For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுகாதி பண்டிகை: தெலுங்கு, கன்னட மொழி மக்கள் கோலாகல கொண்டாட்டம் - திருப்பதியில் சிறப்பு வழிபாடு

தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இந்த ஆண்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. யுகாதி என்ற சொல்லுக்கு சமஸ்க்ருதத்தில் யுகத்தின் ஆரம்பம் எனப் பொருள்.

Google Oneindia Tamil News

திருப்பதி: யுகாதி பண்டிகை இன்று ஆந்திரா, கர்நாடகாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை திருப்பதி தேவஸ்தான கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே பெருமாளை தரிசனம் செய்தனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் ஆகியவற்றில் யுகாதி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Recommended Video

    பேசும் மொழி வேறு…. வாழும் இடம் ஒன்று… ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் யுகாதி தின வாழ்த்துகள்!

    தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இந்த ஆண்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. யுகாதி என்ற சொல்லுக்கு சமஸ்க்ருதத்தில் யுகத்தின் ஆரம்பம் எனப் பொருள்.

     Ugadi celebrations: Tirumala Tirupati Devasthanam temples ugadi asthanam devotees special prayers

    புராணப் பின்னணியில் பார்த்தால் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கியவுடன் கலி யுகம் ஆரம்பித்தது. அந்த கலியுகத்தை, அதாவது, நாம் வாழும் யுகத்தை குறிக்கும் வண்ணம் யுகாதி என்ற சொல் சொல்லப்படுகிறது.

    இந்த யுகாதி ஆண்டு வசந்த காலத்தில் அமைந்துள்ளது. இது, வசந்தத்தின் பசுமையையும்,மகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டும் வண்ணம் பழைய நிகழ்வுகள் மறைந்து புதிய முயற்சிகளையும் எண்ணங்களையும் ஊக்குவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே புதுத் தொழில் ஆரம்பிப்பதை இந்த நாளில் செய்கிறார்கள்.

    யுகாதி நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் பஞ்சாங்கம் வாசிப்பார்கள். புது ஆண்டிற்கான பஞ்சாங்கத்தை பண்டிதர்களும், பெரியவர்களும் படிக்க அதை காதால் கேட்பது விசேஷம். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி பஞ்சாங்கம் வாசிப்பது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று யுகாதி பண்டிகை விழா நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் யுகாதி பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்றது.

    அதிகாலையிலேயே மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. புது வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனர்.

    சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆலயத்தில் யுகாதிப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    English summary
    Samvatsara Ugadi festival celebrated at Lord Venkateswara temple Tirumala on Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X