பில்லி, சூனியம் செய்வினை தீர்க்கும் நிகும்பலா யாகம்- நன்மை தரும் யாகங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக நலன் கருதி ஒவ்வொரு அமாவாசையிலும் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் 'நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

அகத்தியர்,திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது. நெருப்பு மூலம் தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு பயன்படுகிறது.

கடவுளுக்கு ஹோமம்

கடவுளுக்கு ஹோமம்

ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது.

ஹோமத்தில் பொருட்கள்

ஹோமத்தில் பொருட்கள்

யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பல நன்மைகள் கிடைக்கின்றன.

யாகத்தினால் நன்மை

யாகத்தினால் நன்மை

ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் பகுதிகள் நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றை தூய்மை படுத்துவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹோமத்தின் பயன்கள்

ஹோமத்தின் பயன்கள்

ராசிகள், நட்சத்திரங்களுக்கு ஏற்ப பலவகையான சமித்துகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள் ஹோமத்தில் அக்னிக்கு அர்பணிக்கப்படுகிறது. மன்னர்களும், இன்றைக்கு அரசியல்வாதிகளும் பல ஹோமங்களை செய்து நன்மையடைந்துள்ளனர்.

திருமணம், குழந்தை வரும் தரும்

திருமணம், குழந்தை வரும் தரும்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஹோமங்கள் மற்றும் பல யாகங்கள் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த வேத விற்பனர்களை கொண்டு செய்யப்படுகின்றன. தன்வந்திரி ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், சந்திர சாந்தி ஹோமம், குரு சாந்தி ஹோமம், கேது பிரீத்தி ஹோமம், ராகு பிரீத்தி ஹோமம், செவ்வாய் தோஷ நிவர்த்தி ஹோமம், சூரிய சாந்தி ஹோமம், புதன் கிரக சாந்தி ஹோமம், சரஸ்வதி ஹோமம், சுயம்வர கலாபார்வதி ஹோமம், சந்தான கோபால ஹோமம் என 200க்கும் மேற்பட்ட ஹோமங்கள் செய்யப்படுகின்றன.

அமாவாசை தினத்தில் யாகம்

அமாவாசை தினத்தில் யாகம்

பில்லி, சூன்யம், நோய், தரித்திரம் போன்றவை அகலவும் இழந்த பதவி கிடைக்கவும். ஐஸ்வர்யம் பெருகவும். ராகு, கேது தோஷம் நீங்கவும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி அமாவாசை தினத்தன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அமாவாசையை முன்னிட்டு நடக்க இருக்கிற மிளகாய் வற்றல் யாகம் வெகு விசேஷமானது. இதை மஹா உக்ர ப்ரத்யங்கிராதேவி ஹோமம் என்று சொல்லலாம். அதாவது ஸ்ரீப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் மஹா உக்ர ப்ரத்யங்கிராதேவி ஹோமம் நடைபெற உள்ளது.

மிளகாய் வற்றல் யாகம்

மிளகாய் வற்றல் யாகம்

பக்தர்களின் நலன் கருதியும், உலக நலன் கருதியும் ஒவ்வொரு அமாவாசையில் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் ‘நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. அமாவாசை யாகத்தில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மிளகு, உப்பு, 108 வகையான மூலிகைகள், காய்கறி வகைகள், பழ வகைகள், இனிப்பு மற்றும் கார வகைகள், பூசணிக்காய்கள், பட்டுப் புடவை, பல வகையான புஷ்பங்கள், 27 நட்சத்திர தேவதைகளுக்கு உண்டான தாவரங்கள், நெய், தேன் என, இன்னும் திரவியங்கள் இந்த ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. ப்ரத்யங்கிரா ஹோமத்தில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் 64 வகையான சாபங்கள் நிவர்த்தி ஆவதாக ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is the list as many Yagas as possible by looking at various sources Kanchi Paramacharya mentioned in one of his lectures that there are different types of Yagas (Fire Altar Ceremonies) and Yajnas.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற