுந்தருளுகிறார் அன்றிரவு கருடவாகன சேவை நடைபெறுகிறது. திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிரம்மோற்சவ விழாவின் 5ஆம் நாளன்று கருட வாகன சேவையில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications