காதல் ராசிக்காரர்களே! காதலில் ஜெயிக்க என்ன செய்யலாம்? செய்யக்கூடாது ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக என்று இன்றைக்கு பலரும் மனதால் பாடும் நாள்தான் காதலர் தினம். காதலை வெளிப்படுத்த எத்தனையோ டெக்னாலஜி வந்து விட்டாலும் புருவத்தில் காதல் மொழி பேசி ரசிக்க வைக்கின்றனர் இளசுகள். எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் காதல் தொட்டு தடவி உரசி சென்றிருக்கும்.

காதல் என்பது என்ன என்று தெரியாமலேயே இன்றைக்கு பலரும் காதல் வயப்படுகிறார்கள். ஆண், பெண் இடையே நிகழும் ரசாயன மாற்றம்தான் காதல் என்கின்றனர் சிலர்.

காதல் ஒரு மகிழ்ச்சியான அனுபவம், நினைத்தாலே அந்த உணர்வு எலும்புவரை ஊடுருவி உற்சாகம் தருவது காதல். காதல் வந்தால் கையெழுத்து அழகாகும் என்ற வைரமுத்துதான் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருளை உருளும் என்று சொல்லியிருக்கிறார்.

எது எப்படியோ காதல் வயப்பட்டவர்கள் தங்களின் காதலில் வெற்றி பெற நிபுணர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர். காதலர் தினமான இன்று படிங்க... ரசிங்க... ஜெயிக்க காதலர்களே!

கடைசி வரை கூட வருவான்

கடைசி வரை கூட வருவான்

காதலில் விழுந்து உற்சாக நீச்சல் அடிப்பவர்களே... காதலின் அடிப்படையே நேர்மைதான். உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை. எந்த இடத்தில் நேர்மையில் விரிசல் விடுகிறதோ அந்த நொடியே காதலின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும்.

அனுபவித்து உணருங்கள்

அனுபவித்து உணருங்கள்

ஆண், பெண் இருவரின் உள்ளங்கள் நம்பிக்கை, நேசம், பாசம் ஆகிய இழைகளால் பிணைக்கப்படும்போது இருவரும் சேர்ந்து உயருகிறார்கள். நமக்கென்று ஒரு துணை இருக்கிறது என்ற நிலையை நினைக்கும்போது வரும் சந்தோஷம் அனுபவித்தால் மட்டுமே புரியக் கூடியது.

பரஸ்பரம் மரியாதை

பரஸ்பரம் மரியாதை

உடல் ஈர்ப்பாக மட்டுமல்லாமல் மன ஈர்ப்பு ஏற்படும்போதான் உண்மையான காதலை உணர முடியும். உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. உண்மையான காதல் என்பது மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும்.

புரிந்து காதலியுங்கள்

புரிந்து காதலியுங்கள்

காதல் பொறுமையானது, இரக்கமானது. பொறாமைக்கும், வெறுப்புக்கும் இங்கு இடமில்லை. பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என்று பல நல்ல விஷயங்கள் கலந்ததுதான் காதல். காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இருவரும் கலந்து ஆலோசியுங்கள்.

தோழமை காதல்

தோழமை காதல்

ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல். ஆனால் இன்றைக்கு ஆறுதலாக, பரிவாக, பாசமாக, தோழமையோடு யாராவது ஒரு பெண் பேசினால், உடனே அந்தப் பெண் மீது காதல் கொள்பவர்கள்தான் நிறையப் பேர் உள்ளனர். இன்னும் சிலருக்கு காதல் கொண்ட வேகத்திலேயே காமத்தை புகுத்துவதால் அது முறிந்து தோல்வியடைகிறது.

பாதுகாப்புணர்வு

பாதுகாப்புணர்வு

முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், போன்றவைதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும். காதலுக்காக உங்களின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

உண்மை காதல் ஜெயிக்கும்

உண்மை காதல் ஜெயிக்கும்

நேர்மையான வழியில் பரஸ்பரம் இணைந்து அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்வதன் மூலம் காதலில் வெற்றி கிடைக்கும். காதலில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலமாவிடலாம். உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலை, காதலர் தினத்தைக் கொண்டாடுங்க காதலர்களே!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Love that lasts is the result of partners embedding themselves in each other's brains in a positive way. Don’t lose your identity in an attempt to please you partner.Keep your own interests and spend some time apart.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற